புகைப்பட ஹைக்கூ 76
புகைப்பட ஹைக்கூ
நம்பிக்கை
பிடித்திருக்கிறது
தூரிகை!
வண்ணச்சிதறலில்
ஒளிர்கிறது
நம்பிக்கை!
பிடிமானமில்லை!
படிமானமானது
ஓவியம்!
தீட்டதீட்ட
கூர்பட்டது
நம்பிக்கை!
கைவிட்டாலும்
கைவிடவில்லை!
நம்பிக்கை!
வண்ணம் பூசியதும்
மாறியது
வாழ்க்கை!
ஊக்கம் உடையாதவரை
இல்லை இவருக்கு
துக்கம்!
கைகள் முடங்கினாலும்
துளிர்த்தது
கலை!
ஊமையான விரல்கள்
பேசியது
ஓவியம்!
கலைந்த கனவுகளை
நிஜமாக்கியது
சித்திரம்!
சிந்தியது வண்ணங்கள்!
சிதறவில்லை!
நம்பிக்கை!
ஒவியத்துள்ளே
ஒளிந்து கிடக்கின்றது
நம்பிக்கை!
கை விடாத ஊக்கம்
கை கொடுத்தது
தூரிகை!
உயர்ச்சியை
நுகர வைத்தது
உலராத தூரிகை!
விதைபட்ட நம்பிக்கை!
விழுதானது
தூரிகை!
ஊற்றெடுத்த நம்பிக்கை!
உருவானது
வாழ்க்கை!
ஊற்றெடுத்த நம்பிக்கை!
உருவானது
வாழ்க்கை!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
எத்துனை நம்பிக்கை
ReplyDeleteபோற்றுவோம் அவரை
நன்றி நண்பரே!
Deleteதன்னம்பிக்கையாளர் வாழ்க...
ReplyDeleteகண்டிப்பாக இந்த தன்னம்பிக்கையாளர் தரணியில் போற்றப்படுவார்! வருகைக்கு நன்றி நண்பரே!
Deleteநம்பிக்கை என்றால் இதுவன்றோ..
ReplyDeleteகவிதை..அருமை.
படம் சார்ந்து எழுதுவது ஒரு சவால்
ReplyDeleteஅதுவும் நன்றாக் எழுதுவது பெரிய விசயம்
இரண்டையும் சாதித்து விட்டீர்கள் ஸ்வாமிகள்
வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பார்கள்! அப்படி தங்களால் புகழப்பட பாக்கியனானேன் தோழர்!
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி நண்பரே!
Deleteநம்பிக்'கை' கவிதை அருமை...
ReplyDeleteசிறப்பான வரிகள்
வாழ்த்துக்கள்...
ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு வரிகளை விதைத்துள்ளேன்! நன்றி!
Deleteநம்பிக்கை விதைகளை நன்றாகவே தூவியிருக்கிறீர்கள்.
ReplyDelete"//ஊமையான விரல்கள்
பேசியது
ஓவியம்!//"
அற்புதம்.
விதைத்து வைப்பது நாலுபேருக்கு பயன்பட்டால் சரி! நண்பருக்கு நன்றி!
Deleteஆகா அற்புதம் சகோ அருமையான எண்ணக் குவியல்கள். எவ்வளவு தூரம் உணர்ந்து அப்பப்பா சொல்லி மாளாது சகோ கண்கல் கலங்கும் பாடியாய் அத்தனையும் உண்மை எத்தனை நம்பிக்கை. இருவருக்குமே hatsoff சகோ வாழ்த்துக்கள் எத்தனை திறமைகள் தங்களுக்கு wow மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteரொம்பவே புகழ்கிறீர்கள் சகோ! ஏதோ என்னால் இயன்ற அளவு சிறப்பாக எழுத முயன்று இருக்கிறேன் அவ்வளவே!
Deleteமிக மிக அற்புதமான கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்
தீட்டதீட்ட
ReplyDeleteகூர்பட்டது
நம்பிக்கை!//
வண்ணச்சிதறலில்
ஒளிர்கிறது
நம்பிக்கை!
கைகள் முடங்கினாலும்
துளிர்த்தது
கலை!//
அருமை அருமை! சதியமாகக் கலக்குகின்றீர்கள் சுரேஷ்!
எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம்தான் காரணம்! மிக்க நன்றி நண்பரே!
Deleteநம்பிக்கை தந்த படம்.....
ReplyDeleteகவிதைகள் அருமை நண்பரே..... பாராட்டுகள்.
அருமை அருமை.. தொடருங்கள்.
ReplyDelete