காணாமல் போன கேமரா! சிறுவர் கதை
காணாமல்
போன கேமரா!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
அடர்ந்து வளர்ந்திருந்த அந்தக் காடு மனிதர்களின் கண் படாமல் செழிப்பாக வளர்ந்து இருந்தது. காட்டில் கரடிக் கூட்டமும் குரங்கு
கூட்டமும் மைனா ஒன்றும் நட்பாக இருந்தது.
ஒரு
நாள்அந்த காட்டுக்குள் பெரிதாக
“டமார்” என்று ஒரு சத்தம்.
தீப்பற்றி பொசுங்கும் வாசனை பரவியது.
கரடிகள் மிகவும் பயந்து போய் தான் தங்கியிருந்த அந்த சிறு புதருக்குள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டன. வெளியே “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்ற கூக்குரலும் முனகலும் கேட்டது
அங்கே ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்
இஞ்சின் பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஹெலிக்காப்டரின் உள்ளே நான்குபேர் இருந்தனர். அதில் இருவர் மயங்கியிருக்க ஒரு பெண் மட்டும் முனகிக் கொண்டிருந்தாள் .
கரடிகள் விழுந்து கிடந்த ஹெலிகாப்டரை வியப்பாய் பார்த்தன. இதுவரை இது போன்ற வாகனங்களை அவைகள் கண்டதில்லை. மிகவும் பயந்து போய் புதருக்குள் போய் பதுங்கிக் கொள்ள அங்கே
குரங்கு மாருதியுடன் வந்தான் காட்டுவாசி சிறுவன் மோரா.
பயப்படாதீங்க! ஜாம்பா! இவங்க நகரத்துலே வசிக்கும் மனிதர்கள் இவங்க வந்த வாகனம் பழுதாகி இங்கே விழுந்திருக்கு! வாங்க காப்பாத்துவோம்!” மோரா குரல் கொடுத்தான்.
மோராவும் மாருதியும் அந்த உடைந்த ஹெலி காப்டரில் இருந்து மயங்கிக் கிடந்த மனிதர்களையும் அரை நினைவில் இருந்த பெண்ணையும் வெளியே
கொண்டுவந்தனர். அதே
சமயம் அங்கே பெருமழை பெய்யவும் ஹெலிகாப்டரில் பற்றியிருந்த தீ அணைந்தது.
”நல்லவேளை! மழைபெய்தது இல்லேன்னா பெரும்
தீ விபத்து ஏற்பட்டிருக்கும்” என்றான் மோரா.
”மோரா! ஆனால்
இவர்களை என்ன செய்வது?”
” இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காட்டிலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடலாம்.”
”இவர்களை எப்படி உன் குடிலுக்கு அழைத்துச் செல்வாய்? மயங்கி இருக்கிறார்களே!”
”கவலை வேண்டாம்! நான் இருக்கிறேன்!” என்று பிளிறியபடியே அங்கே வந்தது யானை கஜா.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குட்டிக் கரடி ஜாம்பாவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது. ”கஜா அண்ணா! நானும் உங்களோட
மோராவுடைய வீட்டுக்கு வரட்டுமா? ”என்று கேட்டது.
”தாராளமா வாயேன்! மோரா வீட்டிலே நிறைய தேன் இருக்கும். தேனுன்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே!” என்றது கஜா.
”தேனுக்கு ஏன் தான் இப்படி அலையறானோ ஜாம்பா. எனக்கு வாழைப்பழம்தான் ரொம்பப் பிடிக்கும்! அதை சாப்பிடறதுலே எந்த ரிஸ்கும் இல்லே!” என்றது மாருதி.
யானை
கஜா துதிக்கையால் மயங்கி கிடந்த நால்வரையும் ஒவ்வொருவராய் தூக்கி தன் முதுகில் வைத்துக் கொண்டு நடக்க
அவற்றின் பின்னால் மோரா நடக்க கரடி ஜாம்பா பின் தொடர்ந்தது.
”இவ்வளவு
நிதானமா நடக்க நமக்கு ஆகாது!
எனக்கு நிறைய வேலை இருக்கு! பை! ”என்றபடி மரத்தின் மேல் தாவியது மாருதி.
”அப்படி என்ன தலை போகிற வேலைன்னு எனக்குத் தெரியாதா? வாழைப்பழம் போய் சாப்பிடனும் அதானே! ”என்று சிரித்தது கரடி ஜாம்பா.
”உனக்கு
தேன் எப்படி முக்கியமோ அப்படி எனக்கு என் வாழைப்பழம்! ரொம்பத்தான் ஓட்டாதே!”
என்று மரத்தில் தாவியபடியே பதிலுரைத்தது மாருதி.
ஓர்
அரைமணி நேரத்தில் மோராவின் குடிசைக்கு இந்த கூட்டணி வந்து சேர்ந்தது. முதலுதவி சிகிச்சைக்குப்பின் அந்தப்பெண் கண்விழித்தாள். இவர்களைப்பார்த்து மிரண்டாள்.
”பயப்படாதீங்க! இவங்க என்னோட நண்பர்கள்தான்! உங்களை எதுவும் செய்ய மாட்டாங்க! நீங்க யாரு? எப்படி விபத்து ஏற்பட்டுச்சு?”
”என் பேர் மாயா! இவங்க என் கூட வேலை செய்றவங்க திலிப், ரோஹித், அப்புறம் அவர் ஹெலிகாப்டர் பைலட் ப்ரேம்”.
”நாங்க
டிவியிலே ப்ரோகிராம் பண்றோம். வைல்ட் லைஃபை லைவா காட்டுவோம். டிஸ்கவரி சேனல்ல!” ”இந்த காட்டை வீடியோ எடுக்கத்தான் ஹெலிகாப்டர்ல வந்துகிட்டிருந்தோம்! திடீர்னு ஹெலிகாப்டர்
கட்டுப்பாட்டை
இழந்து கீழே
விழுந்து விட்டது. என்றவள். ஐயோ! என் காமிரா,” என்றாள்.
மோரா
சிரித்தான்…
”நீங்க உயிர் பிழைச்சுதே பெரிய விஷயம்! உங்க காமிரா காணாமப் போச்சேன்னு அழறீங்களே!”
”அந்த காமிரா ரொம்ப துல்லியமானது. ஒரு சின்ன அசைவைக் கூட படம் பிடிக்கும் ரொம்ப விலையுயர்ந்தது தெரியுமா?”
” உயிரை விடவா?” என்றான் மோரா.
அங்கே இருந்த மூவரில் பைலட்டிற்குதான் பெரிய காயம் மற்றவர்களுக்கு லேசான காயம் பட்டிருந்தது.
”மாயா நீங்க எந்த பயமும் இல்லாம இங்கே இருக்கலாம்! நான் போய் வைத்தியரை கூப்பிட்டு வரேன். அப்படியே காட்டிலாகா அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்திடறேன்”.
”ஜாம்பா
உனக்குத் தேவையான தேன் இந்த குடுவையிலே இருக்கு குடிச்சுட்டு இவங்களோட
இரு! மோரா கிளம்பிப் போக குடுவையிலிருந்த தேனை குடிக்க ஆரம்பித்தான் ஜாம்பா.
மாயா தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தாள். அதில் இன்னும் சார்ஜ் இருந்தது. ஆனால் சிக்னல் இல்லை. கேமிராவை ஆன் செய்து தேன் குடிக்கும் ஜாம்பாவை வீடியோ எடுக்கத் துவங்கினாள்.
அவள்
வீடியோ எடுப்பது பற்றி ஒன்றும் புரியாத ஜாம்பா குடுவையில் இருந்த தேனை ருசித்துக் கொண்டிருந்தான். தேன் முழுவதும் குடித்துவிட்டு குடுவையை தூர எறிந்த போது தான் எடுத்த வீடியோவை மாயா ஜாம்பாவிடம் காண்பிக்க
அதில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து ஜாம்பா மிரண்டான். அதைக் கண்டு அந்தப் பெண் சிரித்தாள்.
”டெடி…! பயப்படாதே!
இது நீ தான்…! ”என்றாள் மாயா!
”நான்
டெடி இல்லே! ஜாம்பா! ”என்றான் ஜாம்பா.
”ஓ நீ ரொம்ப அழகா பேசறியே!”
”ஆனா
காட்டிலே எல்லோரும் என் குரல் கர்ண கடூரமா இருக்கிறதா சொல்றாங்க!”
”அப்படியா சொல்றாங்க!ஏன்?
”குயிலின்னு ஒரு
பறவை இருக்கா காட்டுலே தெரியுமா?”
ஜாம்பா கேட்க,
”அப்படியா? தெரியாதே!”
”பார்க்க
கன்னங்கரேல்னு
இருப்பா! ஆனா அவளுக்குத் தான் பெரிய பாடகின்னு நினைப்பு. சாயந்திரமானா போதும் பாட ஆரம்பிச்சிருவா!”
”அவ
பாடும் போது யாரும் டிஸ்டர்பன்ஸ் பண்ண கூடாது! பண்ணா கோவிச்சுக்குவா?”
ஒருநாள்
அவ பாடும்போது நான் கூட சேர்ந்து பாடிட்டேன்! அவ தலையிலே அடிச்சுக்கிட்டு “நீயெல்லாம் பாடலைன்னு யார் அழுதா? இனிமே பாடறேன்னு எங்கேயும் போய் பாடிடாதே! எல்லோரும் ஓடிடப் போறாங்கன்னு செமையா கலாய்ச்சுட்டா!”
”அடப்பாவமே!”
”நீங்க
பாவப்பட்டு என்ன புண்ணியம்! எனக்கு நல்ல குரல் இல்லேன்னு காடே சொல்லி அசிங்கப்படுத்திட்டா அந்த குயிலி!”
குயிலியும் ஏன்
இந்தக்காடே உன்னை கொண்டாடறமாதிரி பண்றேன்! நீ
எங்க
ப்ரோக்ராம்லே பார்டிசிபேட் பண்ணு! டான்ஸ் பண்ணு! காமெடி பண்ணு! அதை வீடியோவா எடுத்து சேனல்ல போட்டுட்டா அப்புறம் ஜாம்பாவுக்கு உலகம் பூரா ரசிகர்கள் உருவாகிடுவாங்க!”
”நிஜமாவா?”
”நான்
என்ன பொய்யா சொல்ல போறேன்! உன்னை பெரிய ஹீரோவா நான் மாத்திக்காட்டறேன்!”
ஜாம்பாவின்
கண்கள் அகலமாக விரிந்தன. பலர் கூடியிருக்கும்
சபையில் அது வித்தைகள் செய்ய எல்லோரும் கைதட்டி ஜாம்பா! ஜாம்பா! என்று குரல் கொடுப்பது போல கனவு காண ஆரம்பித்தது.
”ஏய்! ஜாம்பா
கனவு காணறியா?”
திடுக்கிட்டு
முழித்த ஜாம்பா, வெட்கத்துடன் ”ஆமா” என்றது.
”ஜாம்பா! நீ ஒரு ஹெல்ப் பண்ண்ணுமே?”
என்றாள் மாயா.
”என்ன பண்ணணும்?”
”நாங்க
வந்த ஹெலிகாப்டர்ல வீடியோ கேமிரா கொண்டுவந்தோம்! அது ஆக்ஸிடெண்ட் ஆகும் போது எங்கேயோ கீழே விழுந்திருச்சு! அதை தேடி எடுக்கணும்! ரொம்ப காஸ்ட்லியான கேமரா அது! அதை மட்டும் தேடி எடுத்திட்டா
உன்னை ஹீரோவாக்கிடறேன்!”
”அதை நான் எங்கேன்னு போய் தேட!”
”அது ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது! அந்த கேமராவிலே ஜி.பி.எஸ் ஒண்ணு பொருத்தியிருப்பாங்க!
இதோ இந்த போன்லே அந்த காமிரா இருக்கிற எடம் காட்டும்.
இது காட்டுற வழியிலே போய் தேடி எடுக்க வேண்டும் அவ்வளவுதான்!”
”அப்புறம் எதுக்கு என்னை கூப்பிடறே! இந்த மிஷின் தான் வழிக்காட்டும்கிற இல்லே! அந்த வழியே போய் எடுத்துக்கிட வேண்டியதுதானே!”
”ஜாம்பா! இது
காடு! இந்த காட்டுலே எங்கேங்கே எது இருக்கும்னு எனக்குத் தெரியாது! எந்த மூலையிலே எந்த ஆபத்து வரும்னு சொல்ல முடியாது! நீ இந்த காட்டுலேயே வாழறவன் உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும் அதனாலே உன் துணை தேவைப்படுது.”
”நீ சொல்றது எல்லாம் சரிதான்! ஆனா இந்த விஷயத்துலே நான் தனிப்பட்ட முறையிலே எதுவும் செய்ய முடியாது! என்னோட நண்பர்கள் மாருதி, கஜா, மோரா, மைனா ஜில்லுன்னு எல்லோரும் சேர்ந்துதான் உதவ முடியும். என்னை விட மோராவுக்கும் மைனாவுக்கும் காடு எல்லாம் அத்துப்படி.!”
”மாருதி
மரம் விட்டு மரம் தாவி நல்லா தேடுவான். ஆபத்து வந்தா சட்டுன்னு சொல்லுவான். கஜா நல்ல பலசாலி. அவன் நம்மளோட இருக்கிற வரைக்கும் எந்த ஆபத்தும் நம்ம கிட்டே வராது.”
”நீ
சொல்றதும் சரிதான் இவங்க எல்லோரையும் நம்ம திட்டத்துலே சேர்த்துப்போம்! ”
”ஆனா இதுக்கு மோரா ஒத்துப்பானான்னு தெரியலை! உங்களை காப்பாற்றினாலும் உங்க காமிராவை காப்பாற்ற அவன் விரும்ப மாட்டான். அதன் மூலம் படம் பிடிச்சு நீங்க காட்டை விளம்பரப்படுத்துவதை அவன் கொஞ்சமும் விரும்ப மாட்டான்.”
”அப்ப
நீங்க மட்டும் உதவுங்க! மோரா வராமப் போனா போகட்டும்.”
”அது
முடியாது மாயா! மோரா இல்லாம நாங்க தனியா எந்த காரியத்திலும் இறங்கமாட்டோம்! அதுவும் இல்லாம என் சுயநலத்துக்காக நட்பை இழக்கமாட்டேன்!” ஜாம்பா சொல்ல கைத்தட்டியபடி உள்ளே வந்தான் மோரா.
”மாயா! இதுதான் நகரத்து மனிதர்களுக்கும் காட்டு வாசிகளுக்கும் இருக்கிற வேற்றுமை. உங்க சுயநலத்துக்காக நீங்க எதுவேணா செய்வீங்க! ஆனா காட்டுவாசிகள் நாங்க செய்யமாட்டோம்! எங்களை அவ்வளவு சீக்கிரத்தில் பிரிக்க முடியாது!”
”சாரி
மோரா! நான் கேட்டது தப்புதான்! மன்னிச்சிடு ! ”அது ரொம்ப விலையுயர்ந்த கேமிரா! வாடகைக்கு எடுத்து வந்தேன். இப்போ திருப்பிக் கொடுக்கலைன்னா அதனோட விலையை கொடுக்கணும்! என்கிட்டே அவ்ளோ பணம் இல்லை! நீ மட்டும் கொஞ்சம் உதவி பண்ணா அந்த காமிராவை கண்டுபிடிச்சு திருப்பிக் கொடுத்திடலாம்.”
”அப்ப
ஒரு சத்தியம் பண்ணுவீங்களா?”
“என்ன பண்ணனும்?”
”காட்டு
விலங்குகளுக்கு
எந்த தீமையும் பண்ண மாட்டேன்னும் இந்த காட்டை வெளியுலகத்திற்கு
படம்பிடிச்சு காட்டமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க!”
”மோரா! நீ
என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே! நான் காட்டுலே வாழற எந்த மிருகத்தையும் துன்புறுத்த மாட்டேன்.காட்டு விலங்குகள் பற்றி மக்கள் அறிஞ்சுக்கணும்னுதான் வீடியோ எடுத்து விழிப்புணர்வு பண்றோம். இந்த காட்டுலே இருக்கிற சின்ன பூச்சி முதல் பெரிய விலங்குகள் வரை இயற்கையா எப்படி வாழுதுன்னுதான் மக்களுக்கு சொல்றோம்.”
”ஆனா
உங்களை மாதிரி நிறைய பேர் காட்டுக்குள்ளே படம் எடுக்கிறேன்னு வந்துடறாங்க! இங்கே நிறைய மனித நடமாட்டம் அதிகமாவுது அவர்களாலே இங்கே சூழல் மாசடையது நிறைய
குப்பைகள் ப்ளாஸ்டிக் கழிவுகள் சேருது.அதைத் தெரியாம சாப்பிட்டு நிறைய மிருகங்கள் செத்துப் போகுது.”
”ஆனா விலங்குகளின் பழக்க வழக்கங்கள் இந்த இயற்கையான சூழல் இதைப்பத்தி மக்கள் தெரிஞ்சுக்கணும்னா வேற வழி இல்லையே!”
”ஏன் தெரிஞ்சுக்கணும்! தெரிஞ்சிக்கிடறதாலே எங்களுக்குத் தீமைதானே ஏற்படுது?”
”என்ன ஜாம்பா நீயும் சேம் சைட் கோல் அடிக்கிறே!”
”மோரா
பக்கம் தான் நியாயம் இருக்குது! நான் அவன் பக்கம் நிற்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்”
”அப்ப
என்னோட காமிரா? அதுக்கான நஷ்ட ஈட்டை தரணும்னா என்னோட ரெண்டு வருஷ சேமிப்பை இழக்க வேண்டியிருக்கும் ஜாம்பா!.”மாயாவின் முகம் சுண்டிப்போனது. மோரா மவுனித்தான்.
”சரி மோரா! நான் இனிமே படம் எடுக்க காட்டுக்குள்ளே வரமாட்டேன். காமிராவை மட்டும் எடுத்துக் கொடுத்துடுங்க!” என்றாள் மாயா.
”பாவம் மோரா! மாயா ரொம்பவும் கெஞ்சறாங்க!
இந்த ஒரு முறை எடுத்துக் கொடுத்துடுவோம்.” என்றது ஜாம்பா.
அப்போது வெளியே ஜீப் சத்தம் கேட்டது.
”காட்டிலாகா ஆபிஸர்கள்
வந்துட்டாங்க! காயம்பட்ட இவங்களை அவங்க ஜீப்புலே கொண்டுபோய் மருத்துவ மனையிலே விட்டுடுவாங்க! ”மோரா சொல்லிக்கொண்டிருக்கும் போதே இரண்டு அதிகாரிகள் குடிசைக்குள் வந்து காயம் பட்டிருந்தவர்களை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.
மாயா
போனில் ஜி.பிஎஸ் ஆன் செய்தாள். அதில் ஒரு புள்ளி உயிர்பெற்று எழுந்து ஒரே இடத்தில் நில்லாமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்தது.
”என்ன மாயா? உங்க காமிராவுக்கு கால் இருக்கா! நடந்து போய்கிட்டிருக்கு” என்றான் மோரா. ”இல்லை மோரா யாரோ காமிராவை தூக்கிட்டுப் போறாங்க!” என்றாள் மாயா.
அந்த காட்டில் உள்ள விலங்குகளில்
ஓநாய்க் கூட்டம் மட்டும் விதிவிலக்காய் இருந்தது. அதிலும் ஓநாய் லில்லி ரொம்பவும் மோசமானது.
காட்டில் எந்த விலங்கானாலும் ஓநாய் லில்லியிடம் கொஞ்சம் பயந்துதான் ஆகவேண்டும். சிங்க ராஜாவின் படைத் தளபதி என்றால் சும்மாவா?
சிறிய
விலங்குகளை அது சட்டையே செய்யாது. யானை, புலி, சிறுத்தை போன்றவைகளிடம்தான் மரியாதையாக பேசும்.
லில்லிக்கு
அன்று நிலைமை சரியில்லை! காடெங்கும் சுற்றி ஒரு முயலொன்றை வேட்டையாட குறி வைத்து புதரொன்றில் பதுங்கி இருந்தது லில்லி. சரியாய்க் கணித்து பாயத்தயார் ஆன போது அதன் மண்டை மீது பலமாக ஏதோ ஒன்று தாக்கியது. அப்படியே மயங்கிச் சரிந்தது லில்லி.
அப்படி தாக்கியது வேறெதுவும் இல்லை. மாயாவின் விலையுயர்ந்த கேமிராதான்.கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரில் இருந்து தவறி சரியாக லில்லியின் தலைமீது விழுந்தது கேமரா.இந்த சந்தடியில் முயல் தப்பிவிட்டது
கிட்டத்தட்ட
ஒரு மணிநேரத்திற்கு பிறகு நினைவு திரும்பியது லில்லிக்கு. அதற்கு பயங்கர கோபம். அதன் கண்களில் அந்த வீடியோ காமிரா பளபளப்பாகத் தென்பட்டது.
“ ஏய்! இன்னும்
இங்கேதான் இருக்கிறாயா? என்னைத் தாக்கிவிட்டு ஓடியிருப்பாய் என்று பார்த்தேன்!” மறைந்திருந்து தாக்குகிறாயே கோழை! வா! என்னோடு மோது! ”அறைக்கூவல் விடுத்தது லில்லி.
” ஏய்!
சும்மா இருக்கிறாயா? என் கோபத்தை கிளப்பாதே! வா! வந்து மோது!” பதில் இல்லாது போகவே முன்னங்கால்களால் நிலத்தை கீறி பற்களைக்கடித்து கோபமாய் சீறியது.
மறுபக்கம் மவுனமே பதிலாக எதிரி தன்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே என்றுஆத்திரத்துடன் அந்த கேமிரா மீது பாய்ந்து விழுந்ததில் அதன் வயிற்றுப்பகுதியில் கேமிரா ஊன்றி வலி எடுத்தது. ”ஏய் உன்னை
என்ன செய்கிறேன்பார்! கேமராவை வாயில் கவ்விக்கொண்டு ஓடியது லில்லி
அப்போதுதான்.
மாயாவும் ஜாம்பாவும்
காமிரா நகர்வதைப் போனில் பார்த்தார்கள்.
ஜாம்பா
உன்னிப்பாக கேமிரா நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவன் முகம் கலவரம் ஆனது.அதைக்கண்ட மோராவும் போனை எட்டிப்பார்த்துக் கவலையுடன்
”இனிமே
உன் கேமரா கிடைக்காது!” என்றான். மாயா சோர்ந்து போனாள்.
அப்போது அங்கே வந்த மாருதி, ”மோரா, ஜாம்பா! என்ன பார்த்துட்டிருக்கீங்க அந்த கருவியிலே? என்றான்
” மாயாவோட தொலைஞ்சுபோன காமிராவைத் தேடறோம்!”
”கிடைச்சிருச்சா?”
”ஊகும்! கிடைச்சாலும்
கிடைக்காது!”
ஜாம்பா! புரியும்படியா சொல்லு! நீ என்ன சொல்றே?”
அப்போது
அங்கே மைனா வந்தது.
”எல்லாம் கும்பலா என்ன பேசிக்கிட்டிருக்கீங்க? நான் ஒரு அதிசயத்தை சொல்லட்டுமா?”
”அப்படி
என்ன அதிசயம்!”
”இன்னைக்கு மத்தியானம்
ஓநாய் லில்லி ஒரு முயலுக்கு குறி வைச்சாள். அப்ப பார்த்து கருப்பா ஒரு ஆயுதம் அவன் மண்டை மேல விழுந்தது. உடனே அவ மயக்கம் ஆயிட்டா. மயக்கம் தெளிஞ்சு எழுந்த லில்லி கோபமாகி அதை எடுத்துக்கிட்டு போயிட்டிருக்கா!”
”இதைத்தான் நான் சொன்னேன்.இனிமே கேமரா நம்மளுக்கு
கிடைக்காது!” ஜாம்பா சொல்ல” ஏன்?” என்றாள் மாயா.
”ஓநாய்
லில்லிதான் கேமராவை தூக்கிட்டுப் போறா! அவ கிட்டேயிருந்து அதைப்பிடுங்க யாருக்கு தில் இருக்கு!” என்றான் ஜாம்பா
”எனக்கு தில் இருக்கு! உங்க உதவியிருந்தா கேமிராவை மீட்டுடலாம்!” என்றான் மோரா.
” ஓநாய் லில்லிதான் கேமிராவை கொண்டு போயிருக்கணும்னு ஜி.பி.எஸ் பார்த்தே முடிவு பண்ணிட்டேன். அது காட்டுன பாதை ஓநாய்கள் வாழற மலைப்பகுதி.
ஒரு ஓநாய்தான்
காமிராவை எடுத்துட்டு போகுதுன்னு நான் முதல்லே முடிவு செஞ்சேன்.!
”கரெக்ட் மோரா நானும் அதைத்தான் கெஸ் பண்ணேன். மைனாவும் என்னோட சந்தேகத்தை உறுதிப்படுத்திடுச்சு! அதுக்கு மேலே லில்லிதான் கேமராவை எடுத்துட்டு போயிருக்குன்னு உறுதியா தெரிஞ்சிருச்சு.” என்றான் ஜாம்பா.
”நாம
சாமர்த்தியமா
லில்லியை ஏமாத்தித்தான் கேமராவை வாங்க முடியும்!”
“எப்படி?”
மோரா
அவர்கள் காதில் ரகசியமாய் ஏதோ சொன்னான்.
”உன்னோட திட்டம் எல்லாம் சரியாத்தான் இருக்கு! ஆனா லில்லி அசருவாளா? என்றது மைனா.
முயற்சிப்போம்! என்றது ஜாம்பா.
காட்டின்
ஒதுக்குப் புறமாக அமைந்திருந்தது அந்த ஓநாய்களின் மலை. பெரும்
பாறைகளும் சிறு பாறாங்கற்களும் குவிந்து கிடக்க அங்கே ஓர் குகையில் கையில் காமிராவுடன் அமர்ந்திருந்தது
லில்லி.
அங்கே
மூச்சிறைக்க பறந்து வந்த மைனா!” தளபதியாரே! வணக்கம்! ஓர் அவசர செய்தி! சிங்கபிரான்
உங்களை உடனே அவரது குகைக்கு வரச்சொல்லி என்னிடம் சொல்லி அனுப்பினார். தங்களை ஓர் மர்மமான ஆயுதம் தாக்கியதாமே! அதனால் காட்டுக்கே ஆபத்தாம் அதை எடுத்துக் கொண்டு உடனே வருமாறு சொன்னார். ”என்றது.
மைனாவை
அலட்சியமாக பார்த்தது லில்லி!” ஏய் மைனா! உன்னை அரசர் எப்போது பார்த்தார்? நீ ஏன் அங்கு போனாய்? என்னை ஆயுதம் தாக்கியது அவருக்கு எப்படித்தெரியும்? என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டது.
”அரசரிடம் ஆயிரம் ஒற்றர்கள் இருப்பார்கள்! அதெல்லாம் நான் கேட்க முடியுமா? ஆனால் நம் ஒற்றர்பிரிவுத்தலைவர் நரியாரை நான் அங்கே கண்டேன்.”என்றது மைனா.
” எல்லாம் குள்ளநரிப்பயலின் வேலைதானா? அவன் சூழ்ச்சி எல்லாம்என்னிடம் பலிக்காது! என்னை தாக்கிய இந்த மர்ம ஆயுதத்துடன் மன்னரை காண இப்போதே நான் செல்கிறேன்.”
ஓநாய்
கேமராவுடன் புறப்பட்டு சில நிமிடங்களில் எதிரே மாருதி எதிர்ப்பட்டது.
”தளபதியாரே! என் பணிவான வணக்கங்கள்! ”நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கையில் இருப்பது துரதிருஷ்டமான ஒரு பொருள். அதனுடன் சென்று மன்னரை பார்ப்பது உங்களுக்குத்தான் ஆபத்து.”
”என்னது இது துரதிருஷ்டமான பொருளா?”
”ஆமாம் இது மிகவும் துரதிருஷ்டமான ஒரு பொருள்தான்! இதை வைத்திருப்பவர்களை ஆபத்து துரத்தும்!”
”இதெல்லாம் நம்புகிறார் போல இருக்கிறதா?” உனக்கென்ன புத்தி மழுங்கிவிட்டதா?”
அப்போது
குன்றின் மீதிருந்து மறைவில் இருந்துகொண்டு சில பாறாங்கற்களை உருட்டி விட்டான் மோரா.
அங்கே கத்திக்கொண்டே ஓடிவந்தது கரடி ஜாம்பா ”தளபதியாரே நகருங்கள் நகருங்கள்! பாறைகள் உருண்டு வருகின்றது !” லில்லி விலகவும் பாறை உருண்டோடி ஒரு மரத்தில் முட்டி நின்றது. ஒருநிமிடம் வெலவெலத்த ஓநாய்
”குரங்காரே! நீங்கள் சொல்வது உண்மைதான் போலிருக்கிறது! என்று தயக்கமாய் சொன்னது.
”இதை
எடுத்துப் போவது முக்கியமா? உங்கள் உயிர் முக்கியமா என்று யோசியுங்கள்! இரண்டு முறை இதனால் உங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. மன்னரை ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்”.
”ஆமாம் தளபதியாரே! குரங்கார் சொல்வது சரிதான்! உங்கள் கையில் இருப்பது துரதிருஷ்டமான பொருள்தான். இதை தூர எறியுங்கள் என்றது
ஜாம்பா.
”ஆனாலும் இதை கொண்டு வருமாறு மன்னர் சொல்லிவிட்டாரே!. ?”
”இதை
மன்னரிடம் கொடுக்கும் போது ஏதாவது துர் சம்பவம் நிகழ்ந்துவிட்டால்? அதை விட இதை தூர எறிந்துவிட்டு மன்னரின் கோபத்தை சமாளிப்பதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது! ”ஜாம்பா சொல்லவும்.
அங்கேயிருந்த மிகப்பெரிய மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து வேகமாக வந்து கொண்டிருந்தது.இந்த காரியத்தை செய்தது யானை கஜாதான்.
”தளபதியாரே விலகுங்கள்! ” என்று மைனா கத்த ஜாம்பாவும்
மாருதியும் லில்லியை தன் பக்கம் இழுக்க முயற்சிக்க அந்த மரக்கிளையின் அடியில் ஓநாயின் கால்சிக்கிக் கொண்டது கடும் அதிர்ச்சிக்கு ஆளானது லில்லி. கால்வலியால் துடித்தது.
”தளபதியாரே! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. இன்னும் ஏன் அந்த விநோதமான பொருளை சுமக்கிறீர்? அந்த புதரில் தூக்கி எறியுங்கள்! உங்களை மரக்கிளையில் இருந்து அகற்ற நான் கஜாவின் உதவியைத்தான் நாட வேண்டும். அவன் எங்கே இருக்கிறானோ தெரியவில்லை! எத்தனை நேரம் ஆகுமோ? பாவம் வலியால் துடிக்கிறீர்களே! ஏ மைனாவே கஜா எங்கேயாவது தென்படுகிறானா பார்! தளபதியாரை மரக்கிளையிலிருந்து மீட்க வேண்டும்!” ஜாம்பா சாமர்த்தியமாக நடித்தது.
லில்லி குழம்பி போயிற்று! ”இதற்கெல்லாம் காரணம் இந்த மர்மப் பொருள்தான்! இன்று காலையிலேயே இது என்னைத் தாக்கியது! அப்போதிருந்து நேரம் சரியில்லை. இதை தூக்கி எறிந்து விடுகிறேன்.
இந்த கிளையின் அடியில் இருந்து எப்படியாவது என்னை எடுத்து விடுங்கள்! வலி உயிர் போகிறது!” என்று கேமிராவை தூக்கி புதரில் எறிந்தது.
. சில நிமிடங்கள் கழித்து அங்கே கஜாவை மைனா கூட்டிவர
மரக்கிளையை அகற்றி லில்லியை விடுவித்தது கஜா.
”என்
கால் நசுங்கிவிட்டது. இனி அரசரைப் பார்க்க முடியாது! என்றபடி நொண்டியபடி மீண்டும் குகைக்கு திரும்பியது லில்லி.
புதரின்
மறைவில் இருந்து காமிராவுடன் வெளியே வந்த மாயா! ”ரொம்ப நன்றி ஜாம்பா! மோரா,மாருதி கஜா,மைனா என்றாள்.
கட்டைவிரலை
உயர்த்தி தம்ஸ் அப் காட்டினான் மோரா.
அருமையான கதை...
ReplyDeleteதொடர்க...
ReplyDeleteகுழந்தைகளுக்கு ஏற்ற சுவாரஸ்யமான கதை நண்பரே...
ReplyDelete