Posts

Showing posts from 2019

தேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்

தேன்சிட்டு, டிசம்பர்-2019- மின்னிதழ்

பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை!

Image
பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை! டிகிரி முடிச்சுட்டு சுத்து வட்டாராத்துல இருந்த கம்பெனிக்கு எல்லாம் பைலோட அலைஞ்சி வேலை தேடி பார்த்தாச்சு! எங்களுக்கு தேவை கெமிஸ்ட்ரி படிச்ச ஆளுங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் தேவைப்படாதுப்பா! என்று விரட்டாத குறைதான்.  அப்பத்தான் டியுசன் எடுக்க ஆரம்பிச்சேன்.  அதுவும் நானா இல்ல! என் தங்கச்சிங்க கிட்ட அவங்களுக்கு தெரிஞ்சவங்க தங்களோட பசங்களை கொண்டு வந்து விட்டு சொல்லிக்கொடுக்க சொன்னாங்க எல்லாம் ஒரு பத்து பதினைஞ்சு பேரு சேர்ந்துட்டாங்க! வெட்டியா இருக்கமே அப்படியே நாலட்ஜை அப்படின்னு ஒண்ணு நமக்கு இருக்கா?! டெவலப் பண்ணிப்போம்னு உதவி பண்ண போனேன்.  அஞ்சாவது வரைக்கும் இருந்த டியுசன் நான் போனதும் அப்படியே டெவலப் ஆகி டெந்த் வரைக்கும் வளர்ந்துடுச்சு! என் தங்கச்சிங்க கல்யாணமாகி போயிடவும் நான் அதை அப்படியே கண்டினிய்யூ பண்ணிகிட்டேன். இதுக்கு இடையில எஸ்.டி.டீ பூத்தும் பெட்டிக்கடையும் வச்சு  கொஞ்ச நாள் ஓட்டினேன். ஆனா அது எனக்கு செட் ஆகலை போன பதிவுல சொன்னா மாதிரி நாலணா பிரச்சனை ஒண்ணு வந்துது. அதை இப்ப சொல்ல மாட்டேன். பதிவு தேத்தனும் இல்லே!      சரி

கரும்புப்பழம்! பாப்பாமலர்

Image
கரும்புப் பழம்! பொதிகை மலை காட்டுக்குள் நரிக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அந்த கூட்டத்தின் தலைவனாக ஒரு முட்டாள் நரி இருந்தது. அந்த நரி அவ்வப்போது காட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கும் வயல்வெளிகளுக்கும் சென்று மேய்ந்து வரும். அப்படி ஒரு சமயம் மேய்ந்து வருகையில் அது ஒரு கரும்புத்தோட்டத்தைக் கண்டது.     அது கரும்பு அறுவடைக் காலம் ஆதலால் கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்தனர். கரும்பை வெட்டி கட்டுக்களாக கட்டி அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர் விவசாயிகள். அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து நின்று வேடிக்கைப்பார்த்த நரி அவர்கள் சென்றதும் ஓசைப்படாமல் சென்று ஒரு கரும்புக் கிடையை கடித்தது. கடினமாக இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு தோலை கடித்து துப்பி கரும்புத்தண்டை கடிக்க ஆரம்பித்தது. இனிப்பின் சுவை அதற்கு மிகவும் பிடித்துப்போனது. அது தன்னை மறந்து கரும்பை சுவைத்துக்கொண்டிருக்கும் வேளையில் விவசாயிகள் வந்துவிட்டனர். அவர்கள் நரியை நையப்புடைக்க ஆரம்பித்துவிட விட்டால் போதும் என்று காட்டுக்குள் ஓடியது நரி. காட்டுக்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து தன் வலிகள் குறைந்தபிறகு மீண்ட

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 100.

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 100. 1.    பஞ்சாயத்து எலக்‌ஷன்லே நிற்கிறதுக்கு தனக்குத்தான் தகுதி இருக்குன்னு தலைவர் எப்படி சொல்றார்? இதுக்கு முன்னாடி அவர் “கட்ட பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருந்தாராம்! 2.    ஆறுகளை எல்லாம் இணைக்கணும்னு தலைவர் திடீர்னு போராட்டம் நடத்த ஆரம்பிச்சிட்டாராமே ஏன்? வெளிமாநில ஆத்துலே இருந்து மணல் கொள்ளையடிக்கிறது கஷ்டமா இருக்காம்! 3.    எல்லா டிரிட்மெண்டும் முடிஞ்சு நார்மல் ஆகியும் இன்னும் என்னை ஏன் டிஸ்சார்ஜ் பண்ண மாட்டேங்கிறீங்க டாக்டர்?         இந்த பெட்டுக்கு இன்னும் புது பேஷண்ட் கிடைக்கலையே? 4.    அந்த டாக்டர் ஆள்மாறாட்டம் பண்ணி டாக்டர் ஆனவர்னு எப்படி சொல்றே? பேஷண்ட் மாறினாலும் பிரிஸ்ப்கிர்ஷனை மாத்தமாட்டேன்னு அடம்பிடிக்கிறாரே! 5.    எதிரி உங்களை வென்றே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மன்னா!   என் இரண்டு கால்களிலும் வலுவிருக்கும் வரை அது நடக்கவே நடக்காது என்று அவனுக்கு தெரியாது அமைச்சரே! 6.    மாப்பிள்ளை ரொம்ப ”டிப் டாப்”பா இருப்பார்! பொண்ணு எப்படி இருக்கும்? பொண்ணு எப்பவுமே “டிக் டாக்” லே இருக்கும்!

எக்ஸ்கியுஸ்மீ! கொஞ்சம் பாராட்டுங்கள் ப்ளீஸ்!

Image
பாராட்டுங்கள் பாராட்டப் பெறுவீர்கள்! இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது சந்திக்கிறது. மற்றவர்கள் பாராட்டுக்கு ஏங்கும் அது வசை கேட்கும் போது சுருங்கி விடுகிறது. எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தில் இருக்க மனிதன் மட்டுமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் ஏங்குகிறான். ஆறறிவு படைத்த மனிதனின் ஆசையே பாராட்டு.        ஒவ்வொரு சின்ன செயலையும் ஒருவித எதிர்பார்ப்புடனே செய்யும் மனிதன் அதற்கான விளைவுகளை எதிர்நோக்கியிருக்கிறான். அந்த விளைவு நேர்மறையாக இருப்பின் மிகவும் மகிழ்கிறான். எதிர்மறையாக இருப்பின் மனம் நோகிறான். ஆனால் பாராட்டோ எதிர்ப்போ அவன் விரும்புகிறான்.     தன்னுடைய ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கவனிக்கப்படுகிறது என்பதே அவனுக்கு ஒரு ஆர்வத்தை தருகிறது. ஒரு சிறுவன் அல்லது சிறுமி பள்ளியில் தேர்வில் முதலாவதாக வந்தால் பாராட்ட படுகிறார்கள்.அதே சமயம் தோல்வி அடையும்போது வசைபாடப்படுகிறார்கள்.    வாழ்க்கை என்பது வெற்றிகளை மட்டுமே கொண்டிருக்க கூடியது அல்ல! வெற்றிகளும் தோல்விகளு

சூப்பர் தும்பி! பகுதி 2.

Image
சூப்பர் தும்பி! பகுதி 2. ”டிங் டிங்” என பள்ளி மணி அடித்ததும் ஓட்டமாய் ஓடிவந்தனர் மாணவர்கள். தன் பையை முதுகில் மாட்டியவாறு வெளியே வந்த முகிலை வழிமறித்தான் முத்து. “ஏய் முகில் நில்லுடா! இன்னமோ தும்பி பிடிக்க கூடாது! பாவம்னு சொன்னியே இப்ப பாரு! என்று தன் பாக்கெட்டில் கை விட்டான். அவனது கையில் இப்போது ஒரு தீப்பெட்டி இருந்தது.     தீப்பெட்டியின் நுனியில் சிறு நூல் இருந்தது. அந்த நூலைப்பிடித்தவாறு தீப்பெட்டியை திறந்தான். “ஙொய்” என்று ரீங்காரம் இட்டவாறு ஒரு சிறு வண்டு பறக்கத் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் கட்டியிருந்த கயிறைத்தான் முத்து பிடித்திருந்தான்.        “டேய்! பாவம்டா! விட்டுரு!”    “தோடா! ஈசியா சொல்லிட்டாரு! விடச்சொல்லி! இதைப்பிடிக்க நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?”     “விளையாட எவ்வளோவோ இருக்கு? ஏண்டா இப்படி புழுப்பூச்சி வண்டுகளை தொல்லை பண்றே?”     “ எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு? உன்னாலே என்ன செய்ய முடியும்? இப்ப தட்டிவிடு! இந்த வண்டை காப்பாத்து பார்க்கலாம்!”     முகில் முகவாய் கட்டையை தடவிக்கொண்டான். நேற்று தும்பி ஒன்றை காப்பாற்றப்போய் வாங்கி

சின்னப்பூக்கள். சிறுவர் மின்னிதழ். நவம்பர்-2019

அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

Image
அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்! தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒருவனுக்கு எத்தனைக் கோடி பொன்கொடுத்தாலும் அவன் மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டு இன்னும் கிடைக்காதா என்று ஏங்கும். அதே சமயம் அன்னத்தை தானமாக அளிக்கையில் வயிறுடன் மனதும் நிறைந்து திருப்தி அடையும். போதும் என்று மகிழ்வாக உரைப்பான். ஆதாலால்தான் அன்னதானம் சிறப்பாக சொல்லப்படுகின்றது.    உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.     ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் அன்னாபிஷேகத் திருநாள் ஆகும். சந்திரன் அன்றுதான் தனது பதினாறு கலைகளும் ஒளிவீச பூரணச் சந்திரனாக பரிமளிப்பான். அன்றைய தினம் சிவனுக்கு