தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 

கட்டிக்கொண்டதும்  

விட்டுப்போனது கவலைகள்!

குழந்தை

 



கருத்தவானம்
!

உதித்தது நிலா!

கூந்தலில் மல்லிகை!

 

 மேகம் சூழ்ந்த வானம்

வெப்ப மூச்சு விட்டது

பூமி!


எட்டிப்பார்த்தும்

நுழையமுடியவில்லை உணவகத்தில்

ஏழையிடம் பசி.



 வெப்பம் வாட்டுகையில்

கூட்டமாய் கிளம்பின

மேகங்கள்!


நிறைந்திருந்தது

பிம்பங்களை முழுங்கிய

குளம்!


எவ்வளவு போட்டாலும்

நிரம்ப மறுக்கிறது

பிச்சைப்பாத்திரம்!


மழை விட்ட இரவு

விடாமல் இசைத்தன

தவளைகள்!



வெள்ளை உடை

துல்லியமாய் காட்டிக் கொடுத்தது

அழுக்கு!


துளிர் விடும் சிந்தனைகள்

துரத்தி அடித்தது

பேரிரைச்சல்!


பச்சைவயல்

இச்சை கொண்டன

பூச்சிகள்!


ஓசைபோட்டாலும்

ஆசையோடு ஆட்டம்!

அருவி!


பின் குறிப்பு}   உடல் நலம் பாதிக்கப்பட்டமையால் ஒருவாரம் விடுமுறை எடுத்தேன். இனி வழக்கம் போல் பதிவுகள் தொடரும். 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவித்துச் செல்லலாமே! நன்றி





Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2