இன்று பாரதியார் பிறந்தநாள்!
சென்னை: மகாகவி பாரதியாரின் 131 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.... என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11.
தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. அவரது 131 வது பிறந்த நாளை பிறந்த நாளை தமிழக அரசு இன்று கொண்டாடியது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியின் திரு உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அரசு தலைமை கொறடா, சென்னை மாநகர மேயர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் உட்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பத்திரிக்கையாளர்கள் தினம்
மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கொண்டாடியது. இதனையொட்டி சங்கத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், நடிகர் எஸ்.வி. சேகர், திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலரும் கடற்கரை சாலையில் உள்ள பாரதியாரின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு மகாகவி பாரதியாரின் பாடல்களையும் பாடினர்.
அருமையான பதிவு, பாரதியாரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
ReplyDeleteஅரிய அருமையான புகைப்படங்களுடன் கூடிய
ReplyDeleteசிறப்புப் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ariya padangal....
ReplyDeletenantri sako...
ReplyDeleteவணக்கம்!
பாட்டுக்கொரு புலவன் பாரதியை
நினைவேந்திய தங்களை வணங்குகிறேன்!
அஞ்சா மறவன்! கவிஅரிமா!
அமுதச் சிந்தின் அருந்தந்தை!
துஞ்சா துழைத்துப் பாட்டுலகைத்
துாய்மை செய்த தமிழ்த்தொண்டன்!
பஞ்சாய்ப் பகைவா் பறந்தோடப்
பழமை மூட வழக்கோட
நெஞ்சாய் மண்ணை எண்ணியவன்
நெருப்புப் புலவன் பாரதியே!
மகாகவி பாரதி புகழ் என்றும் வாழும்!
// சென்னையில் அவர் வசித்த பகுதியில் ஒரு மணிமண்டபம் // இது திருவல்லிக்கேணி.
ReplyDeleteஇவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வேற்று சாதிக்காரன் ஏன் பூணூல் அணியக்கூடாது என்று புதுவை ரா. கனகலிங்கம் (ஆதிதிராவிடர்) அவர்களுக்கு அணிவித்து புரட்சி செய்தவர் பாரதி. "என் குருநாதர் பாரதியார் " எனும் நூலை எழுதி அவருக்கு கைமாரு செய்தார் திரு.கனகலிங்கம். என்ற ஒருதகவலையும் இன்நேரத்தில் பதிகிறேன்.
அருமையான பதிவு நன்றிகள் அண்ணா
ReplyDelete