தளிர் ஹைக்கூ கவிதைகள்! 15
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
இரவல் நகை!
எல்லோரும் புகழ்ந்தார்கள்!
நிலா.
கொடுத்து
சிவந்தது
மாலைச் சூரியன்!
பழசு
புதுசானது
பேஷன்!
திலகமிட்டது?
அந்தி சூரியன்!
தலைசாய்த்து வெட்டினாலும்
கத்தவில்லை
முடி!
சுவற்றில் எறிந்த பந்தாய்
திருப்பப்படுகின்றன சொற்கள்
குழந்தை!
ஆடை விலகியும்
சரிசெய்ய வில்லை!
வானவெளியில்
நகரும் ஓவியம்!
மேகம்!
வளைகரங்கள் பின்னும்
வண்ணச் சித்திரம்
கோலம்!
தொடர்ந்து வந்தாலும்
தொட முடியவில்லை!
நிலா!
அதிகாலையிலும்
வியர்த்தன புற்கள்!
பனி!
மழை!
பூமிக்கு குடை
காளான்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
thuli thuliyaay....
ReplyDeleteeerapaduththiyathu kavithai...
#அதிகாலையிலும் வியர்த்தன புற்கள் பனி# அருமை எல்லாமே அருமை இது அதிலும் அதிகம்
ReplyDelete