காதல் அவஸ்தை! 2


காதல் அவஸ்தை! 2அதிகாலைப்பனி போல
அன்பே நீ என்னை ஊடுறுவி நிற்கையில்
குளிரில் குளித்த பூக்களாய்
மகிழ்ந்து நிற்கிறது என் மனசு!

ஆதவனை கண்ட தாமரை போல
உன் முகம் காண துடிக்கையில்
காணேன் என கதிரவனைக் கண்ட பனி போல
விலகுகிறாய்!
நீ அருகில் வருகையில்
மெல்லிய தென்றலில் அசைந்தாடும்
உன் கூந்தல் எனை வருட
மேகமாய் நான் மிதக்கிறேன்!

நீ சிரிக்கும் போது விழும்
கன்னத்து குழியழகில்
கவிழ்ந்து போனது என் காதல் மனசு!

உன் அலைபாயும் விழிகளில்
வலை வீசி என்னை சிக்கவைத்தாய்!
என் வழியில் தேவதையாய் வந்தவளே!
உன் கூந்தலில் அலங்கரிக்கும்
ஓற்றை ரோஜா போல
உன் மனதில் எனை அலங்கரிக்கும்
நாள் என்நாளோ?

அற்றை அவ்வெண்ணிலவின் ஒளியில்
உன்னோடு உரையாடி வருகையில்
ஒளி படர்ந்த உன் முகம் நிலவை
மங்கலாக்கியது கண்டு மகிழ்ந்தேன்!

பனிக்கூழாய் உறுகி நிற்கிறேன்!
நனிபோல இனிப்பவளெ!
நல்ல வார்த்தை சொல்லிவிடு!

டிஸ்கி} நீண்ட கவிதைகள் எழுதி நாளாகிவிட்டது! டச் விடாமல் இருக்க இனி அவ்வப்போது இப்படி காதல்ரசம் பொழிய இருக்கிறேன்! பொறுத்துக் கொள்ளுங்கள்!
 படங்கள் உதவி} ரிஷவன் காம், ரமாமலர்காம், தமிழ் வேர்ல்ட் காம்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சில இடங்களில் எழுத்துப்பிழையை தவிர கவிதை சிறப்பு ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! ஆம்! சில இடங்களில் ஒற்று சேர்க்காமல் விட்டுவிட்டேன்! நன்றி!

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ந்ணபரே!

   Delete
 3. நன்றாக இருக்கிறது சார்.....

  ReplyDelete
 4. உவமைகள் சிறப்பு... தொடருங்கள் ...

  ReplyDelete
 5. என்னவோ உங்களின் ஹைகூவில் இருக்கும் கூர்மை(sharpness)சரியா தமிழாக்கம்) இதில் இல்லை. இருந்தாலும் கவிதை சிறக்கிறது

  ReplyDelete
 6. ஓ! கவிதை கூட எழுதுவீங்களா? தெரியாமப் போச்சே! சிறப்பான கவிதை அடிக்கடி எழுதுங்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2