தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ
கவிதைகள்!
பற்றவைத்ததும்
பூத்தது மகிழ்ச்சி!
பட்டாசு!
சத்தம் போட்டு
எழுப்பியது
பட்டாசுகள்!
தீபாவளி அதிகாலை!
கரியான காசுகள்
ஒளியேற்றின வாழ்க்கையை!
சிவகாசிபட்டாசு
தொழிலாளர்கள்!
பூத்து கொட்டியது
தொடுக்க முடியவில்லை!
தீபாவளி மத்தாப்புக்கள்!
அடங்கிப் போன
பறவைகள்!
பறந்து கொண்டிருந்தன!
தீபாவளி வாணங்கள்!
வெடிக்க கட்டுப்பாடு!
பிடிக்க வில்லை!
காற்று மாசு!
தொலைத்த பால்யம்!
மீண்டது
தீபாவளி வெடி!
வாட்சப் வாழ்த்துக்களில்
வதங்கிப் போனது
நிகழ்கால தீபாவளி!
வெடித்து சிதறிய
பட்டாசுகள்!
பிடித்து வைத்தது
பட்டாசு தொழிலாளர்
வாழ்க்கை!
திணிக்க திணிக்க
திளைத்துப்போனது
வயிறு!
தீபாவளி இனிப்புக்கள்!
வெடிகளின் வெளிச்சம்!
வெளிப்படுத்தியது
மழலைகளின் மகிழ்ச்சி!
இரண்டே மணி நேரம்
சுருங்கிப் போனது
பட்டாசு வியாபாரம்!
அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
அனைத்தும் சிறப்பு.
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
அருமை...
ReplyDeleteஇனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...