தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
வெயில்!
தடுத்தாட்கொண்டது
மரம்.
வாய் நிறைந்தும்
வயிறு நிறையவில்லை
விவசாயிக்கு!
குறைந்த கொள்முதல்
விலை!
இருளில் ஒளிந்த சாலைகள்!
காட்டிக் கொடுத்தன!
பிரதிபலிப்பு பட்டைகள்!
மிதிபட்டதும்
சத்தம் போட்டன!
உலர்ந்த சறுகுகள்!
வற்றிய பால்!
உயிரைவிட்டது!
பழுத்த இலை!
காட்டிக் கொடுத்து சம்பாத்யம்!
யார்வாயிலும் விழவில்லை!
தேடுபொறிகள்!
பச்சை
வயல்வெளிகள்!
குறுக்கே முளைத்து
வளர்ந்திருந்தன
மின் கம்பங்கள்!
புகுந்தவீட்டில் விளக்கேற்றின
மின்மினிப்பூச்சிகள்
இரவில் ஒளிர்ந்த மரங்கள்
சத்தமிடும் வண்டுகள்
அமைதி இழந்தது
இரவுப்பொழுது
இறங்கிவந்ததும்
குளிர்ந்து போனது பூமி
வெயில்!
தூரமாய்ப் போனவிளக்குகள்
நெருங்கி வந்தது
இருட்டு.
வெப்பம் சுமந்த மரங்கள்
பெற்றெடுத்தன
நிழல்.
அனைத்து ஹைக்கூ கவிதைகளும் நன்று. பாராட்டுகள்.
ReplyDelete