Posts

Showing posts from June, 2017

இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!

Image
இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்! தி. இந்து தமிழ் நாளிதழில் பஞ்ச் பஞ்சோந்தி, கருத்து சித்திரம் போன்ற பகுதிகளுக்கு வாசகர்கள் பங்களிப்பை தருகின்றார்கள். நானும் பல முறை முயன்று வெற்றி பெற்றது இல்லை. சென்ற மாதம் இரண்டொறு பஞ்ச்கள் இடம் பெற்றது.    முதல் முறையாக கடந்த திங்களன்று 26-6-17 நாளிதழில் எனது கருத்து சித்திரம் இடம் பெற்றுள்ளது. நானே எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. பஞ்சுக்காக அனுப்பியது கார்டூனாக மலர்ந்து மகிழ்ச்சி தந்தது. அது எனது வேதனையை கொஞ்சம் மறக்கச் செய்தது. ஊக்கமளித்து வரும் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினருக்கு மிக்க நன்றி! உங்களின் பார்வைக்கு எனது கார்டூன்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி இணைய தளத்தில் கவிதை மணி பகுதியில் எனது கவிதைகள் பிரசுரம் ஆவதை அறிவீர்கள். கடந்த சில வாரங்களாக பிரசுரம் கண்ட கவிதைகள் கீழே தந்துள்ளேன். மேகம் போடும் தாளம்! கறுத்த வானத்தில் பெறுத்த மேகங்கள் கூடும் காலம்! சிறுத்த செடிகள் எல்லாம் அமுத மழை உறிஞ்ச மகிழும் நேரம்! வறுத்த வெயில் மறைந்து சிலிர்த்த காற்று எழும் காலம்! வெடித்த நிலங்கள் எல்லாம் நீரைக் குடித்து மகிழ  தவிக்கும் நேரம்! காய்ந்த குளங்கள் எல்லாம் மேய்ந்த விலங்குகள் மேடேறும் நேரம்! ஓய்ந்த கோடைக் காலம் சென்று ஓடைகள் எல்லாம் நீரோடும் நேரம்! வாடிய பயிர்கள் எல்லாம் உயிர் பிடிக்க வான் மழை பெய்யும் நேரம்! வானில் ஓடும் மேகமெல்லாம் தூணில் பறித்த சிற்பமென நகரும் காலம்! வறண்ட பாலைதனை சோலையாக்கிட வானமழை பொழிந்திட மேகக் கூட்டமெல்லாம் இசைத்திடும் தாளம்! மேகம் போடும் தாளம்! இது மேதினியை வாழ வைக்கும் நாதம்! மேடு பள்ளம் எங்கும் மக்கள் விரும்பிடும் தாளம்! முகிலம் போடும் தாளம்! அது அகிலம் விரும்பும் நாதம்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி : நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு