வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2
வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2 வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது? அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன. பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும் உண்டு
நீங்கள் நடத்தும் மின்னித்ழா? இதழை பெரியதாக்கி வாசிக்கும் வழிகளை சொல்லுங்கள்.
ReplyDeleteஸ்க்ரீனில் வைத்து கிளிக்கினால் ஜூம் ஆகிறது.ரைட் கிளிக் டபுள் கிளிக் செய்து ஜூம் செய்து வாசிக்கலாம்! நான் நடத்தும் மின்னிதழ்தான். வாசித்து கருத்து கூறுங்கள். முடிந்தால் படைப்புக்களை அனுப்பி வையுங்கள்! தேன்சிட்டு என்னும் மின்னிதழும் உள்ளது வாசியுங்கள்! நன்றி!
Deleteசுரேஷ் மின்னிதழ் நல்லா இருக்கு ஆனா பெரிசு பண்ண முடியலையே...
ReplyDeleteகீதா
சிறப்பு
ReplyDeleteபாராட்டுகள்
தமிழர்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கிடைப்பதில்லை என்று நினைத்திருந்த வேளையில் இந்த மின்னிதழ் சிறுவர்களுக்கே அதை கடத்த முயற்சி செய்திருப்பதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் அதே வேளையில் மெய்யஞான விஷ்யங்களும் விடுதலின் பால் எடுத்து இயம்பப்பட வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில் கில்லர்ஜி அவர்கள் நடத்திய இனைய அறிமுக கூட்டத்தில் உங்கள் ஹைகூ கவிதைகளை ஏறத்தாழ இரண்டு சிட்டிங்களில் பேசியதன் விளைவாகவே உங்கள் பதிவை தேடிப் பிடித்து வந்து சேர்ந்தேன் என சொல்லிக் கொண்டும், உங்கள் கவிதைகள் வேஊபாடுகளின் சம்நிலை மட்டுமல்ல சந்தமிகு சாரம்ச பெட்டகம் என்று சொல்லிக் கொள்ள விரும்பு அதே கணத்தில் உங்கள் பதிவுகள் அருமை என்றும் சொல்ல விரும்புகிறேன்.
ReplyDeleteசங்கரஹரி