என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!
என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக
அசத்துகின்றீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteValuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home
ReplyDelete