பிரிவு!


பிரிவு!

பிரியும் போதுதான்
தெரியும்
பிரிவின் வலி!


இது நான் சந்தித்த சில பிரிவுகளை பற்றியது! அது 1994-95 பிளஸ் டூ முடித்து விட்டு டிகிரி முதலாம் ஆண்டு நிறைவு செய்திருந்தேன். அப்போதுதான் என் அக்காவிடம் இருந்து ஒரு தகவல் வந்தது. பொன்னேரியில் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் உனக்கு ஒரு சீட் வாங்கி உள்ளேன். வந்து சேர்ந்து கொள் என்று.இந்த இடத்தில் என் அக்காவின் பிரிவை சொல்ல வேண்டும் அது பெரிய கதை! பிறகு பார்ப்போம்.
     எப்படியோ கம்ப்யூட்டர் செண்டரில் சேர்ந்து விட்டேன். திரு ரமேஷ், மற்றும் அவரது தங்கை செல்வி அருணா தான் அந்த செண்டரின் ஓனர்கள். முதல் இரண்டு நாட்கள் சகஜமாக அவர்களே வந்து கிளாஸ் எடுத்தார்கள். மொத்தம் பத்து மாணவர்கள்தான் இருந்தோம். அது ஒரு வருட வகுப்பு. டி.பி.சி.எஸ் என்ற கோர்ஸ் அரசாங்கம் ஸ்டைபண்ட் வேறு தந்தது.
   மூன்றாவது நாள் ஒரு பெண்மணி கிளாஸ் எடுக்க வந்தார்.  மீஞ்சூரில் இருந்து வந்த அந்த அக்காவிற்கு( அவ்வளவு வயசுதான் இருக்கும்) அப்போதுதான் இஞ்சினியரிங் முடித்து விட்டு வந்திருந்தார். எங்கள் எல்லோருக்குமே அவரை பிடித்து போனது. ஆனால் அவரால் தமிழில் சரளமாக பேசமுடியவில்லை! அவரது தாய்மொழி தெலுங்கு! படித்தது ஆங்கில மீடியம் போலும்! தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேச நாங்கள் வாயை பிளந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம்!
                 எதுவுமெ விளங்க வில்லை! அதை சொல்லவும் எங்களுக்கு  தயக்கம்! அக்கா ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறாரே! எப்படி அவருக்கு தமிழில் விளங்க வைப்பது? தலையை தலையை ஆட்டிக்கொண்டு இருந்தோம். ஒருவாரம் கழிந்தது! டெஸ்ட் வைத்தார்கள். ஏதோ எழுதினோம்.அடுத்த நாள் நாங்கள் உள்ளே நுழைந்தபோது அக்கா  மூட் அவுட் போலும்! சோகமாக இருந்தார்.
                   நாங்கள் கிளாஸுக்கு சென்றதும் ரமேஷ் சார் தான் வந்து பேப்பர்களை கொடுத்தார். ஒருவரும் 25 மதிப்பெண்களுக்கு 5 மதிப்பெண்களை தாண்டவில்லை!  என்னப்பா! இப்படி இருக்கீங்க! உங்க மேம் ரொம்ப மூட் அவுட் ஆகிட்டாங்க! இனிமே கிளாஸ் எடுக்க வர மாட்டேங்கிறாங்க! இப்படி படிச்சா எப்படி? என்று கேட்டார் அவர்.
   போங்க போய் என்னன்னு கேளுங்க! என்று அந்த அக்காவை அனுப்பியும் விட்டார்! அவர் அழுது கொண்டே கிளாஸுக்கு வந்ததும் எங்களுக்கு பாவமாய் இருந்தது. ஏம்பா இப்படி பண்ணீணீர்கள் ஒருத்தரும் மார்க் எடுக்கலை! சொல்லி கொடுக்கும் போது தலையாட்டீனீர்கள் என்று கேட்டார்.
    மேம்! இப்படி தமிழ்ல பேசினீங்கன்னாதான் எங்களுக்கு புரியும் மேம்! நீங்க பாட்டுக்கு இங்கிலிபீஸ்ல தஸ் புஸ்ஸுன்னு  பேசினா நாங்க என்ன பண்ணுவோம்! என்றான் நண்பன் குமார்.
    மேடம் சிரித்து விட்டார்! ஓ  இதுதான் பிரச்சனையா? எனக்கு தமிழ் அவ்வளவா வராதே? வந்த வரைக்கும் பேசுங்க! மீதியை நாங்க கத்து கொடுத்திடறோம்! என்றோம்.  அப்புறம் அவர் எங்கள் மேம் என்பதை விட எங்களில் ஒருவராகிப் போனார். அவர் வராத நாட்களில் எங்களுக்கு பொழுதே போகாது.
   அந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் ஜனவரி துவங்கியது 95ம் வருட ஆரம்பம்! கிளாஸிற்கு சென்றதும் அடுத்த வாரம் முதல் நான் வரமாட்டேன் என்று மேம் சொன்ன போது நாங்கள் அழுதே விட்டோம்! மேம்! ஏன் வரமாட்டீங்க! நாங்க என்ன தப்பு செஞ்சோம்? என்று கேட்டோம். எனக்கு வேற வேலை கிடைச்சிருக்கு! இது எனக்கேத்த ஜாப் இல்லை! வேலை கிடைக்கிறவரைக்கும் சும்மா இருக்க கூடாதுன்னு வந்தேன். என்றார்கள்.
   அவர்கள் விடைபெறும் போது அப்போதுதான் கவிதை எழுத ஆரம்பித்திருந்த நான் ஒரு பிரிவுரை மடல் எழுதினேன். ஒரு வால்கிளாக் அனைவரும் சேர்ந்து வாங்கி பிரிவுரை மடல் வாசித்து  வழி அனுப்பினோம். அன்று மாலை ரயில் நிலையத்திற்கு உடன் சென்று வழி அனுப்பினோம்.ரயில் கிளம்பும் போது நான் மேம் என் கவிதை பத்தி ஓண்ணும் சொல்லலையே என்று கவிதை தாளை நீட்டினேன்.
   இவ்வளவு நேரம் சும்மா இருந்து இப்ப கேக்கறீயே? என்றவர்கள் வாங்கி அதில் வெரி ப்யுட்டி புல் வேர்டிங்க்ஸ் என்று எழுதி கையெழுத்திட்டு தந்தார்கள். இன்றும் அது பத்திரமாய் இருக்கிறது. அப்புறம் அவர்கள் தந்த முகவரிக்கு  ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். யாருக்கும் அதை சொல்லவில்லை! ஒரு வாரம் கழித்து மீண்டும் ஏதோ விஷயமாக செண்டருக்கு வந்தவர்கள் என் கடிதம் கிடைத்தது என்று சொன்னார்கள். என்னைப் பற்றி விசாரித்தார்கள். நான் பொன்னேரியில் ஜிராக்ஸ் கடை வைக்க உள்ளதாக கூறினேன். வாழ்த்தினார்கள். எல்லோரும் மீண்டும் வழி அனுப்பினோம்.
  அதற்கப்புறம் எனக்கு அந்த கம்ப்யூட்டர் செண்டருக்கு போவதில் விருப்பம் இருக்க வில்லை! இவர்கள் இடத்திற்கு வேறு ஒருவர் வந்தார் அவர் பெயர் ரஜினி! நிஜத்தில் ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஆனால் இவரை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை! அவருக்கும் என்னை பிடிக்காது! அதனால் அடிக்கடி லீவ் போட்டு ஒரு வழியாக கோர்ஸை முடித்தேன்.
   ஆனால் அதற்கப்புறம் அந்த அக்காவை பார்க்க நினைப்பேன்! எங்காவது தென்படுகிறார்களா என்று எத்தனையோ நாட்கள் என் கண்கள் தேடியுள்ளன ஆனால் அவரை மீண்டும் பார்க்க முடியவே இல்லை! இவரை பார்ப்போமா என்றே இன்னும் என் மனம் ஏங்கி கொண்டிருக்கிறது! இவ்வளவு சொன்னேன்! அந்த அக்கா பேரை சொல்ல மறந்துட்டேன் பாருங்கள்! அவங்க பேரு பவானி! மீஞ்சூருல இருந்து வந்தாங்க! இப்ப கல்யாணமாகி குழந்தைங்க எல்லாம் இருக்கும் என்று நினைக்கிறேன். இவங்க பிரிவை என்னால மறக்கவே முடியாது. என்னிக்காவது ஒரு நாள் இவங்களை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்னு நம்பறேன்!
 டிஸ்கி} இதே போன்ற சூழல் மீண்டும் 2005லும் நடந்தது. அதை பிறகு பகிர்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. unmaithAan sako....


    nalla pakirvu....

    ReplyDelete
  2. என்னுடைய பழைய நினைவுகளையும் கிளறி விட்டீர்கள்.. அருமை...

    ReplyDelete
  3. அண்ணா மிகவும் அற்புதமான அனுபவம் மீண்டும் அந்த அக்காவை சந்திக்க கடவுளை வேண்டுகிறேன் பகிர்வுக்கு நன்றிகள்

    மேலும் என்னுடைய பழைய நினைவுகளை சற்று சிந்திக்க துண்டியது இப்பதிவு

    ReplyDelete
  4. உங்கள் அனுபவ பதிவு மிகவும் அருமையாக உள்ளது....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!