Posts

Showing posts with the label சிறுவர் பகுதி

கபீஷ் படக்கதை- குழந்தைகள் தின ஸ்பெஷல்.

Image
  989- 90 களில் எனது பொழுது போக்கு கிரிக்கெட் விளையாடுவது. அதை விட்டால் புத்தகம் படிப்பது, கோகுலம், ராணிகாமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, என ஏகப்பட்ட சிறுவர் இதழ்கள் அப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது. வாண்டுமாமா ஆசிரியராக இருந்து வழி நடத்திய பூந்தளிர் சிறுவர் இதழ்தான். இதில்தான் படக்கதைகள் அதிகம் வரும். சிறுவர்களை ஈர்க்கும். இந்த உத்தியை அறிந்து நிறைய படக்கதைகள், அறிவுப்பூர்வமான தகவல்கள் என பூந்தளிர் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் கபீஷ் படக்கதை என்னை மிகவும் கவர்ந்திழுத்து வாசிக்க வைத்த ஒன்று. பூந்தளிர் வீட்டுக்கு வந்தவுடனே யார் முதலில் படிப்பது என்று எனக்கும் என் தங்கைகளுக்கும் போட்டியே நடக்கும். கடைசியில் நானே வென்று ஒரு அரை மணி நேரத்தில் வாசித்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பேன் அடுத்த இதழ் வரும் வரை. பூந்தளிர் இதழ் 90 களில் இருந்து வாங்கினாலும் பல இதழ்கள் சேமிக்கவில்லை. மீதமிருந்த இதழ்களில் கபீஷ் படக்கதைகளை தொகுத்து சேமித்து வைத்திருந்தேன். அந்த புத்தகம் இன்று எ...

அரச மரத்தின் அவசர புத்தி.

Image
    அரச மரத்தின் அவசர புத்தி.    நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு திருப்பாதிரி புலியூர் என்ற கிராமத்தின் ஏரிக்கரையையின் மீது ஓர் அரசமரம் ஓங்கி வளர்ந்து இருந்தது. அதன் கிளைகள் நன்கு அடர்ந்து விரிந்து கரையோரம் நிழலாக விழுந்து சாலையில் செல்பவர்களுக்கு இளைப்பாறும் இடமாகவும் இருந்தது.   அந்த அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. ஏரிக்கரைபிள்ளையார் என்று அப்பிள்ளையாரை மக்கள் அழைத்தனர். ஊர்மக்கள் அந்த வழியாக செல்லும் போது அந்த பிள்ளையாரை வணங்கி வழிபட்டு செல்வது வழக்கம்.   குறிப்பாக முக்கியமாக ஏதாவது காரியத்தில் வெற்றிபெற வேண்டுமெனில் அந்த பிள்ளையாருக்கு தோப்புகரணம் போட்டு வணங்கிவிட்டுச்செல்வர். அப்படி வணங்கிவிட்டு சென்றால்அவர்கள் செல்லும் காரியம் ஜெயமாகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.   இப்படி அந்த மக்கள் பிள்ளையாரை வணங்கிச்செல்வதை   அங்கு வளர்ந்திருந்த அரசமரம் தன்னைத்தான்   வணங்கிவிட்டுச் செல்கிறார்கள் என்று தவறாக நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டது. நான் தான் இவ்வூரிலேயே பெரியவன். எனவே   இவ்வூர் மக்கள் எல்லோரும் என்னை தினமும்...

பிட் அடிக்காதே! பாப்பா மலர்

Image
  பிட் அடிக்காதே! ஒன்பதாம் வகுப்பிற்கான ஆண்டிறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.குமார் ஆசிரியர் தன்னை பார்க்கிறாரா? என்று பார்த்தான் அவர் பார்வை வேறுபக்கம் இருக்கவே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறு தாள் ஒன்றினை எடுத்து விடைத்தாளின் அடியில் வைத்து எழுத ஆரம்பித்தான்.   அவன் நெஞ்சம் படபடத்தது. கை நடுங்கியது. இது அவனுக்கு புதுப்பழக்கம். நன்றாக படிக்க கூடியவன் தான் குமார். ஆங்கிலம் தான் சரியாக வராது. அதிலும் அடித்து பிடித்து பாஸாகிவிடுவான். எல்லாவற்றிலும் எண்பது மதிப்பெண் எடுத்தால் இதில் மட்டும் நாற்பது எடுப்பான்.   ஆசிரியர்களும் கொஞ்சம் முயற்சி எடுத்து படித்தால் நல்ல மதிப்பெண்களை எடுத்துவிடலாம் குமார் வருந்தாதே என்று அவனை ஊக்கப் படுத்துவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறினான். அப்போதுதான் எப்போதும் கடைசி பெஞ்சில் அமர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டு ஆசிரியர்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கும் மணி அவனுக்கு ஒரு யோசனை சொன்னான்.   ”குமாரு! ஆங்கிலம் அன்னிய மொழிடா! அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது எதுக்கு அதுங்கூட போராடுறே? ஈஸியா மார்...

யார் பெரியவன்? சிறுவர் கதை

Image
  யார் பெரியவன்? ஆதியூரில் இரண்டு புலவர்கள் வசித்துவந்தனர். ஒருவர் வேலப்பகவி மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தது. புலவர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கலாமா? கூடாதல்லவா? இது அவர்களுக்குத் தெரியவில்லை.ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டுக் கொள்வர்.    ஒருநாள் வேலப்பர் வெளியில் கிளம்பினார். அதை அறிந்த சந்திரரும் வேலப்பன் எங்கோ செல்கிறானே எதற்காகவோ என்று அவரை பின் தொடர்ந்தார். சந்திரகவி தன்னை பின் தொடர்வதை அறிந்த வேலப்பரும் நடையை விரைவாக்கினார். ஆனாலும் சந்திரகவி விடுவதாய் இல்லை.பொழுதோ சாய்ந்துவிட்டது. அச்சமயம் எதிரே ஒரு சத்திரம் காணப்பட்டது.    சத்திரம் என்பது ஒரு தங்குமிடம். இது அக்காலத்தில் வழியிடங்களில் வழிப்போக்கர்கள் தங்கி பசியாறி களைப்பு நீங்கி செல்ல உதவும். இங்கு இலவசமாக உணவும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இச்சத்திரங்களை அரசர்களும் செல்வந்தர்களும் கட்டிவைத்து பராமரித்து வந்தனர். அத்தகைய ஒரு சத்திரத்தில் தங்க வேலப்பர் முடிவெடுத்தார். சத்திரத்தின் உள்ளே நுழைந்தார். அவரை தொடர்ந்து சந்திரரும் நுழைந்தார். ...

வாய்சவடால் வானமலை! பாப்பாமலர்! சிறுவர்கதை!

Image
  வாய்சவடால் வானமலை!      நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. முன்னொரு காலத்தில் கோணங்கிப் பட்டினம் என்றொரு தேசம் இருந்தது. அந்த தேசத்திலே இரண்டு வாலிபர்கள் வசித்து வந்தனர். முதலாமவன் வாய்சவடால் வானமலை. அவன் எல்லா காரியத்தையும் வாய்சவடால் அடித்தே சாதித்துவிடுவான். மற்றொருவன் அடிதடி அம்பலவாணன். அவன் பிறரை அடித்து பயம் காட்டியே காரியத்தை சாதித்துவிடுவான்.      இந்த இரு வாலிபர்களும் அந்த தேசத்தில் உடன்பிறந்த அண்ணன் தம்பி போல ஒன்றாய் உலாவி தங்கள் காரியத்தை சாதித்து வந்தார்கள். ஒருநாள் அடிதடி அம்பலவாணன் வாய்சவடால் வானமலையிடம்.” நான் நாளைக்கு காளிக்கு ஓர் ஆட்டை பலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டுவிட்டேன். இன்று இரவு எங்காவது போய் ஓர் ஆட்டுக்கிடாவை தூக்கிவர வேண்டும். அதற்கு உன் உதவி தேவை!” என்று கேட்டான்.    வாய்சவடால் வானமலை,”ஓ! அதற்கென்ன! பேஷாக ஓர் ஆட்டுக்கிடாவை இன்று கிளப்பி வந்துவிடலாம். அடுத்த கிராமத்தில் ஓர் ஆட்டுக்கிடை இருக்கிறது. இரவு அங்கே சென்றோமானால் ஓர் ஆட்டுக்கிடாவை தூக்கிவந்துவிடலாம்”. என்று சொன்னான்.      அன்று இர...

காணாமல் போன கேமரா! சிறுவர் கதை

Image
    காணாமல் போன கேமரா !    நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   அடர்ந்து வளர்ந்திருந்த அந்தக் காடு மனிதர்களின் கண் படாமல் செழிப்பாக வளர்ந்து இருந்தது . காட்டில் கரடிக் கூட்டமும் குரங்கு கூட்டமும் மைனா ஒன்றும் நட்பாக இருந்தது .   ஒரு நாள்அந்த காட்டுக்குள்   பெரிதாக “ டமார் ” என்று ஒரு சத்தம் .   தீப்பற்றி பொசுங்கும் வாசனை பரவியது .    கரடிகள் மிகவும் பயந்து போய் தான் தங்கியிருந்த அந்த சிறு புதருக்குள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டன . வெளியே “ காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள் !” என்ற கூக்குரலும் முனகலும் கேட்டது      அங்கே ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து கிடந்தது . அதன்   இஞ்சின் பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது . ஹெலிக்காப்டரின் உள்ளே நான்குபேர் இருந்தனர் . அதில் இருவர் மயங்கியிருக்க ஒரு பெண் மட்டும் முனகிக் கொண்டிருந்தாள் .      கரடிகள் விழுந்து கிடந்த ஹெலிகாப்டரை வியப்பாய் பார்த்தன . இதுவரை இது போன்ற வாகனங்களை அவைகள் கண்ட...