Posts

Showing posts from January, 2021

புத்தியா சொல்றே? பாப்பா மலர்

Image
  புத்தியா சொல்றே? கணேஷ் ஆர்வமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் நண்பன் ராஜா அங்கு வந்து அவனருகில் அமர்ந்தான். என்ன கணேஷ்! ரொம்ப மும்முரமா படிச்சிகிட்டு இருக்கே? அரையாண்டு தேர்வுகள் நெருங்கிடுச்சே! அதுக்கு தயார் ஆகிறாயா? என்று வினவினான் ராஜா.     ஆமாண்டா! அதுக்குத்தான் முழுவீச்சில் படிச்சிகிட்டு இருக்கேன்! இந்த முறை உன்னை விட அதிக மதிப்பெண் வாங்கிடனும்னு உறுதியா இருக்கேன்!   ரொம்ப சந்தோஷம்டா! படிப்பில இப்படி போட்டி இருந்தாத்தான் நல்லா படிக்கணுங்கிற உத்வேகம் வரும். யாரு முதல் மதிப்பெண் எடுக்கிறதுன்னு ஒரு சவால் இருக்கும். ஆமா! நீ எந்த சப்ஜெக்ட் இப்ப படிச்சிகிட்டு இருக்கே! நானும் ரிவிசன் பண்ண உதவறேனே! என்றான் ராஜா.    கணேஷ் ராஜாவை மிதப்புடன் பார்த்தான். ராஜா! நீ நினைக்கிறா மாதிரி நான் இப்ப எந்த சப்ஜெக்டையும் படிக்கலை ஆனா அதை விட முக்கியமான ஒண்ணை படிச்சிகிட்டு இருக்கேன்!    அப்படி என்ன முக்கியமானது அது!   இதுதான்! என்று கணேஷ் நீட்டிய புத்தகத்தை வாங்கி பார்த்தான் ராஜா! அது பரிட்சையில்  முதல் மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற புத்தகம். அதை பார்த்துவிட்டு ராஜாவிற்கு அழுவதா சிரிப்

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
  தளிர் ஹைக்கூ கவிதைகள்!   வெயில்! தடுத்தாட்கொண்டது மரம்.     வாய் நிறைந்தும் வயிறு நிறையவில்லை விவசாயிக்கு! குறைந்த கொள்முதல் விலை!     இருளில் ஒளிந்த சாலைகள்! காட்டிக் கொடுத்தன! பிரதிபலிப்பு பட்டைகள்!   மிதிபட்டதும் சத்தம் போட்டன! உலர்ந்த சறுகுகள்!   வற்றிய பால்! உயிரைவிட்டது! பழுத்த இலை!     காட்டிக் கொடுத்து சம்பாத்யம்!   யார்வாயிலும் விழவில்லை!   தேடுபொறிகள்!     பச்சை வயல்வெளிகள்! குறுக்கே முளைத்து வளர்ந்திருந்தன மின் கம்பங்கள்!   புகுந்தவீட்டில் விளக்கேற்றின மின்மினிப்பூச்சிகள் இரவில் ஒளிர்ந்த மரங்கள்   சத்தமிடும் வண்டுகள் அமைதி இழந்தது இரவுப்பொழுது     இறங்கிவந்ததும் குளிர்ந்து போனது பூமி வெயில்!   தூரமாய்ப் போனவிளக்குகள் நெருங்கி வந்தது இருட்டு.   வெப்பம் சுமந்த மரங்கள் பெற்றெடுத்தன நிழல்.    

தித்திக்கும் தமிழ்! பாகம் 2 பகுதி 1 பேய் பிடித்திட்ட தூதன்!

Image
  தித்திக்கும் தமிழ்! நம் தமிழ் பாரம்பரியத்தில் பெண் பார்க்கும் படலம் என்பது பழங்காலத்தொட்டு நடைமுறையில் உள்ளது. நல்ல பெண்கள் உறவிலோ அசலிலோ இருப்பது அறிந்தால் பெற்றோர் தம் மகனுக்கு மணமுடிக்க பெண்ணுக்குத் தெரிந்தவர் வாயிலாகவோ உறவினர் வாயிலாகவோ தூதனுப்பி தம் பிள்ளையின் தகுதிகளை எடுத்துக் கூறி பெண்கேட்பது வழக்கமான ஒன்று. அப்புறம் பெண்பார்க்கும் படலம் சொஜ்ஜி, பஜ்ஜி எல்லாம் அரங்கேறும். இன்றைய அவசரயுகத்தில் ஆன்லைன் திருமணங்கள் மேட்ரிமோனியல்கள் மூலம் நடைபெற்றாலும் பாரம்பரியப்படி இப்படி பெண்கேட்டு தூது போவது இன்னும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி தூது போகின்றவர்பாடு பெரும்பாலும் கஷ்டம்தான். திருமணமாகி அவர்களிடையே ஏதாவது மனஸ்தாபங்கள் வந்துவிட்டால் தூது போனவரைத்தான் குறை சொல்வார்கள். அந்த பாவி மனுஷன் தான் என் பொண்ணை பாழுங்கிணத்துலே கொண்டு தள்ளிட்டான்.. அவன் மட்டும் இல்லைன்னா என் பொண்ணை நல்ல இட்த்திலே கொடுத்திருப்பேன் என்று காது படவே ஏசுவார்கள். பிள்ளைவிட்டிலும் அவர்கள் சொல்லித்தான் நாம் தூதுக்குச் சென்றிருந்தாலும் “இந்த பயலுக்கு எல்லாம் தெரிஞ்சும் நம்மை கழுத்தறுத்துட்டான்!

அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்!

  amazon அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள் தளிர் வலைதளத்தில் நான் எழுதிய சில பதிவுகளை மின் நூலாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. சமீபத்தில் அந்த எண்ணத்தை செயலாக்கி அமேசான தளத்தில் இந்த மாதத்தில் 5 மின் நூல்களை வெளியீடு செய்துள்ளேன்.  ஏற்கனவே அமேசான் தளத்தில் நான்கு மின் நூல்களை கடந்த வருடங்களில் வெளியீடு செய்துள்ளேன்.  தளிர் வலைப்பூவில் பெரிதும் வரவேற்பு பெற்ற இலக்கண இலக்கிய பதிவான உங்கள் தமிழ் அறிவு எப்படி என்ற பதிவுகளை கொஞ்சம் திருத்தி கொஞ்சம் இலக்கணம், கொஞ்சும் இலக்கியம் என்ற தலைப்பிலும் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து அன்புடை நெஞ்சம் என்ற தலைப்பிலும்  சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை “ராஜாவை ஜெயிச்ச குருவி” ”எலிவளர்த்த சிங்கராஜா” என்ற தலைப்புகளில் இரண்டு நூலாகவும். நான் எழுதிய ஆன்மீக கட்டுரைகளை தொகுத்து வினைகள் தீர்த்து குறைகள் போக்கும் விரதங்கள் என்ற தலைப்பிலும் அமேசான் தளத்தில் வெளியீடு செய்துள்ளேன்.  மின்னூல்களின் அதிக பட்ச விலையே ரூபாய் 100 ஆக நிர்ணயித்துள்ளேன். தளிர் தளத்தின் வாசக அன்பர்கள் இந்த மின்னூல்களை அமேசான் தளத்தில் வாங்கி வாசித்து

நம்பிக்கை! ஒரு பக்க கதை

  நம்பிக்கை!   ஒருபக்க கதை!  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.   காலை வேளையில் வாட்சப்பில் மூழ்கியிருந்த கணவன் கோபியிடம், “என்னங்க நம்ம பொண்ணுக்கு காலேஜ்ல அவ கேட்ட கோர்ஸ் கிடைக்கணும்னு கோயிலுக்குப் போய் சாமிகிட்டே வேண்டிகிட்டு வருவோம்! சீக்கிரம் குளிச்சு ரெடியாகுங்க!” என்றாள் ரேவதி.  “என்ன இது சுத்த பேத்தலா இருக்கு! சாமியா கோர்ஸை அலாட் பண்ணப் போறார்?” தோ பார்! நீ வேணா இதையெல்லாம் நம்பிகிட்டு கோயில் குளம்னு சுத்து! என்னைக் கம்ப்பெல் பண்ணாதே!”   ”என்னங்க இது! நம்ப பொண்ணுக்கு அவ விரும்புன கோர்ஸ் கிடைக்கணும்னு ஒரு வேண்டுதல் பண்ணா என்ன குறைஞ்சா போயிருவீங்க? இப்படி நாத்திகம் பேசிக்கிட்டு இருக்கீங்க?”  “பின்னே! அந்த கடவுள் என்ன காலேஜ் ப்ரின்சியா? நாம வேண்டின உடனே கோர்ஸ் அலாட் பண்ண? “ எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை!”இதெல்லாம் வீண் வேலை! “  ”வாட்சப்லே ஒரு மேசேஜ் வருது இதை பத்து பேருக்கு பார்வேர்ட் பண்ணா நூறு ரூபா ரீசார்ஜ் ஆகும். லெப்ட் பக்கம் இருக்கிற பூ ரைட் பக்கம் மாறும்னு” அதை பார்வேர்ட் பண்றீங்க இல்லே?”  ”ஆமா அதுக்கென்ன இப்ப?” ”எந்த நம்பிக்கையிலே அதை பண்றீங்க? சொல்லப் போனா இது நடக்காதுன்னு உ