சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1


1.அந்த பேப்பர் கடைக்காரர் எதுக்காக உன்னை அடிச்சாரு?
புளங் “காகிதம்” ஒரு குயர் கொடுங்கன்னு கேட்டேன்!
                                 பொ.பிரபா.
2.தலைவரே சொன்னா கேளுங்க! இண்லேண்டுங்கிறது லெட்டர் எழுதற காகிதம் தான் அதைப் போய் வளைச்சி போடனும்னு சொல்றீங்களே?
                            நா. செந்தமிழ் சீனிவாசன்.
3.குடிச்சிட்டா அவர் குழந்தை மாதிரி ஆயிடிறாரா? எப்படி?
ஊறுகாய்க்கு பதிலா மண்ணை அள்ளி திங்கறார்!
                                     பி. மணி.
4.இந்த சி.பி.ஐ ரொம்ப மோசம்!
  என்ன விசயம்?
தலைவரோட மனைவி மளிகை கடையில வச்சிருந்த கணக்கை கூட முடக்கி வச்சிருக்காங்களே?
                                      வைகை ஆறுமுகம்.
5.தலைவரை கைது செய்ய வந்த இடத்துல என்ன கலாட்டா?
தலைவர் பலகீணமா இருக்கறதாலே குண்டர் சட்டத்துக்கு பதிலா நோஞ்சான் சட்டத்துல கைது செய்யனும்கிறார்!
                                               தன்வீ
6.நம்ம தலைவர் எப்பவும் எளிமையைத்தான் விரும்புவார்!
எதை வைச்சு சொல்றே?
அவருக்கு நம்ம கட்சி காரங்க கொடுத்த ‘நாவலர்’ பட்டத்தை வேண்டாம்னு மறுத்திட்டு ‘துணுக்கர்’ பட்டம் போதும்னு சொல்லிட்டாரே!
                                               அ. பேச்சியப்பன்.
 7.இப்படி மடத்தனமா ஊழல் செஞ்சு மாட்டிகிட்ட என் புத்தியை செருப்பால அடிச்சிக்கிணும்!
செருப்பு வைச்சிருக்கீங்க! புத்திக்கு எங்கே போவீங்க தலைவா?
                               பர்வீன் யூனூஸ்
8.தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரு!
  ஏன் அப்படி சொல்றே?
மரக்கன்று நடறதுக்கு கூப்பிட்டவங்க கிட்ட மரப்பசுவையும் கொண்டு வாங்க.. சேர்த்தே நட்டுறலாம்..னாரே!
                                    ஜி. சுந்தரராஜன்.
9.தலைவர் வீட்டுல நிறைய டாய்லெட் இருக்குதே.. ஏன்?
ரெய்டு நடக்கறப்ப வீட்ல எல்லாருக்கும் வயித்தை கலக்குதே!
                                      தாமிர செல்வன்.

10.காந்தி வழியிலே நடப்போம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சா.. ஏன்?
கால்வலிக்கும்யா? கார்ல போலாம்னு சொல்றாரே!
                                      சிக்ஸ் முகம்.
11.தலைவருக்கும் அவர் மனைவிக்கும் என்ன சண்டை?
ஊழல் விஷயமா ரெய்டு வந்தவங்க முதல்ல சின்ன வீட்டுக்கு போறாங்களே! அப்ப எனக்கு என்ன மரியாதை இருக்குன்னு கேட்குறாங்க!
                                   அம்பைதேவா.
12.பெட்ரோல் விலை ஏற்றத்தாலே ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல இருக்கு!
எதைவச்சு அப்படிச் சொல்றீங்க?
வண்டிக்கு நூறு மில்லி பெட்ரோலும் ரெண்டு மில்லி ஆயிலும் போட்டுட்டு போறாரே!
                                          ஜி.லட்சுமிபதி.
13.தலைவர் என் சொத்துக்களோட நதிமூலம் பார்க்க ஆரம்பிச்சுட்டார்!
அப்புறம்?
நிதிமூலம் சரி செஞ்சுட்டேன்!
                                       வீ.விஷ்ணுகுமார்.
14.நம்ம தலைவர் வேஷ்டி விளம்பரத்துல நடிக்கிறாராமே?
ஆமா! கோஷ்டி சண்டையிலும் கிழியாத வேஷ்டி.. னு சொல்லி விளம்பரப்படுத்தறார்!
                                                    அ. பேச்சியப்பன்.
15.அவர் ரொம்ப அப்பாவின்னு எதை வச்சி சொல்றே?
முட்டை கோஸ்ல மஞ்சள் கருவை காணோம்னு புலம்பறாரே!
                                    மித்ரா.
16.தலைவரோட தமிழ் பற்று தாறுமாறா போயிருச்சு!
 எப்படி?
ஈரோடுங்கிற ஊர் பேரை ஈசாலைன்னு மாத்தனும்னு சொல்றாரே!
                                            அ. பேச்சியப்பன்.
17தூக்கை ரத்து செய்யணும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா? ஏன்?
தூக்குக்கு பதிலா வேற என்ன பாத்திரம் அறிமுகப்படுத்தலாம்னு கேக்கறார்!
                                    பா. ஜெயக்குமார்.
18.ஜெயிலுக்கு போயிட்டு வந்த தலைவர் வீட்டுல யாருய்யா காலிங் பெல் அடிச்சது?
ஏன் என்ன ஆச்சு?
பாரு! சாப்பாட்டு நேரம்னு நெனச்சி தலைவர் தட்டை தூக்கிக்கிட்டு ஓடறார்!
                                          பர்வீன் யூனூஸ்.
19.தலைவரு கச்சத்தீவு விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருக்காரே ஏன்?
  அது ஏதோ பொம்பளைங்க சமாச்சாரம்னு நெனைச்சிகிட்டு இருக்காருப்பா!
                                   ஆனந்த சீனிவாசன்.
20.பேஷண்டுக்கு சுகர், பீபி, ஜுரம், தலைவலி எதுவும் இல்லை! நார்மல்!
அது போஸ்ட் மார்டத்துக்கு வந்த பாடி டாக்டர்!
                                         அனார்கலி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் நகைச்சுவை! நன்று!

    ReplyDelete
  2. நகைசுவைகள் அனைத்தும் சூப்பர் அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2