உறங்காத உண்மைகள்!
உறங்காத உண்மைகள் ! பொன்னேரியின் பஜார் வீதியின் இறுதியில் அமைந்திருந்த அந்த மேன்சனில் பரபரப்புக் கூடியிருந்தது . காரணம் அங்கு நிகழ்ந்துவிட்ட ஓர் மரணம் . வாசலில் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு போலீஸ் உள்ளே நுழைந்தது . மேன்சனின் நிர்வாகி தனபால் முன்னே வந்து , ” இன்ஸ்பெக்டர் சார் ! நான் தான் இந்த மேன்சன் நிர்வாகி ! உங்களுக்கு போன் பண்ணது நான் தான் !” என்றார் . மெலிந்த தேகம் கண்களில் பவர் கண்ணாடி முன் வழுக்கையும் பற்களில் வெற்றிலைக்கறையும் படிந்திருந்த அந்த மனிதரை உற்று நோக்கிய இன்ஸ்பெக்டர் பரசுராம் ,” நீ நிர்வாகின்னா ஓனர் யாருய்யா ?” என்று ஒருமையில் மரியாதையைக் கைவிட்டார் . பதவி தந்த அகங்காரம் அது . ” ஓனர் சென்னையிலே இருக்காருங்க ! லஷ்மி மில்ஸ் லஷ்மிநாராயணன் கேள்விப்பட்டிருப்பீங்களே ! அவருதான் இந்த மேன்சன் . கிட்ட்த்ட்ட ஒரு இருபது வருஷமா நான் தான் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருக்கேங்க !” ” ஓ … கொலை எந்த ரூம்லயா நடந்திருக்கு !” ” பர்ஸ்ட் ப்ளோர் 17 ம் நம்பர் ரூமுங்க ! செத்துப