சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.

 

சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.

 


1.     மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் எல்லாம் தங்களோட குமுறலைக் கொட்டித்தீர்த்திட்டாங்களாமே!

    அட நீ வேற  கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் கொட்டிட்டு போயிட்டாங்க!

   

2.   உண்ணாவிரதப் போராட்டத்துலே கலந்துகிட்டவங்க எல்லாம் ஹாஸ்பிடலுக்கு எதுக்கு வந்திருக்காங்க?

   அஜீரனக் கோளாறுஏற்பட்டிருச்சாம்!

 


3.     மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே...?
     
ஆம்...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம்! 

 

4.    எதிரிக்கு பயத்தைக் காட்ட வேண்டும் அமைச்சரே…!

  நீங்கள் “அபயம்” கேட்டு அவன் முன் நிற்கையில் அவனுக்கு நன்றாக காண்பித்துவிடலாம் மன்னா!

    

 


5.   சந்திரனில் விக்ரம் லேண்ட் ஆகிருச்சுன்றதை நம்ம தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டார்!

   எப்படி சொல்றே?

விரைவில் செவ்வாயிலும்  விக்ரம் ரிலீஸ் பண்ண மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக அறிக்கை விட்டிருக்காரே!

 


6.   தலைவருக்கு செஸ் போட்டியிலே ஆர்வம் அதிகம்!

  அதுக்காக தேர்தல்ல தோத்துட்ட பிறகு திரும்பவும்  டை-பிரேக்கர் சுற்று வைக்கணும்னு சொல்றது நல்லா இல்லை!

 

7.    என்னப்பா சர்வர்  தோசை இப்படி கருகிப்போய்  ஓட்டை ஒடிசலா இருக்கு?

    இது புதுசா வந்திருக்கிற “மூன் தோசை” சார்!

 

8.   குழி பறிப்பதில் எதிரி நாட்டு அரசன் மகா கெட்டிக்காரனாக இருக்கிறான் அரசே!

  இருக்கட்டுமே! நான் தான் பதுங்கு குழி பறிப்பதில் கெட்டிக்காரனாயிற்றே!

 

9.   என்னது எதிரி இனி மயிலில் செய்தி அனுப்பச் சொல்கிறானா?

     மன்னா! அது மயில் இல்லை! மெயில்!

 


10. நாட்டு மக்கள் நாம் அதிகமாக வரிபோடுவதாகத் தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள் மன்னா?

   அந்த தூற்றலுக்கும் ஒருவரி போட்டுவிடுங்கள் அமைச்சரே!

 

11.  தலைவரை எடக்கு மடக்கா கேள்வி கேட்ட  நிருபர் வாயாடைச்சுப்போயிட்டாராமே எப்படி?

    மீந்து போன புளியோதரையை வாயிலே திணிச்சிட்டாங்களாம்!

 


12.  தலைவருக்குத் தமிழ் சரியாப் பேச வராது!

   அதுக்காக அவருக்கு “மிரட்சித் தமிழர்”னு பட்டம் கொடுக்கிறது எல்லாம் நல்லா இல்லை!

 

13.   ஒருகோடி ரூபாய்க்கு செக் எழுதி உண்டியல்ல போடறியே உன் அக்கவுண்ட்ல அவ்வளோ பணம் இருக்கா?

   5 கோடி ரூபாய் வேணும்னு வேண்டிகிட்டு போட்டிருக்கேன்! வந்ததும் ஒரு கோடியை கடவுள் எடுத்துக்கட்டும்!

 


14.   ரொம்ப நாளா ஒரு கேஸ் இழுத்துக்கிட்டே இருக்குதுன்னு சொன்னியே என்ன கேஸ் அது?

   சீரியல் நடிகை தற்கொலை கேஸ்தான்!

 

15.  கடல் போருக்கு மன்னர் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்?

     எதிரிவிரட்டி அடிக்கும்போது  ஓடிவர முடியாதே!

 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 

 

Comments

  1. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  2. அனைத்தும் மிகவும் ரசித்து படித்தேன் நண்பரே

    ReplyDelete
  3. ஒரு கோடியை கடவுள் எடுத்துக்கட்டும்! Super !

    ReplyDelete

  4. 7. என்னப்பா சர்வர் தோசை இப்படி கருகிப்போய் ஓட்டை ஒடிசலா இருக்கு?

    இது புதுசா வந்திருக்கிற “மூன் தோசை” சார்!
    இதே மாதிரி நானும் ஒண்ணு எழுதி அனுப்பி இருக்கேன்.தகவலுக்கு...நல்ல ஜோக்

    ReplyDelete
  5. அய்யன்மீர் வணக்கம், எனக்கு நிரைய கவிதை சிந்தனைகள் வரும் ஆனால் அதை முறைப்படுத்தி எழுத்தாக்க வலிமுறைகல் அரியேன். கீழே என்னுடைய கவிதை சிந்தனை ஒன்று அதை திருத்தி நீங்கள் உங்கள் இதலிலோ அல்லது அச்சு ஊடகத்திள் எதிழாவது பிரசுறித்தால் மகிள்வேன். இணி கவிதை: காட்டுவெளி படிவங்கல் வேட்டு விட்டு நிற்கிறதோ கோட்டு போட்ட கோமன் உனக்கு கொடிவைக்க எங்கல் மரமா ? தறமாட்டோம் அம்மரத்தை செய்யமாட்டோம் சமரசத்தை சாட்டைக் குச்சி தந்து காளையை விரட்டமாட்டோம் காட்பாடி தோட்டத்திலே காயகணிகள் விலைய வைப்போம். காக்கை குருவிக்கும் கூடூகட்ட இடம் தருவோம் அனிலுக்கு கணி தருவோம் பள்ளிபசங்க பறித்தாலும் அடிக்க மாட்டோம் காட்டுஆனை வந்து அளித்தாலும் அசறாமல் மீண்டும் பயிரிடுவோம் அதைத் தவிர வேறென்ன தெரியுமய்யா ? வெட்டிவேலை என்று புது தலைமுறைகல் போனாலும் கட்டிகாப்போம் எங்கல் பாரம்பறியத்தை. வித்தை அறிந்தவர்கல் விளையாட்டாய் செய்வதில்லை எதையுமே நாங்கள் குட்டை மனிதர்கல் தான் ஆனால் கூர்புத்தி குடும்பினிகள் கண்டீர் எமை வெந்சங்கின் நாதமென,
    ”செங்குருவி”சித்திரராமன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2