மாறுவேடம்! தினமலர் பெண்கள் மலரில் வெளியான ஒருபக்க கதை
மாறுவேடம்.
நத்தம்.எஸ். சுரேஷ்பாபு
"என்னங்க இன்னிக்கு ஸ்கூல்ல நடக்கிற மாறுவேடப் போட்டியிலே நம்ம குழந்தைஙக கலந்துக்கிறாங்க சாயந்திரம் ஸ்கூலாண்ட வந்திறங்க!" லட்சுமி சொல்லவும் கோபமாய் கத்தினார் அரசியல்வாதி ஆறுமுகம்.
" ஏண்டி எனக்கு அதெல்லாம் ஏதுடி நேரம். கட்சி பொதுக்கூட்டம் இருக்கு என்னால வர முடியாது. "
"எப்பப் பாரு கட்சி பொதுக்கூட்டம்னு திரிஞ்சிக்கிட்டிருந்தா புள்ளைங்க ஏங்கிப் போயிருதுல்ல ஸ்கூல்ல கூட கேட்டாங்க எப்பவும் நீங்களே வர்றீஙகளே அப்பா வரமாட்டாரான்னு!"
"அவனுங்க ஆயிரம் கேப்பானுங்க சொளையா 50 ஆயிரம் வாங்கிட்டுத்தானே அட்மிசன் கொடுத்தாங்க சும்மாவா கொடுத்தாங்க?"
" இருக்கட்டுமே.. நம்ம குழ்ந்தைங்களுக்காக ஒருநாள் கட்சி கூட்டத்தை விட்டுட்டு வாங்களேன்!"
" சரி முயற்சி பண்றேன் "என்றவன் கட்சி ஆபிஸுக்குச் சென்றான்.
" வாய்யா ஆறுமுகம்! இன்னிக்கு நம்மக் கூட்டத்திலே உன் பேச்சுல பொறி பறக்கணும். அந்த மதவாதக் கட்சியை எதிர்த்து கடவுள் மறுப்பை ஆழமாப் பேசனும் என்றார் தலைவர்.
மாலைக் கூட்டத்தில் அனல் தெறிக்க கடவுளைத் திட்டி நாத்திகம் பேசிவிட்டு அலுப்பாய் வீட்டுக்கு வந்தான்.
" அப்பா மாறுவேடப் போட்டியிலே நாங்கதான் பர்ஸ்ட் ப்ரைஸ். பரிசு கொடுத்தது யார் தெரியுமா? உங்க கட்சித் தலைவர்தான்! நீங்க வரலையேன்னு வேஷத்தைக் கலைக்காம அப்படியே காத்திட்டிருக்கோம் என்று சிவன் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் அவனை ஒடிவந்து கட்டிக் கொண்ட போது கடவுள் அவனைப் பார்த்து சிரிப்பதாகத் தோன்றியது அவனுக்கு.
அருமை...
ReplyDeleteநல்லாருக்கு சுரேஷ்.
ReplyDeleteகீதா
தினமலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்! சுரேஷ்
ReplyDeleteகீதா
அருமை வாழ்த்துகள்
ReplyDelete