புகைப்பட ஹைக்கூ 83
புகைப்பட ஹைக்கூ 83 குடை ஒடிந்தாலும் தளரவில்லை! நடை! விடைகொடுக்க விருப்பமில்லை! குடை! காற்றழித்த குடை காலமழித்த உடல்! பிடிப்பு! பற்று இருக்கும் வரை முற்றுபெறுவதில்லை! வாழ்க்கை! உடைபட்டாலும் உறுதி இழக்கவில்லை! குடை,நடை! ஒடிந்தகம்பிகள் உணர்த்துக்கிறது மூதாட்டியின் நிகழ்காலம்! நிழல்கொடுக்கவில்லை நீர்தடுக்கவில்லை! பிடிதளரவில்லை ஆதாரம்! ஆதாயம் தேடிகளால் அலைகழிக்கப்படுகிறது மூதாட்டியின் வாழ்க்கை! காற்றில் சிக்கிய குடை காட்டுகின்றது பாட்டியின் நிலை! வளமை உடைத்துப் போடுகின்றது வறுமையின் குடை! ஏக்கப்பார்வையில் அழிக்கப்படுகிறது ஏளனப் பார்வை! பிடிமானம் இழந்ததால் பிய்ந்து போனது குடை! பிய்ந்த குடையின் பின்னே ஓய்ந்தும் ஓடுகிறது முதுமை! உடைந்து கிடப்பது குடைமட்டுமல்ல பாட்டியின் உள்ளம்! எலும்பிழந்தாலும் வலுவிழக்கவில்லை! குடை! உடைந்த குடை ஓய்ந்த தேகம் சாய்க்கவில்லை நடை! பற்று அறுந்து போனாலும் பாட்டியை காக்கிறது குடை! முற்று பெறும் வயதில் முற்று பேறா உழைப்பில்...