Posts

Showing posts from August, 2023

சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.

Image
  சிரிச்சுக்கிட்டே இருங்க ! பகுதி 5.   1.        மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் எல்லாம் தங்களோட குமுறலைக் கொட்டித்தீர்த்திட்டாங்களாமே!     அட நீ வேற   கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் கொட்டிட்டு போயிட்டாங்க!       2.    உண்ணாவிரதப் போராட்டத்துலே கலந்துகிட்டவங்க எல்லாம் ஹாஸ்பிடலுக்கு எதுக்கு வந்திருக்காங்க ?    ” அஜீரனக் கோளாறு ” ஏற்பட்டிருச்சாம் !   3.        மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே ... ?       ஆம் ...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம் !     4.      எதிரிக்கு பயத்தைக் காட்ட வேண்டும் அமைச்சரே …!   நீங்கள் “அபயம்” கேட்டு அவன் முன் நிற்கையில் அவனுக்கு நன்றாக காண்பித்துவிடலாம் மன்னா!        5.    சந்திரனில் விக்ரம் லேண்ட் ஆகிருச்சுன்றதை நம்ம தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டார் !    எப்படி சொல்றே ? விரைவில் செவ்வாயிலும்   விக்ரம் ரிலீஸ் பண்ண மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக அறிக்கை விட்டிருக்காரே !   6.    தலைவருக்கு செஸ் போட்டியிலே ஆர்வம் அதிகம் !   அதுக்கா

இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி! படித்ததும் பிடித்ததும் முகநூல் பகிர்வு

Image
  எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!! புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது. நாற்காலி, மேசை எதுவும் இல்லை. திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் பசியாறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான். 84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட பு

உறுதி! ஒருபக்க கதை

  உறுதி !                                                                     நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு நாற்பது நாட்களாய் குடிக்காமல் இருந்த உறுதி காணாமல் போயிருந்தது . நான் திருந்திட்டேன் காமாட்சி ! இனிமே டாஸ்மாக் பக்கம் தலைக்கூட வைச்சி படுக்கமாட்டேன் ! இப்போத்தான் சந்தோஷமா இருக்கேன் ! தெம்பா இருக்கேன் ! இனிமே நம்ம குடும்பம் நல்லா இருக்கப்போவுது ! என்று சொல்லிக்கொண்டிருந்த மனோகரனின் திடம் காணாமல் போயிருந்தது .   இதோ நாளைக்கு கடை திறக்கப் போகிறார்கள் . கடை முன் நிறைய க்யு நிற்கும் . விடியற்காலையிலே முதல் ஆளாய் போய் கடைவாசலில் நிற்க வேண்டும் . கை பரபரத்தது . கால்கள் நடுங்கின . மூளை முழுதும் குடி நிறைந்திருந்தது .   ‘ என்னங்க ? ஒரே பரபரப்பா இருக்கீங்க ?” காமாட்சி கேட்க மென்று விழுங்கினான் . “ ஒண்ணுமில்லே காமாட்சி !” நீ போ ! என்றான் . அப்போது அவன் மகள் மாலதி அருகே வந்தாள் .   “ அப்பா ! ஒண்ணு சொல்லட்டுமா ?”     “ சொல்லும்மா !” ” ஒரு பொருள் கிடைக்காத போது அதை வாங்கி அனுபவிக்காம இருக்கிறதுக்கு பேர் உறுதி இல்லை ! அ

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
  தளிர் ஹைக்கூ கவிதைகள்!   கும்மிருட்டு காவலுக்கு நிற்கிறது அய்யனார் சிலை!   வெடிச்சத்தம் பீதியில் தெருநாய்கள்! கோயில் திருவிழா   வேண்டுதலுக்காக உயிரைக்கொடுத்தது பலி ஆடு!   சூடான தேநீர் குளிர்வித்தது யாசகனின் பசித்தீயை!   வேகமாய் பயணிக்கிறது காலத்தோடு சாலையில் வாகனங்கள்!   கோயில் மணியோசை எழுப்பி விடுகிறது காகத்தின் பசியை!   துளைத்து எடுத்தது ரசித்துக்கொண்டிருந்தான் காதலியின் பார்வை!   கோயில் முழுக்க பக்தர்கள்! காலியாக இருக்கிறது பிரசாத கூடை!   பனிவிழும் இரவு குளிரில் நனைகிறது விரையும் வண்டிகள்!   திரை போட்டதும் கலைத்தது காற்று! வான்மேகம்!   ஒளித்து வைத்தது வெப்பத்தை மரத்தின் நிழல்!     கால்நடைகளின் பசி   தீர்ந்ததும் காய்ந்த்து   மேய்ச்சல் நிலம்!     நீண்ட வரிசை   தீரவில்லை பசி   அன்னதானக்கூடம்!     உடைந்து போனது   குழந்தையின் மகிழ்ச்சி! வெடித்தது பலூன்!   புல்லாங்குழல் விற்பவன் விட்டுச்செல்கிறான் ஓசையை!   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செ