அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்!
amazon அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்
தளிர் வலைதளத்தில் நான் எழுதிய சில பதிவுகளை மின் நூலாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. சமீபத்தில் அந்த எண்ணத்தை செயலாக்கி அமேசான தளத்தில் இந்த மாதத்தில் 5 மின் நூல்களை வெளியீடு செய்துள்ளேன்.
ஏற்கனவே அமேசான் தளத்தில் நான்கு மின் நூல்களை கடந்த வருடங்களில் வெளியீடு செய்துள்ளேன்.
தளிர் வலைப்பூவில் பெரிதும் வரவேற்பு பெற்ற இலக்கண இலக்கிய பதிவான உங்கள் தமிழ் அறிவு எப்படி என்ற பதிவுகளை கொஞ்சம் திருத்தி கொஞ்சம் இலக்கணம், கொஞ்சும் இலக்கியம் என்ற தலைப்பிலும் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து அன்புடை நெஞ்சம் என்ற தலைப்பிலும்
சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை “ராஜாவை ஜெயிச்ச குருவி” ”எலிவளர்த்த சிங்கராஜா” என்ற தலைப்புகளில் இரண்டு நூலாகவும். நான் எழுதிய ஆன்மீக கட்டுரைகளை தொகுத்து வினைகள் தீர்த்து குறைகள் போக்கும் விரதங்கள் என்ற தலைப்பிலும் அமேசான் தளத்தில் வெளியீடு செய்துள்ளேன்.
மின்னூல்களின் அதிக பட்ச விலையே ரூபாய் 100 ஆக நிர்ணயித்துள்ளேன். தளிர் தளத்தின் வாசக அன்பர்கள் இந்த மின்னூல்களை அமேசான் தளத்தில் வாங்கி வாசித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் கொஞ்சம் இலக்கணம் கொஞ்சும் இலக்கியம் நூல் அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியிலும் பங்கெடுக்க உள்ளது. தளிர் வலைதளத்தின் நண்பர்கள் இந்த மின்னூலை வாங்கியும் வாசித்தும் தளிரின் இந்த சாதனைப் பயணத்தில் ஓரடி முன்னேற ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
அனைவருக்கும் அன்பின் நன்றிகள். மின்னூல்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
அமேசான் நன்றி.
மனம் நிறைந்த வாழ்த்துகள். வாசிப்பேன்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் மின்னூல் வெளியீடுகள்.
ReplyDelete