கேப்டன் பதவியை உதறி விட்டு ஓடிப் போக மாட்டேன்- டோணி


 கேப்டன் பதவியை விட்டு விலகுகிறேன் என்று என்னால் எளிதாக கூறி விட முடியும். ஆனால் பொறுப்பை உதறி விட்டு ஓட மாட்டேன் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்திடம் தூக்கிக் கொடுத்து விட்டது இந்தியா என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தா போட்டி குறித்து கேப்டன் டோணி கருத்து தெரிவிக்கையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன், அணியில் ஒரு வீரராக இருக்கிறேன் என்பதை எளிதாக கூறி விட முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக அமையும். எனவே எனது பொறுப்பை உதறி விட்டு ஓடி விட மாட்டேன்.
கிரிக்கெட் வாரியம் உள்ளது, நிர்வாகிகள் உள்ளனர், தேர்வாளர்கள் உள்ளனர். அவர்கள் முடிவெடுக்கட்டும். அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
அணியை ஒருங்கிணைத்து அடுத்த போட்டிக்குத் தயாராக்குவதே எனது இப்போதைய முக்கியப் பணி. அந்தப் பொறுப்பை நான் முறையாகச் செய்ய முயல்வேன்.
ஒரு கேப்டனாக, இது எனக்குச் சவாலான தொடராக மாறியுள்ளது. ஒரு அணி தடுமாறும்போது நிச்சயம் கேப்டனுக்கு கூடுதல் பொறுப்புகள் வரவே செய்யும். எனக்கும் அப்படித்தான்.
கொல்கத்தா தோல்விக்கு பேட்டிங் சரியில்லாமல் போனதும் முக்கியக் காரணம். பேட்டிங்கில் நாம் தோற்று விட்டோம். அதைச் சரி செய்து கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராக வேண்டும் என்றார் டோணி.

யுவி,ஜாகிர், பஜ்ஜி நீக்கம்!
 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுகேவலமாக விளையாடி வரும் இந்திய அணியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அணியில் இருந்து யுவராஜ்சிங், ஜாகிர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். சொற்ப ரன்களே எடுத்து வரு சச்சின் தெண்டுல்கர் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார்.
இங்கிலாந்துடன் இதுவரை 3 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த மூன்றில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி தொடர்ந்தும் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் கேப்டன் டோணியோ பிட்ச் சரியில்லை. பிட்ச் சரியில்லை என்றே புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணியில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டது. அணியில் இருந்து யுவராஜ்சிங், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்குப் பதிலாக ப்யூஸ் சாவ்லா, ஜடேஜா, பர்விந்தர் அவானா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாக்பூரில் வரும் 13-ந் தேதி நடைபெறும் 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலாவது இந்திய அணி தேறுமா?
நன்றி} தட்ஸ் தமிழ்

Comments

  1. நம்மவர்கள் யாரும் துரத்தாமல் பதவியில் இருந்து போக மாட்டார்கள்.இவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!