ஓல்டு ஜோக்ஸ் பகுதி 4


ஓல்டு ஜோக்ஸ் பகுதி 4

1.ஒரு மடையன் கையில் பணமிருந்தால் அது ரொம்ப நாள் தங்காது!
ஐயையோ! என்ன ஆச்சு உன் பணமெல்லாம் போச்சா..?
                                      சாமா
2.நம்ம கோபால் ஒரு சினிமா படம் எடுத்து ரெண்டு லட்சம் நின்னுது!
 அப்படியா! பரவாயில்லையே!
 நீ வேற! பத்து லட்சம் போட்டு படம் எடுத்தார்! கடைசியிலே நின்னது ரெண்டு லட்சம்தான்!

3. எங்க ஆபிஸ்ல புதுசா ஒரு பெண் டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்கு வந்திருக்கா..!
 அவ பேர் என்ன?
ஹலோமேலு!

4. என்னது! என் பிறந்தநாள் பிரசண்டேஷன்னு இந்த பெட்டியைக் கொடுத்தீங்க! திறந்து பார்த்தா அதுக்குள்ளே ஒண்ணுமே காணோமே?
 எப்படி இருக்கும்? நீ ஏதாவது என்கிட்டே பணம் கொடுத்திருந்தாத்தானே நான் வாங்க முடியும்?

5.பில்லை கொடுக்கிறதுக்கு என்னை எதுக்கு வரச் சொன்னீங்க டாக்டர்?
உங்க ஹஸ்பெண்ட் வீக்கா இருந்தார்.. நீங்க தைரியமா வாங்கிப்பீங்க! அதான்!

6 நம்ம ராமர் டீக்கடையிலே  எத்தனை காபின்னாலும் குடிச்சிகிட்டே இருக்கலாம்!
   அவ்வளவு நல்லா இருக்குமா?
 இல்லே அவர்தான் என்னை நம்பி கடன் தர்றாரு!
                                    சேலம் கமலா.
7. என்னது ஸ்டேஜுல இருந்த தலைவரை மாலையோட போய் பார்த்ததுக்கா உங்களை கட்சியை விட்டு நீக்கிட்டாங்க?
  ஆமாம் அவர் இருந்தது கோமா ஸ்டேஜ்ல!
                                 வி. சாரதிடேச்சு.
8எதுக்கு நம்ம தலைவரு பேங்குக்கு கறுப்பு பூனை படையோட போறாரு!
 பேங்குல செக்யூரிடி இருந்தாத்தான் கடன் கொடுப்பேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாரு!

                                              வி.சாரதி டேச்சு.
9.நானும் என் மனைவியும் வீட்டுல வேலையை ஆளுக்கு பாதியா பகிர்ந்துக்குவோம்!
 வெரிகுட்!
 நான் சமைப்பேன்! அவ சாப்பிடுவா! நான் துவைப்பேன்! அவ டிரஸ் போட்டுக்குவா!
                              சென்னிமலை சி.பி. செந்தில்குமார்.
10 என் பையன் கிளாஸ்ல எப்பவும் தூங்கிடறானாம் சார்!
   அப்ப பாயும் தலைகாணியும் கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே!
 அய்யே! அப்புறம் நான் ஆபிஸிக்கு எதை எடுத்திட்டு வரது!
                                          பாஸ்கி.
11 தலைவர் புதுசா  சிறை நிரப்பும் போராட்டம் அறிவிச்சிருக்காரே ஏன்?
  தொண்டர்களை  வெளியே விட்டு வைச்சா கட்சி மாறிடறாங்களாம்!
                                           அம்பை தேவா.
12  தலைவரே உங்களை ஆதரிச்சு தீக்குளிச்ச நடிகர் இவருதான்!
        அப்படியா சந்தோஷம் காயம் ஏதும் படலையா?
   இவரோட டூப்புக்குதான் கொஞ்சம் காயம்!
                                           நிலா
13. இந்த ஆள் கட்சிக்கு ரொம்ப விசுவாசமா இருப்பாரு!
       எப்படி?
அவரு ஃபேண்ட் போட்டாக் கூட கட்சி கரை வைச்ச ஃபேண்ட்தான் போடுவாரு!
                                      வி.சாரதிடேச்சு.
14.கூட்டணித்தலைவர்கிட்ட நாலு தொகுதி கேட்டேன்! அவர் பத்து தொகுதியா கொடுத்திட்டார்!
        ரொம்ப சந்தோஷம்தானே!
   அட நீங்க வேற அதுல எட்டு தொகுதி குஜராத்ல இருக்கு!
                                கொங்கனாபுரம் செந்தில்.
15.என்னப்பா ஏறும் போது மீட்டர் எவ்வளவோ அவ்வளவு கொடுத்தா போதும்னு சொன்னே இப்போ தகறாரு பண்றெ?
   ஆமாங்க மீட்டரோட விலை மூவாயிரம் ரூபா! அதைத்தான் கேக்கறேன்!
                                          வி.சாரதிடேச்சு
16 என் மனைவி என்னோட ரொம்ப சண்டை போடறா! என் நிம்மதியை கெடுக்கிறா! இப்படியே போச்சுன்னா அவளுக்கு நிலைக்காது!
      என்னது?
 அவளோட பூவும் பொட்டும்!
                            வி. சாரதிடேச்சு
17.ஒரு மாசமா ஒரு கிளாஸ் பாலும் ஒரு பழமும் மட்டும் தான் சாப்பிட்டதா சொல்றீங்க! அப்புறம் எப்படி இவ்வளவு குண்டானீங்க?
  நான் சாப்பிட்டது  ஒரு முழு பலாப்பழம் டாக்டர்!
                                        பாஸ்கி
18. என் முறைமாமன் பெரிய ரவுடி!
   அப்ப வன்முறைமாமான்னு சொல்லு!
                                   அ. பேச்சியப்பன்.

19. லெட்டர் கனமா இருக்கே! இன்னும் நிறைய ஸ்டாம்ப் ஒட்ட வேண்டி இருக்குங்க!
   என்னாங்க இது! அப்போ லெட்டர் இன்னும் கனமால்ல போயிரும்!

20.  ஏன் சார் நேத்து வாங்கிட்டு போன மெத்தை எப்படி  இருக்குது?
    யாருக்குத் தெரியும்? அதுல படுத்ததும் தூங்கிட்டேன்!
                                     மதன்
நன்றி! ஆனந்தவிகடன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நகைச்சுவை மிக மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2