ஓல்டு ஜோக்ஸ் பாகம் 3


ஓல்டு ஜோக்ஸ்  பாகம் 3

1.அப்பா, தாய் சொல்லைத்தட்டாதேன்னு பழமொழி இருக்கு! ஆனா, தாரம் சொல்லை தட்டாதேன்னு பழமொழி ஏன் இல்லை?
ஓ.. அதுவா! எதை நாம செய்ய மாட்டோமோ அதுக்கு மட்டும் தான் பழமொழி இருக்கும்.
                        ஹசன் பருக்

2.லோ பட்ஜெட் படம்னு சொல்றீங்க! ஆனா கதாநாயகி வீட்டுல சமையல் காஸ் சிலிண்டர் வந்து இறங்குது. அவங்க காய்கறி வாங்கி சமையல் பண்ற மாதிரி எல்லாம் சீன் வருதே?
                          புளியரை கணேசன்.

3.இந்தா இந்த முகமூடியை போட்டுக்கோ!
முகமூடியா எதுக்கு?
பின்னே! நான் எப்ப திருட வந்தாலும் இப்படி பஞ்சப்பாட்டு பாடறதுக்கு பேசாம என்னோட வந்து சேர்ந்துக்கலாம்.
                       ஆர். அப்துல் சலாம்.

4.போலீஸ்காரங்க பத்துபேர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டாங்கன்னு சொன்னீங்களே.. நாடகத்துக்கு பேர் என்ன?
மாமூல் வாழ்க்கை!
                                 லட்சுமி ஆவுடை நாயகம்.

5.டாக்டர்! காதுகுடையுது.. மூக்கு அடைச்சிருக்கு! தொண்டையில புண்ணு!
உண்மையை சொல்லுங்க! நான் நெஜமாவே ஈ.என்.டி டாக்டாரான்னு செக் பண்ணத்தானே வந்திருக்கீங்கே?
                                பாஸ்கி.

6.இவர்தான் உன் காதலரா?
எப்படி கண்டுபிடிச்சே?
உன்னை பக்கத்துலே வச்சிகிட்டு உன்னை தவிர மத்த எல்லா பொண்ணுங்களையும் ரசிக்கிறாரே!
                               அம்பை தேவா.

7.அம்மா தப்பா நினைக்காதீங்க! நம்ப ஐயா எப்படி?
சே! தங்கமானவரு.. என்னையே நிமிர்ந்து பார்க்கமாட்டாரு! கவலைப்படாதே!
மன்னிக்கிச்சுங்க அம்மா! அப்ப இந்த வீடு எனக்கு சரிப்படாது!
                               கே.வி.

8.உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை! ஒரு நாலு நாளைக்கு!..
ஐயையோ! அடுத்த நாலு நாள் ஆபீஸ் லீவாச்சே! என்ன பண்ணுவேன்?!
                           பாஸ்கி.

9.ஏர் போர்ட்டில் என்ன கலாட்டா?
யாரோ ரன் –வே முழுக்க வரட்டி தட்டி வச்சிருக்காங்களாம்!
                          வி.வைத்தியநாதன்.

10.என்னது உங்க தாத்தா உனக்கு சொத்துல ஐநூறு ரூபாத்தான் எழுதி வச்சிருந்தாராமே?
நான் கொடுத்து வச்சது அவ்வளவுதாண்டா!
என்னது அதுவும் நீ கொடுத்து வச்சதுதானா?!!
                                ச.ரவிகுமார்.

11.ஹலோ! வணக்கம்.. நான் சம்பந்தம் பேசறேன்!
போன்லயெல்லாம் சம்பந்தம் பேசமுடியாது! நேர்ல வாங்க பேசலாம்!
                               ஜெயாபிரியன்.

12.இந்தாங்க, காணாமப் போன உங்களோட சைக்கிள்..
சார் காணாம போனது என்னோட மோட்டார் சைக்கிள் சார்!
எப்படியோ பாதிக் கிடைச்சிடுச்சுல்ல எடுத்துகிட்டு சந்தோஷமா போங்க!
                       கோவி. கோவன்.

13.பாட்டுக் கிளாசுக்கு உங்க பொண்ணு எதுக்கு கலர் பென்சிலையெல்லாம் எடுத்துகிட்டு போறா?
அவளுக்கு பாட்டு டீச்சர் இப்ப ‘வர்ணம்’ சொல்லித்தராங்களாம்!
                                  வி.சாரதி டேச்சு.

14.கல்யாணத்தை ரொம்ப கிராண்டா நடத்தறாங்களாமே?
ஆமா! நலங்கு உருட்டற விளையாட்டையே நேரு ஸ்டேடியத்தில வெச்சிருக்காங்கன்னா பார்த்துக் கோயேன்!
                                         சு. கவுதமன்.

15.அந்த ஆள் ஆபிசுல யாரோடையும் அனுசரிச்சு போக மாட்டாரு!
நிஜமாகவா?
ஆமாம்! ஆபிஸ்ல அவரு மட்டும் தூங்காம வேலை செய்வாரு!
                                 வி.சாரதி டேச்சு.
16.உன் மாமியார் எப்படி?
புருஷன் இருக்கும்  போது தலை வாரி விடுறாங்க!.. இல்லாதப்ப காலை வாரி விடறாங்க!
                         தஞ்சை தாமு.

17.நான் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது!
 எதுக்கு பிரச்சனை உங்க மனைவி சொல்ற மாதிரியே நடந்துக்குங்களேன்!
                    சி.பி செந்தில்குமார் சென்னிமலை.

18.சார்! நான் இந்த ரோட்டுல போகலாமா?
வாகனங்கள்தான் போகக் கூடாது! நீங்க போகலாம்!
என் பேரு மயில் வாகனம் சார்!
                        எஸ்.வி பிரியன்.

19.உங்க மாமா டெல்லிக்கு போனாரே! அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் என்னோட மாமாவாத்தான் இருக்கார்!
                              கி.கார்த்திக் குமார்.

20.ஜுரம் குறையற வரைக்கும் நீங்க குளிக்க வேண்டாம்! முகம் மட்டும் கழுவிக்கிங்க!
இந்தாங்க மருந்து!
முகம் கழுவிக்க இது போதுமா டாக்டர்!
                           வி. சாரதி டேச்சு.

நன்றி! ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நண்பரே
    தங்களின் இப்பதிவு எனது வலைப்பூவிலும் இணைக்கப்பட்டுள்ளது நன்றியுடன்...பரிதி
    http://parithimuthurasan.blogspot.in/2012/12/kamaththuppaal-kavithaikal-2.html

    ReplyDelete
  2. அருமையான நகச்ச்சுவைத் துணுக்குகள்
    படித்து மிகவும் ரசித்துச் சிரித்தோம்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்குப் பின் - ரசித்து சிரித்தோம். நன்றி தோழர்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2