Posts

Showing posts from December, 2012

தளிர் சென்ரியூ கவிதைகள்! 2

Image
  நல்லது சொன்னதற்கா நடுக்கடலில் தள்ளினார்கள்? வள்ளுவர் சிலை! பிடித்தவனை பிடித்துக்கொண்டார்கள் சிகரெட்! உயிர்களை கொன்று ஜடங்களை நட்டார்கள் பாலம் நாடோடிகளின் நீண்ட படுக்கையானது நடைபாதை!   தாய்ப்பால் விலை போக தள்ளிக்கட்டப்படுகிறது கன்று! காசைக் கொடுத்து சிறையில் அடைக்கப்படுகின்றன பிள்ளைகள் நர்சரி பள்ளி அஹிம்சாவாதியின் கையில் தடி! காந்தி! அஹிம்சையை போதித்தவனுக்கு இன்னுமா ஹிம்சை! தபால் தலையில் காந்தி! ஊற்றிக் கொடுத்து பீற்றிக் கொள்கிறது அரசு டாஸ்மாக். கான்க்ரிட் வயல்களில் காணாமல் போனது பசுமை! வெட்ட வெட்ட வளர்கிறது மின்வெட்டு! நகரில் புகுந்த மிருகங்கள்! நாசமானது மான்! இரவிலும் ஒளிர்ந்தது சூரியன்! சோலார் விளக்கு! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3 கடந்த இரண்டு பகுதிகளில் தமிழ் நூல்களை எழுதியவர்கள் நூல் விளக்கம், பகுதிகள் சிறப்பு பெயர்கள் போன்றவற்றினை பார்த்தோம். இன்று சில தூய தமிழ் சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். உங்களோடு சேர்ந்து நானும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! நல்ல தமிழ் அறிவோம்! உனக்கு பையனா பொண்ணா?  வயசு என்னா? என்று பொதுவாக கேட்பதுண்டு அந்த வயசு என்பதற்கு தூய தமிழ் சொல் என்ன தெரியுமா?  அகவை பொறுத்தவர் பூமி ஆள்வார் என்று ஒரு பழமொழி உண்டு! அந்த பூமியை அகிலம் என்று நல்ல தமிழில் அழைக்கலாம். வாழை மரம் கட்டாமல் எந்த விசேஷமும் நடப்பது இல்லை! தன்னையே தரும் வாழைக்கு தமிழில் அசோகு என்றொரு பெயர் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? குறளோவியம் படைத்தவர் கலைஞர் என்றும் அவரது தாயார் பெயர் அஞ்சுகம் என்பதும் தமிழர்கள் பலர் அறிந்திருப்பார்கள் அந்த அஞ்சுகம் என்பது என்ன தெரியுமா? கிளியைத்தான் நல்ல தமிழில் அஞ்சுகம் என்று  அழைக்கிறோம். சிலிண்டர் விற்கும் விலைக்கு விறகு அடுப்புக்கே போய்விடலாம் என்று நினைத்தாலும் விறகும் இன்று பொன் ப

நான் போக மாட்டேன்! பாப்பாமலர்!

Image
நான் போக மாட்டேன்!  பாப்பாமலர்! விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து விட்டன. எல்லா மாணவர்களும் புதிய வகுப்புகளுக்கு சென்ற குஷியில் மகிழ்ச்சியாக பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் முகுந்தன் மட்டும் சோகமாக அமர்ந்திருந்தான். “பள்ளி” என்றாலே பாகற்காயாக கசந்தது அவனுக்கு. இனி நமக்கு விடுதலை! பள்ளிக்கூடம் போக வேண்டாம். அம்மா கூட வேலைக்கு போகலாம். ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.    ஆனால் அவன் நினைப்பை கெடுப்பது போல அவன் தாய் குரல் கொடுத்தாள். ஏண்டா முகுந்தா! பிள்ளைகளுங்கெல்லாம் ஸ்கூலுக்கு போவுதே நீ கிளம்பலை?     நான் போக போறது இல்லை? போவாமா? என்ன பண்ண போறே? உன் கூட வேலைக்கு வரேன்!   என்னாது? வேலைக்கு வர்றியா? நான் ஒருத்தி அங்க கிடந்து சீரழியறுது போதாதா? கஷ்டப்பட்டு உன்னை படிக்க சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பினா பெயில் ஆனதும் இல்லாம வேலைக்கு வரேன்னு சொல்றீயே?   அதான் பெயில் ஆயிட்டேன் இல்லே! எனக்கு கஷ்டமா இருக்கு? பசங்க எல்லாம் கேலி பேசுவாங்க! என்னால ஸ்கூலுக்கு போக முடியாது!   நீ ஒழுங்கா படிச்சிருக்கணும்! படிக்காட்டி பெயில் ஆகத்தான் வேணும் அதுக்காக ஸ்கூலுக்கு போவ

ஆருத்ரா தரிசன கதை!

Image
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடத்தப்படுகிறது . தமிழகத்தில் நடராஜருக்கு பஞ்சசபைகள் உள்ளன . திருவாலங்காட்டில் ரத்தினசபை , சிதம்பரத்தில் பொன்னம்பலம் , மதுரையில் வெள்ளியம்பலம் , திருநெல்வேலியில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகியவற்றில் நடராஜர் திருநடனம் ஆடுகிறார் . மார்கழி , திருவாதிரை நட்சத்திரத்தின்று இவர் ஆருத்ரா தரிசன திருவிழா காண்கிறார் . இந்த திருவிழாவை நடத்துவது , ஒரு பெண்மணியின் பதிபக்திக்காக என்பது உங்களுக்குத் தெரியுமா ! காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன் பெரிய பணக்காரன் . அவனது மனைவி ஆதிரை . திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன் , அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றான் . நாடகத்தில் நடித்த நடிகையுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது . அவரிடமிருந்து பொருளைக் கறந்த நடிகை ஓடிவிட்டாள் . தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை . மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் முஸ்லீம் நகர் தர்காவிற்கு மந்திரிக்க அழைத்து செல்கின்றனர். அங்கு தங்கும் அவள் நள்ளிரவில் எழுந்து சென்று ஒரு விபத்தை ஏற்படுத்துகிறாள் முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:     http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html  பகுதி  1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html  பகுதி  2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html  பகுதி  3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html   பகுதி  4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html   பகுதி  5 http://thalirssb.blogspot.in/2012/08/6.html     பகுதி  6 http://thalirssb.blogspot.in/2012/09/7.html     பகுதி  7 http://thalirssb.blogspot.in/2012/09/8.html    பகுதி  8 http://thalirssb.blogspot.in/2012/09/8.html     பகுதி  9 http://thalirssb.blogspot.in/2012/10/10.html   பகுதி  10  http://thalirssb.blogspot.in/2012/10/11.html    பகுதி 11 http://thalirssb.blogspot

ஆருத்ரா தரிசனம்!

Image
மார்கழி மாதம் புனிதமானது . மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன் . மார்கழிச் சிறப்பை உணர்த்தவே ஆண்டாள் திருப்பாவை பாடியருளினாள் . அதுவும் மார்கழி பெண்களுக்கே உரிய விஷேமான மாதம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுவீர் செல்வச் சிறுமியர்காள் ! என்று சிறுமிகளைத்தான் ஏவினாள் ஆண்டாள் . காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து - வாச நறுங்குழல் ஆய்ச்சியர் தம் மத்தினால் - ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்று மார்கழி விடியற்பொழுதே அறிவித்து சக பெண்களை நீராடச் செல்ல எழுப்புகிறாள் ஆண்டாள் . மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர் . கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது . ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது . தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி ( மன