சிரிச்சுக்கிட்டே இருங்க! ஜோக்ஸ்! பகுதி 1

 

 சிரிச்சுக்கிட்டே இருங்க!  ஜோக்ஸ்!

   நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 

1.   ”அரசியலுக்கு வர்றதுக்கு முன்
னாடி தலைவர் ஈட்டிக்காரனுக்குப் பயந்துகிட்டு இருந்தார்!”

”இப்போ..?”

”ஈ.டி” காரங்களுக்குப் பயந்துகிட்டு இருக்கார்!

 

2.   ”எங்க கலவரம் நடந்தாலும் தலைவர் முதல் ஆளா…”

        ”அங்கப் போய் தடுத்து நிறுத்துவாரா?”

       ”ஊகும்!  வெளியூரூக்கு டூர் போயிருவார்!”

 

3.    ”மாப்பிள்ளைக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு! தக்காளி தோட்டம் வைச்சிருக்கார்!”

   அவ்வளோ பெரிய இடம்லாம் வேணாம் தரகரே! நமக்கு ஏத்தா மாதிரி சிம்பிளா பாருங்க!

 


4.   ”ஒரு காலத்துலே ஓஹோன்னு வாழ்ந்த குடும்பம் அது…!”

”அப்புறம் என்னாச்சு?”

”தினம் தினம் தக்காளியை சமையல்ல சேர்த்துகிட்டே நடுத்தெருவுக்கு வந்திட்டாங்க!”

 

5.    ”தலைவருக்கு நேரம் சரியா அமையலைன்னு ஜோசியக்காரன் சொன்னது சரியாப்போயிருச்சு!”

     ”எப்படி சொல்றே?”

  ”வெளிநாட்டு வாட்ச் வாங்கி கையிலே கட்டி இருக்காரே!”



6.    தலைவர் சி.எஸ்.கே ரசிகர்னு எப்படி சொல்றே?

       கடைசி நிமிஷம் வரைக்கும் எந்தப்பக்கம் சாய்வார்னு சொல்ல முடியாம பரபரப்புலே வைச்சிருக்காரே!

 


7.   ”எதிரி போருக்கு அழைக்கிறான் மன்னா?”

”வாரா”திருப்பாயா? என்று கேட்டு கப்பத்தை கட்டிவிடுங்கள் மந்திரியாரே!”

 

8.   ”எதிரி எதைக்கொடுத்தாலும் அதை திருப்பிக் கொடுத்துவிடுவானாம் மன்னா!”

  ”அப்படியானால் இந்த நாட்டைக்கொடுத்து திருப்பி வாங்கிக் கொள்ளலாமா அமைச்சரே!”

 

9.   ”தலைவர் இன்னும் அப்பாவியாவே இருக்கார்?”

  ”எப்படி சொல்றே?”

 ”விஜிலென்ஸ்ல இருந்து வந்திருக்காங்க தலைவரேன்னு சொன்னா அந்த “லென்ஸ்” போட்டா பார்வை நல்லாத் தெரியுமான்னு கேக்கிறாரே!”

 


10.  ”தலைவர் எப்பவுமே சிம்பாலிக்கா பேசுவாரா? எப்படி சொல்றே?”

  “ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடியா இருந்து இப்ப சட்டசபை சபாநாயகரா மாறி இருக்கிறதை அரசியல்ல மாவீரனா உள்ளே நுழைஞ்சி “மாமனிதனா”  மாறி இருக்கிறதா சொல்றாரே!”

 

11.  ”நாட்டு மக்களுக்குப் பாடம் கற்பிப்பேன்னு “ தலைவர் சொல்லிக்கிட்டிருக்காரே என்ன விஷயம்?

  “இரவு பாடசாலை” ஒண்ணு ஆரம்பிக்கப் போறாராம்!

 


12. கல்யாணத்துக்கு முன்னாடி அருவியிலே குளிக்கிற மாதிரி வீடியோஎடுக்கப் போறாங்களாம்!

  அப்போ அது ஃப்ரி “வெட்” டிங்” ஷுட்னு சொல்லு!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து செல்லுங்களேன்! நன்றி!

Comments

  1. அருமை

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தற்காலத்தில் உள்ளது போல நகைச்சுவைகள் சிறப்பு நண்பரே

    ReplyDelete
  4. அத்தனை ஜோக்ஸும் மிக அருமை
    ரிஷபன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2