தளிர் ஹைக்கூ கவிதைகள்! 16



 முத்தமிட்டும்
சத்தம் வரவில்லை!
காற்றில் அசைந்த இலைகள்!

உடைந்த வீடு!
கைதட்டி ரசித்தன குழந்தைகள்!
கடற்கரை!

ஓட்டி உறவாடியதை
தட்டிவிட்டேன்!
கடற்கரை மணல்!
 
உப்பிலே பிறந்தாலும்
கரிக்கவில்லை!
கடல் மீன்கள்!

கடவுள்கள்
அவதாரம்!
குழந்தைகள்!

கொட்டிக்கிடந்த மஞ்சள்!
மறைந்து போனது!
மாலைவெயில்!
 
தேங்காய் கீற்றை
எறும்புகள் மொய்த்தன!
பிறைநிலா!

மொட்டை மாடியில்
குடித்தனம்!
தென்னையில் கிளிகள்!

 பூ தூவி அஞ்சலி
செய்தன மரங்கள்!
இறந்தது பகல்!

கலர் பூக்களில்
தேனில்லை!
மார்கழி கோலம்!

தினம் தோறும் இருபிள்ளை
பெற்றும் திருப்தி இல்லை பூமிக்கு
இரவுபகல்!                                         
 டிஸ்கி} ஹைக்கூக்களை விரும்பி படிக்கும் சகோதரி எழிலியின் விருப்பத்திற்கு ஸ்பெஷல் பதிவு இது! கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி!

Comments

  1. அருமை மிக அருமை
    ஒவ்வொன்றையும் ரசித்தேன்

    ReplyDelete
  2. ஆழமாக யோசித்து
    அருமையாக கொடுத்துள்ள கவிதைகள் அனைத்தும்
    மனம் கவர்ந்தன
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. /உப்பிலே பிறந்தாலும்
    கரிக்கவில்லை!
    கடல் மீன்கள்!

    //

    வாவ் ... அருமையான வரிகள் நண்பா

    ReplyDelete
  4. அனைத்து ஹைக்கூக்களும் அருமை அண்ணா

    ReplyDelete
  5. இதைத்தான் நண்பா ... சொன்னேன் அத்தனையும் அருமை... எப்படிப்பா இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க என யோசிக்க வைக்கிறது ஒவ்வொன்றும்... சூப்பர்...

    ReplyDelete
  6. இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
    வருக!
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  7. ஹைகூ தோரணம்
    அருமையான தோரணம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?