தொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்!
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமுத்துவும் முன்னணியில் இருக்கும் இரு வார இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இருவருமே ஒருவரை ஒரு காரசாரமாக தாக்கி எழுதி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு "சினிமா பாடகராக என்ற செய்ய வேண்டும்?" என்ற கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் "இசை அமைப்பாளருக்கு உதவியாளர் போல எடுபிடி வேலை செய்ய வேண்டும், யாரும் கேட்டால் இசை அமைப்பாளர் என் நண்பர் என்று சொல்ல வேண்டும். தன் பெயரில் மன்றம் வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு விளம்பரம் வைக்க வேண்டும். அடிக்கடி புத்தகம் வெளியீட்டு விழா நடத்தி மற்றவர்கள் புகழ்வதை கேட்டு மகிழ வேண்டும். பணம் செலவு செய்து நிறைய விருதுகளை வாங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி எழுதப்பட்டதாகும்.
சமீபத்தில் வைரமுத்துவிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து "ஒரு முறை ஜெயகாந்தன் தன் மகன் திருமணத்தை என் திருமண மண்டபத்தில் நடத்தினார். அந்த திருமண அழைப்பிதழை ஒரு இசை அமைப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். பத்திரிகையில் மண்டபத்தின் பெயரை படித்த இசை அமைப்பாளர் நான் அந்த மண்டபதுக்கு எப்படி வருவது என்று கேட்டிருக்கிறார். உடனே வராதவருக்கு எதற்கு அழைப்பு என்று அந்த பத்திரிகையை பிடுங்கி வந்து விட்டார் ஜெயகாந்தன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். வைரமுத்து குறிப்பிடும் இசை அமைப்பாளர் இளையராஜாதான் என்பது அனைவருக்கும் தெரியும். "சிலர் மறைமுகமாக உங்களை தாக்கி வருகிறார்களே?" என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து "கர்வத்தின் உச்சத்தை தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிர குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது, குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட சிகிச்சை தருவதே சிறந்தது" என்று கூறியிருக்கிறார். அதோடு என்னை மறைமுகமாக தாக்குபவர்களுக்கு சைகோசிஸ் என்ற மனநோய் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மோதல் முற்றி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படித் தாக்கிக் கொள்வார்களோ தெரியவில்லை.
இந்த பங்காளிச் சண்டைக்கு முடிவே இல்லையா?
ஆமாம் ஞானிக்குள் ஏன் இன்னமும் இந்த காம, குரோத பொறாமை பவனி...?! இசை ராஜாவிற்கே வெளிச்சம்!! நன்றி தினமலர்

ஞானிக்குள் இன்னமும் ஏன்...? காம, குரோத, பொறாமை பவனி?!
இளையராஜாவை தமிழ் திரையுலகின் இசைஞானி என்றே அழைக்கின்றனர். அவரும் அப்படி அழைக்கப்படுவதையே விரும்புகிறார். அதோடு ஆன்மிக ஞானியாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் இளையராஜா, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த "நீதானே என் பொன்வசந்தம்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கள்ளக்காதலன், கள்ளக்காதலி பற்றி பேசியதும், பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இந்தியில் இருந்து ஒரு ட்யூனை எடுத்து தமிழில் போட்டு, அந்தப்பாடலை ஹிட் செய்ததை போட்டுக்கொடுத்ததோடு, நான் இதுவரை காப்பியடித்ததே இல்லை... என்று பேட்டி கொடுத்ததையும் கண்ட சீனியர் சினிமா விமர்சகர் ஒருவர், இசைஞானிக்குள் இன்னமும் பொறாமை ஞானி, கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறார் போலும்... என கிண்டலடித்தது மீடியா வட்டாரத்தில் மிரட்டலான சிரிப்பு சப்தத்தை ஏற்படுத்தியது உண்மை!ஆமாம் ஞானிக்குள் ஏன் இன்னமும் இந்த காம, குரோத பொறாமை பவனி...?! இசை ராஜாவிற்கே வெளிச்சம்!! நன்றி தினமலர்
இளையராஜா இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்.அது அவர் சேர்த்துவைத்த புகழுக்கு அழகன்று.
ReplyDelete// "கர்வத்தின் உச்சத்தை தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிர குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது, குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது// - பேச்சிலும் பெயரை நிறுத்திவிட்டார் கவிஞர்
ReplyDeleteசிகரங்களுக்குள் பிரச்ச்னை......
ReplyDeleteபின்னாடி அவங்களே சேர்ந்துப்பாங்க
மிக வருத்தமாகத்தான் இருக்கிறது இது போன்ற விஷயங்கள் கேள்விப்படும்போது.
ReplyDelete