தேவதை குழந்தைகள்!
குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள்...
சுரேஷ் ரொம்ப நல்லாருக்கு. இன்னிக்குத்தான் கணினில இதழைப் பார்க்க முடிஞ்சுச்சு. கணினில பார்க்கறப்ப நல்லாருக்கு மொபைலில் குமாரின் கதையைப் படிச்சுட்டேன்...இப்பவும் படிச்சுட்டேன்...நல்லாருக்கு
ReplyDeleteகுமாருக்கு வாழ்த்துகள்...உங்களுக்கும் வாழ்த்துகள் சுரேஷ்
துளசிக்கு உடம்பு சரியில்லை. நல்லானதும் வாசிப்பதாகச் சொன்னார்
கீதா
நன்றி!
Deleteஇதழ் சிறப்பாக உள்ளது. உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சார்!
Deleteவாழ்த்துகள் நண்பரே...
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநன்றி நண்பரே!
ReplyDeleteஅருமை நல்ல முயற்சி.
ReplyDelete