கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 23
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 23
1. இந்த படத்துல கதை ஒண்ணையுமே காணோமே!
யாரோட
கதையையும் திருடி எடுத்தேன்னு யாரும் சொல்ல முடியாதுன்னு டைரக்டர் சொன்னப்பவே
நினைச்சேன்!
2. தலைவர் அடிக்கடி இதை மேலிடத்துக்கிட்ட கேட்டுச்
சொல்றேன் மேலிடத்துக்கிட்டே கேட்டுச்சொல்றேன்னு சொல்றாரே நம்ம கட்சிக்கு ஏதுய்யா
மேலிடம்?
நீ வேற மேலிடம்னு அவர் சொல்றது அவர்
சம்சாரத்தை!
3. மன்னா! நம் நாட்டை போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டன!
மந்திரியாரே எதிரியுடன் சமரசம் பேசி ஒரு குடையின் கீழ் ஆட்சியை கொண்டுவந்து விடலாமா?
4. தலைவருக்கு எப்பவுமே விளம்பர மோகம் ஜாஸ்தி!
அதுக்காக
குற்றப்பத்திரிக்கையிலே கட்சி விளம்பரம் வரனும்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லாவே
இல்லை!
5. தொண்டர்கள் எல்லாம் எதுக்கு மாலையோட வந்து இருக்காங்க?
நீங்கதானே
தலைவரே நம்மகட்சியிலே ஜனநாயகம் செத்துவிட்டதுன்னு அறிக்கை விட்டீங்க!
6. நீதிமன்றத்திலே தலைவர் சொன்ன பதிலைக்கேட்டு ஜட்ஜே அசந்துட்டார்!
எப்படி?
இவ்வளவு
ஊழல் பண்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசுவந்ததுன்னு கேட்டதுக்கு அது என்னோட
உடன்பிறந்த வியாதின்னு சொல்லிட்டார்!
7. தலைவர் எதுக்கு தொண்டர்கள் எல்லாம் ஹார்லிக்ஸ் பூஸ்ட்
கட்டாயம் சாப்பிடனும்னு அறிக்கை விடறார்!
கட்சியிலே
தொண்டர்களோட பலம் குறைஞ்சுப்போச்சுன்னு யாரோ சொன்னாங்களாம்!
8. உங்க கூட இத்தனை வருஷமா குப்பை கொட்டி என்ன பிரயோசனம்?
நீ
கொட்டற குப்பையெல்லாம் சுத்தமா பெருக்கிஎடுத்து வெளியே போட்டு வீட்டை சுத்தமா
வச்சிருக்கேனே அது போதாதா?
9. அரசவைப்புலவர் ஏன் இவ்வளவு நடுக்கத்துடன் அஞ்சி
நின்றுகொண்டிருக்கிறார்?
அவரது
மகன் இளவரசியாரிடம் கொஞ்சிக்கொண்டிருக்கிறாராம் மன்னா!
10. ஹெட் கிளார்க் நாராயணசாமிக்கு அடிபட்டதும் ஏன்யா
வெட்னரி டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனீங்க?
நீங்கதானே
சார் மனுசன் மாடா உழைப்பார்னு சொன்னீங்க!
11. சிக் லீவ் கேட்டதுக்கு உங்க ஆபிஸ்ல கொடுக்க
மாட்டேன்னுட்டாங்களா ஏன்?
உடம்பை
’சிக்’னு வெச்சிக்க ப்யுட்டிபார்லர் போக
இல்லே லீவ் கேட்டேன்!
12. தினம்தோறும் கிச்சன்லேயே சமைச்சு சமைச்சு போரடிச்சுபோச்சு!
ஒரு மாறுதல் வேணும்னு என் மனைவிக்கிட்டே கேட்டேன்!
என்ன சொன்னா?
வேணும்னா இன்னிக்கு ஒருநாள் ஹால்லேயே
சமைங்கன்னு சொல்லிட்டா!
13. வாரம் ஒரு உண்ணாவிரதத்துல கலந்துக்கறதுன்னு தலைவர்
கொள்கையே வைச்சிருக்கார்!
ஏன்?
அப்பத் தான் விதவிதமான பிரியாணியை ருசிச்சு
சாப்பிட முடியுதாம்!
14. சர்வர் அங்க என்ன கலாட்டா?
தலப்பா கட்டு பிரியாணின்னு சொல்றீங்களே
பிரியாணி இருக்கு தலப்பா எங்கேன்னு கேக்கிறாரு இவரு!
15. மன்னருக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லைன்னு
எப்படி சொல்றே?
மல்யுத்த
போட்டிக்கு சியர்ஸ் கேர்ள்ஸை அப்பாயிண்ட்மெண்ட் செய்துள்ளாரே!
16. யுத்தம் என்று ஒன்று வந்தால் நம் மன்னர்தான் முதல்
ஆளாய்…
வாள் எடுப்பாரா?
நீ வேற ஓட்டம் எடுப்பார்!
17. ஏண்டா உன்னோட வகுப்புல உக்காராம அடுத்த வகுப்புல போய்
உக்காந்தே?
நீங்கதானே
சார் சொன்னீங்க கனியிருக்க காய் கவர்ந்தற்றுன்னு அங்கதான் என் ப்ரெண்ட் கனி
இருக்கா!
18. டாக்டர் டாக்டர் பேஷண்ட்டுக்கு அனஸ்தீஷியா கொடுத்தும்
மயக்கமே வரலை!
அப்போ
ட்ரிட்மெண்ட்டுக்கு ஆவற செலவு பில்லை காட்டுங்க உடனே மயங்கிடுவார்!
19. ஆபீஸ் வேலையை வீட்டுலேயும் செய்ய சொல்றா என் மனைவி!
அடடே!
என்ன அடடே! கூட்டி பெருக்குங்கிறா! நான்
அக்கவுண்டட்டா இல்லெ இருக்கென்!
20. அவர் வாழ்க்கையே ரொம்ப சிக்கல் நிறைஞ்சிதா
அமைஞ்சிருச்சு!
எப்படி சொல்றீங்க!
அவர் மனைவியோட தலையில நிறைய சிக்கு
எடுத்துக்கிட்டு இருக்கிறதா தினமும் சொல்றாரே!
21. தலைவர் எதுக்கு கட்சிக்கு ரெண்டு கிரேன் வாங்கச்சொல்லி
இருக்கார்!
சரிந்து
விழுந்த கட்சியை தூக்கி நிறுத்ததான்!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
வணக்கம்
ReplyDeleteஐயா
நகைச்சுவை அனைத்தும் சிறப்பாக உள்ளது சிரித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்துமே அருமையாக இருந்தது நண்பரே...
ReplyDeleteஇப்படி அடுக்கடுக்காக ஜோக்ஸ் தோன்றவும், எழுதவும் தனித் திறமை வேண்டும். எல்லாமே அருமை சுரேஷ்.
ReplyDeleteஅனைத்து நகைச்சுவைகளும் நன்றாக இருந்தன. நன்றி.
ReplyDeleteஹா..ஹா..
ReplyDeleteரசித்தேன்... சிரித்தேன்...
ReplyDeleteஆஹா எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் அனைத்துமே அசத்தல் தான் ரொம்பவே ரசித்தேன் சகோ வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteஅருமையான சிரிப்புவெடி .ரசித்தேன்.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஎன்ன எத்துறையையும் விட்டுவைக்க மாட்டீர்கள் போல..!
சலிக்காத சுவை!
பகிர்வுக்கு நன்றி
நல்லா சிரிக்க வைக்கும் அருமையான பதிவு ...
ReplyDelete#அங்கதான் என் ப்ரெண்ட் கனி இருக்கா!#
ReplyDeleteகனியா ,கனிமொழியா ?:)கலக்கல் ஜோக்ஸ் !
கலக்கலான சிரிப்பு சரவெடிகள்
ReplyDeleteசூப்பர் நகைச்சுவைத் துணுக்குகள்..பாஸ்....நல்லாவே சிரிச்சோம்....
ReplyDeleteஅருமையான நகைச்சுவை துணுக்குகள் ! ரசித்தேன் !
ReplyDeleteபடித்து
ReplyDeleteஇரசித்து
ருசித்து
மகிழ்ந்தேன்.,
நகைச்சுவை அனைத்தும் அருமை...
ReplyDeleteசூப்பர் ஜோக்ஸ். ரசித்து படித்தேன்.
ReplyDelete