பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 20
பேய்கள்
ஓய்வதில்லை! பகுதி 20
உங்கள் ப்ரிய “பிசாசு”
முன்கதை சுருக்கம்:
ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் பாயிடம்
அழைத்து சென்று தங்க வைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து வரும் செல்வி வழியில்
சாலையில் நடக்கும் ஒரு விபத்தை பார்த்து விகாரமாக சிரிக்கின்றாள்.
முந்தைய பகுதிகளுக்கான
லிங்க்:
http://thalirssb.blogspot.in/2012/08/6.html பகுதி 6
http://thalirssb.blogspot.in/2012/09/7.html பகுதி 7
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 9
http://thalirssb.blogspot.in/2012/10/10.html பகுதி 10
http://thalirssb.blogspot.in/2012/09/7.html பகுதி 7
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 9
http://thalirssb.blogspot.in/2012/10/10.html பகுதி 10
http://thalirssb.blogspot.in/2012/11/15.html பகுதி 15http://thalirssb.blogspot.in/2012/11/16.html பகுதி 16
இனி:
மணி சுமார் விடியற்காலை மூன்று இருக்கும்
திடுமென விழித்துக் கொண்டான் வினோத். தூரத்தில் ஆம்புலன்சின் சைரன் ஒலியும்
பதட்டமான குரல்களும் அவன் காதில் ஒலிக்க எழுந்து வெளியே வந்தான். மவுல்வியும்
அப்போதுதான் எழுந்து வெளியே வந்திருந்தார். பனிமூடியிருந்தது அந்த பிரதேசமே
தூரத்து காட்சிகள் ஒன்றும் விளங்க வில்லை!
என்ன தம்பி! இவ்வளவு சீக்கிரம்
எழுந்திட்டீங்க? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் இல்ல!
இல்லே திடுமென விழிப்பு வந்துடுத்து? ஆமாம்
அது என்ன சத்தம் ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி கேட்டுதே?
ஆம்புலன்ஸ்தான் தம்பி! முன்னே மாதிரி இல்லே
தம்பி இப்ப உடனடியா வருது! அரசாங்கம்தான் 108 சேவையை அறிமுகப்படுத்தியிருக்கே!
அவர் சாதாரணமாய் சொல்லிக் கொண்டிருக்க இல்லே பாய்! அப்ப இந்த பகுதியில ஏதாவது
விபத்து நடந்திருக்கணும் இல்லையா? எனக்கு சந்தேகமா இருக்கு? செல்வி இருக்காளான்னு
பார்க்கணும் என்றான் வினோத்.
தம்பி நீங்க ரொம்பவே பயந்து போய் இருக்கீங்க?
செல்வி எங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வரைக்கும் வெளியே போக முடியாது.
இல்ல பாய்? எதுக்கு சந்தேகம் ஒரு எட்டு
பார்த்திட்டு வந்திடலாம்!
சரி வாங்க போவோம்!
இருவரும் நடந்து செல்வியின் அறை பக்கம் வந்தனர்.
அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டு இருந்தது. பார்த்தீங்களா? உள்பக்கம் தாழ்ப்பாள்
போட்டிருக்கு! உள்ளேதான் தூங்கிகிட்டு இருக்கணும்.
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு?
சரி ஜன்னல் வழியா எட்டி
பார்த்திடுவோம்!
ஜன்னல் வழியாக நோக்கிய போது அங்கே செல்வி தலையை
விரித்து போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பார்க்கவே
பயங்கரமாக இருந்தது. சந்திரமுகி ஜோதிகா போன்றதொரு கோலம்! விதிர்விதிர்த்து போய்
நின்ற வினோத் என்னமோ நடந்திருக்கு என்று முணுமுணுத்துக் கொண்டான்.
பாயும் எட்டிப்பார்த்தார்! அம்மா செல்வி!
என்று குரல் கொடுத்தார்! பதில் இல்லை! அம்மா செல்வி! இரண்டாவது முறை குரல் கொடுத்த
போது கோபத்துடன் திரும்பிய செல்வி, நான் செல்வி இல்லை! ப்ரவீணா! என்றாள்.
சரி ப்ரவீணா! ஏன் இப்படி உட்காந்திருக்கே!
படுத்து தூங்கறது தானே?
தூங்கறதா! இப்பத்தான்
ஆரம்பிச்சிருக்கேன்! இனிமே முடிக்கிறவரைக்கும் எனக்கு தூக்கம் ஏது? என்றாள்.
என்னம்மா சொல்றே?
ஆமாம் என் கணக்கு
இன்னிக்குத்தான் துவங்கியிருக்கு!
வெறிபிடித்தவள் மாதிரி
அப்படியே சுவற்றை பார்த்து சிரிக்கத்துவங்கினாள். அந்த ரெண்டுங்கெட்டான் நேரத்தில்
அந்த மசூதியே அதிரும் வண்ணம் அவள் சிரிப்பு இருந்தது.. இருவரும் ஏதும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டனர்.
***********************************************************
குஹாத்ரி மலையின் அந்த
அதிகாலை போதில் தன் நண்பனை அழைத்து வந்த சித்தப்பா சுவாமிஜின் மாந்திரீக சக்தி
கண்டு மலைத்து போயிருந்தான் முகேஷ். அதே சமயம் ரவி கொலைகள் பண்ணியிருப்பதாக
சொல்லவும் ஆடிப்போனான்!
சித்தப்பா! இதெல்லாம் நிஜமா? இவன் துளி ரத்தம்
கண்டா கூட பயப்படுவான்!
உண்மைதான் முகேஷ்! இவன்
கொலை பண்ணியிருக்கான்! ஆனா பண்ணலை!
கொஞ்சம் புரியும் படியா
சொல்றீங்களா! எஸ். ஜே சூர்யா மாதிரி பேசி குழப்பறீங்களே!
இவன் ரெண்டு கொலைகள் பண்ணியிருக்கான்! ஆனா
அதை பண்ணியது இவன் இல்லை!
மறுபடியும் தெளிவா குழப்பறீங்களே சித்தப்பா!
இன்னுமா புரியலை முகேஷ்! இவன் மேல இருக்கற
ஆவிதான் அந்த கொலைகளை பண்ணியிருக்கு! அதுக்கு இவன் உடல் உதவி இருக்கு அவ்வளவுதான்!
ஆனா சித்தப்பா! சட்டம் இதை ஒத்துக்குமா? இவன்
தான் செய்தான்னு இவனுக்கில்லே தண்டனை கிடைக்கும்!
நீ சொல்றது நிஜம் தான்! ஆனா இவன் நேரடியா அந்த
கொலைகளை பண்ணலையே பயமுறுத்தியே சாகடிச்சு இருக்கான். இவன் அந்த மரணங்களுக்கு
மறைமுக காரண கர்த்தாதான்
எனக்கு ஒண்ணும் புரியலை சித்தப்பா!
இவன் நேரடியா போய் கத்தி எடுத்தோ துப்பாக்கி
எடுத்தோ கொலை செய்யலை! பாதிக்கப்பட்டவங்க மிரண்டு போய் அவங்களாவே முடிவை தேடிக்
கிட்டாங்க!
அப்ப இவனை கொலை காரன்னு நீங்க சொன்னீங்க!
என்னை பொறுத்த வரைக்கும் கொலைக்கு தூண்டி விட்ட
இவன் கொலைக் காரந்தான்.
சரி சித்தப்பா! இவனை எப்படி குணப்படுத்தறது?
நேத்திக்கு நீ
பார்த்தியே அந்த மாதிரிதான்! சரி நான் குளிச்சிட்டு வந்திடறேன்! பூஜையை
ஆரம்பிக்கலாம் என்று சென்று விட்டார் சித்தப்பா.
காலை ஒன்பது மணி இருக்கும் பூஜைகள்
ஆரம்பமாயின. அரிசி மாவினால் அறுகோணத்தில் கோலமிட்டு அதன் முனைகளில் சூலம் வரைந்து
சுற்றி ஓம் போட்டிருந்தது. அதன் மையத்தில் ஏதோ எழுத்துருக்கள். அந்த கோலத்தின்
மையத்தில் ரவியை நிற்க வைத்தார்கள்.
பூசணிக்காய் எலுமிச்சை, ஆத்து
தும்மட்டிக்காய் போன்ற வஸ்துக்களும் மாவினால் செய்யப்பட்ட ஒரு பொம்மையும்
இருந்தது. சாதம் மூன்று கலர்களாய் இருந்தது.
பூஜை ஆரம்பித்தது. முதலில் ஏதோ மந்திர
உச்சாடனம் செய்து கொண்ட சுவாமிஜி வேப்பிலையால் ரவியை வருடி வேப்பிலை அடிக்க ஆரம்பிக்க ரவி விகாரமாய் சிரித்தான். அந்த வேப்பிலையை
தூக்க முடியாமல் கனத்தது. கஷ்டப்பட்டு தூக்கி அடித்த சுவாமிஜி அதை முறித்து தூர
எறிந்தார்.
முகேஷ் என்ன சித்தப்பா! என்றான்.
இது ரொம்ப சாதாரணமான பேய் இல்லை! வேப்பிலை
அப்படியே கனத்தது! இதை விரட்ட நிறைய பூஜை பண்ண வேண்டியிருக்கும்
என்னை ஏன் விரட்டறீங்க? நானாவே போயிருவேன்!
என் வேலை முடிய போவுது? என்றான் ரவி!
என்ன சொல்றே?
என் வேலை முடிய போவுது? இன்னிக்கு ஒரு இரவு
மட்டும் என்னை விட்டு வைங்க! இந்த கிராமத்திலேதான் என் எதிரி இருக்கான்! அவனை நான்
முடிக்கணும் என்றான் ரவி
என்னது இந்த கிராமத்திலேயா? நீ தப்பு செய்யற
ரவி!
நான் ரவி கிடையாது! அவன் உடம்புல வாழறேன்!
அப்ப நீ யாரு!
நான் நான் யாரா? நான் தான் மகேஷ்! என்று
விகாரமாக சிரித்தான் ரவி!
மிரட்டும்(20)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
ReplyDeleteWowwww... Superb na
ReplyDelete