பெருக்கச்சொல்லும் மோடியும் சினிமா நடிகையின் சோகமும்! கதம்பச்சோறு பகுதி 50

கதம்ப சோறு பகுதி 50

குப்பை கூட்டச்சொல்லும் மோடி!

       க்ளீன் இண்டியா என்று ஒரு கோஷத்தை முன் வைத்து மோடி ஒரு விளம்பர அரசியல் நடத்தி வருகிறார். திட்டம் என்னவோ நல்லதுதான். தூய்மையான இந்தியாவை பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் இதற்கு செய்யப்படும் பில்டப்புக்கள் விளம்பரங்கள் பயங்கர அட்ராசிட்டியாக இருக்கின்றன. டெண்டுல்கரில் ஆரம்பித்து கமல் வரை இன்னும் பல்துறை பிரபலங்களை இந்த திட்டத்தில் இணைத்து தெருக்கூட்டச் சொல்கிறார். இதனால் எல்லாம் என்ன பலன் வந்துவிடப்போகிறது. சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் ஒரு பதிவில் எழுதி இருந்தார். பிரபலங்கள் சுத்தப்படுத்த வேண்டும் என்று சுத்தமாக இருந்த ஓர் தெருவில் குப்பைகளை கொட்டி அவர்கள் சுத்தப்படுத்துவது போல புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த வேண்டாத வேலை தேவையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது. ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத இந்தியர்கள் இருக்கிறார்கள். கழிப்பிடம் இல்லாத பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் எல்லாம் இருக்கிறது. சுகாதாரம் என்பது முதலில் தன்னில் இருந்து தொடங்க வேண்டும். தன்னை சுகாதாரமாக சுத்தமாக ஒரு மனிதன் வைத்துக் கொண்டால் சுற்றுப்புறமும் சுகாதாரம் ஆகும். இப்படி பிரபலங்கள் பெருக்கித்தான் இந்தியா தூய்மை ஆகவேண்டும் என்பதில்லை! ஒவ்வொரு மனிதனும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்ற அறிவுக்கு உரைத்தால் மட்டும் போதுமானது. மோடியின் இந்த திட்டத்தை ஊடகங்கள் பெரிதாக கொண்டாடுவது வேறு விசயம்! ஆனால் என்னைப் பொருத்தவரை இதுவும் ஒரு விளம்பர ஸ்டண்ட்தான்!

விழித்துக் கொள்ளுங்கள் பன்னீர் செல்வம்!

      அம்மா சிறைக்கு சென்றதும் இன்னொருத்தர் பாவம் சிறைபட்டார் வேறு யார் பன்னீர் செல்வம் ஐயாதான்! முதல்வர் என்ற வேலிக்குள் சிறைபட்டவர் இன்னும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். சென்ற முறை முதல்வர் ஆனதிற்கும் இப்போதைக்கும் நிறைய மாறுதல்கள் சூழ்நிலையில் காணப்பட்டாலும் முதல்வர் என்று ஆகிவிட்டால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் காரியத்தே கண்ணாய் இருக்க வேண்டாமா? எந்த ஒரு முடிவும் சுயமாய் எடுக்க முடியாது என்று தெரியும்! ஆனால் அதையும் தைரியமாக சொல்லக்கூட முடியாத சூழல்! மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகட்டும், டெங்கு காய்ச்சலாகட்டும், அல்லது குறிப்பிட்ட சாதியை ஆதரவு தருவதாக சொன்ன தகவலாகட்டும் எதற்குமே பொறுப்பான பதில் இல்லை! நடவடிக்கைகளும் இல்லை! போதாத குறைக்கு ஆலோசகர் என்ற பதவியில் வேறு ஒரு நபர். இருந்தும் தமிழகம் இந்த மூன்று மாதங்களாக உறக்கத்தில்தான் இருக்கிறது. மக்கள் முதல்வராக அம்மா தொடர இவரால் முதல் என்று கூட சொல்ல முடிவது இல்லை! தப்பித் தவறி யாராவது முதல்வரே என்று சொல்லிவிட்டால் தோப்புக் கரணமே போடுவார் போல! அந்த அளவுக்கு பவ்யம்! பவ்யம் எல்லாம் அம்மாகிட்ட மட்டும் இருந்தா போதும் தமிழக மக்கள் கிட்ட வேணாமா? அவங்க நிறைய எதிர்பார்க்கிறாங்க! பினாமி அரசு என்று ஸ்டாலின் கூச்சல் போட்டாலும் எதிர்கட்சிகளுக்கும் சுரத்தில்லைதான்! இருந்தாலும் இப்படியே இருந்தால் எப்படி மிஸ்டர் முதல்வர்? உங்களைத்தான் இப்படி கூப்பிடமுடியும்! தூங்கிக் கொண்டே இருக்காதீர்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! 

புணரமைப்பு பெறும் கால்பந்து!

   இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டு அவ்வளவு சுலபத்தில் பிரபலம் அடைந்துவிட முடியாது. தேசிய விளையாட்டான ஹாக்கியே தேய்ந்து வரும் நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன நிலையில் இருந்தது கால்பந்து. வங்காளத்தில் மட்டுமே ஓரளவு இந்த விளையாட்டுக்கு ஆதரவு! இந்த நிலையில் ஐ.எஸ். எல் லீக் போட்டிகள் கால்பந்திற்கு மறு வாழ்வு அளித்துள்ளன. பல போட்டிகளை ரசிகர்கள் நிறையபேர் ரசித்துள்ளனர். இளைஞர்கள் பலர் கால்பந்தின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர். இப்போதைய போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள்தான் சிறப்பாக ஆடி ஓர் அணியின் வெற்றியை நிர்ணயிக்கின்றனர். இருந்தாலும் செத்துக் கிடந்த ஓர் விளையாட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து நடமாடத் துவங்கியிருப்பது நல்லதொரு எதிர்காலத்தை காட்டுகிறது. தோனி, டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் நடிகர்களும் இந்த தொடருக்கு ஆதரவு அளித்து இருப்பதும் நல்ல முன்னேற்றத்தையே உணர்த்துகிறது.

படிச்ச புத்தகம்!

    முகநூல் நண்பர் நகைச்சுவை அரசர் கீழை அ. கதிர்வேல் அவர்களின் நூல் நகைச்சுவை நானூறு. முகநூலில் இன்பாக்ஸில் தொடர்புகொண்டு முகவரி கொடுத்து கொரியர் மூலம் புத்தகத்தை கடந்த வாரம் வாங்கினேன். அட்டைப்படத்திலேயே அதிரடியாக நகைச்சுவை ஆரம்பிக்கிறது.
  செய்யும் தொழிலே தெய்வம்னு சொல்றீங்களே என்ன தொழில் செய்யறீங்க?
  கோயில் சிலைத் திருட்டுத்தான்!  என்று அதிர வைக்கிறார். விகடனில் அட்டைப்பட ஜோக்காக வந்தது இங்கும் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் நானூறு ஜோக்குகள். அனைத்துமே முழுச்சிரிப்புக்கு கியாரண்டியாக உள்ளது.
   நான் செய்யற எதுவும் என் மனைவிக்கு பிடிக்கும்!
   இன்னிக்கு என்ன செய்தே?
   கேசரி!

   இட்லிக்கு போடறதுன்னா கூட என் மனைவி என்னை கேக்காம செய்ய மாட்டா!
    ஏன்?
  நான் தானே அரைக்கணும்!
   இப்படி மனைவியை கிண்டல் பண்ணும் ஜோக்காகட்டும் ஆபீஸ் ஜோக்ஸாகட்டும் அனைத்துமே சிறப்பு!

படத்திலே கோர்ட் சீன் இருக்கா?
 இல்லே ஒரு வேளை படம் வெளிவந்ததும்  வரலாம்!
இப்படி ஒரு ஜோக் இன்றைய தமிழ் சினிமாவை அப்படியே படம் பிடிக்கிறது.
இப்படி நகைச்சுவைகள் அதுவும் தரமான நகைச்சுவைகளால் நிரம்பி வழிகிறது புத்தகம்.

நகைச்சுவை நானூறு. கீழை. அ. கதிர்வேல்,
சிரிப்பரங்கம் பதிப்பகம், முதல்தளம், 417/390 MTH ரோடு அம்பத்தூர், சென்னை 53.
விலை ரூ 75

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

வெளியில் செல்லுகையில் மொபைல் நெட் வொர்க் கவரேஜ் கிடைக்க வில்லையெனில் 112 என்ற எண்ணை டயல் செய்தால் நெட் வொர்க் கிடைத்துவிடும்.

புல்மார் துடைப்பம் வாங்கும்போது அவற்றில் இருந்து புல் உதிர்ந்துகொண்டே இருக்கும். இதை தடுக்க துடைப்பம் வாங்கியவுடன் தண்ணீரில் நனைத்து நன்கு காயவைத்து தட்டினால் புல் எல்லாம் உதிர்ந்து போகும்.

கொள்ளுரசம் தயாரித்து கொஞ்சம் மிளகு தூவி சூடாக குடித்தால் நெஞ்சில் கட்டிய சளி கரையும்.

வெள்ளைத்துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளீர் என்று இருக்கும்.

இரத்தம் சுத்தமாக காலையில் வெறும் வயிற்றில் ஐந்தாறு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

கிச்சன் கார்னர்.
முப்பருப்பு வடை!


மழைக்கால கிளைமேட்! இதமாக மொறுமொறு வடை ருசிக்க இருந்தால் சுகம்தானே!

தேவையானவை: கடலைப்பருப்பு 1 கப், உளுத்தம்பருப்பு 1/2கப். துவரம் பருப்பு,1/2 கப். காய்ந்த மிளகாய் 6  பெருங்காயத்தூள், சோம்பு, சிறிதளவு. கொத்தமல்லித்தழை சிறிது. தேங்காய்த்துருவல் ¼ கப் எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

பருப்பு வகைகளை ஒரு மணிநேரம் ஊறவைத்து சோம்பு தேங்காய், மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து காய்ந்த எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சுவையான கரகரப்பான முப்பருப்பு வடை தயார்.
     
ஒரு சினிமா நடிகையின் சோகம்!

    ஒயிலாட்டம் என்ற சினிமாவில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் அறிமுகம் ஆனார் சர்மிளா. ஒயிலாட்டம் சார்மிளா என்று அப்போது பிரபலமான நடிகையாக இருந்தார். கால ஓட்டத்தில் காணமல் போனவர் இப்போது குணச்சித்திர வேடங்களில் தலைக்காட்டி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி படிக்க இங்கே சொடுக்கவும். நடிகை சார்மிளா பேட்டி

இவர்களை அறிந்துகொள்ளுங்கள்!
 கிராமத்து வயல்களையும் கிராமத்து உணர்வுகளையும் படமாக பிடித்து அசத்தும் பாரிவேல்  கிராமத்து கலாசார பதிவாளர் பாரிவேல்


இளநீரை புதிய முறையில் வடிவமைத்து விற்கும் திருச்சி வியாபாரி காஜா முகமது  பேக்கிங் இளநீர்


படிச்சதில் ரசித்தது!

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு…
 “ஏங்க எங்கங்க இருக்கீங்க?”
 உனக்கு நேரம் காலமே தெரியாது… பகல்ல நான் எங்கே இருப்பேன்… ஆபீஸ்லதான்… ரொம்ப வேலையா இருக்கேன்… இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை… ப்ரி ஆனதும் நானே கூப்பிடறேன்”
“அதுக்கில்லைங்க…”
“அதான் சொல்றேன்ல…”
“குழந்தைங்க…”
”என்ன குழந்தைங்களுக்கு என்ன?”
“ஒண்ணுமில்லே… உங்களுக்கு இரண்டு டேபிள்  பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன்.  உங்க கூட இருக்கிற பொண்ணு யாருன்னு குழந்தைங்க கேக்கறாங்க… நான் என்ன பதில் சொல்லட்டும்?”

          (இணையத்தில் படிச்சு ரசித்தது)

டிஸ்கி} இந்த பகுதி எழுதி இரண்டுமாதம் ஆகிவிட்டது. நிறைய பேர் விரும்பி படிச்ச இந்த பகுதியை ஏன் நிறுத்தினீங்கன்னு யாராவது கேப்பாங்கன்னு இதுவரைக்கும் எதிர்பார்த்தேன்! யாரும் கேக்கலை! இருந்தாலும் நம்ம கடமையை நாம செய்வோம்னு ஆரம்பிச்சிட்டேன்! அடடா தொல்லை பொறுக்க முடியலேன்னு சொல்றது காதுல விழுது! இருந்தாலும் இதுக்கெல்லாம் அசரமாட்டேன்! ஹாஹாஹா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. //இந்த பகுதி எழுதி இரண்டுமாதம் ஆகிவிட்டது. நிறைய பேர் விரும்பி படிச்ச இந்த பகுதியை ஏன் நிறுத்தினீங்கன்னு யாராவது கேப்பாங்கன்னு இதுவரைக்கும் எதிர்பார்த்தேன்! யாரும் கேக்கலை! இருந்தாலும் நம்ம கடமையை நாம செய்வோம்னு ஆரம்பிச்சிட்டேன்!///

    சரி நான் இப்ப கேட்குறேன் ஏன் ஏன் இப்ப எழுத ஆரம்பிச்சீங்க..... சரி எழுத ஆரம்பிச்சீங்க ஆனா ஏன் ஏன் ரொம்ப இண்டிரெஸ்டிங்காக எழுதி இருக்கீங்க... இப்படி நீங்க எழுத ஆரம்பிச்சா நாங்க உங்களை தொடர ஆரம்பிப்போம். அப்படி தொடர ஆரம்பிச்சா அப்ப நாங்க எப்படி பதிவு எழுதுறது


    சரி சரி சொல்ல வந்ததை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேன் பதிவு சுவராஸ்யமாக இருந்தது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி சுவாரஸ்யமா எழுத முடியாவிட்டாலும் ஏதோ முயன்று இருக்கேன்! நன்றி!

      Delete
    2. அட உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்தான்... நீங்க பதிவுகளில் தூள்கிளப்புறீங்க...

      Delete
  2. கீழை. அ. கதிர்வேல் அவர்களைப் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாரட்டபடவேண்டியவர்தான்! பாராட்டுவோம்!

      Delete
  3. தளிர் ஐய்யா... இங்கே நல்ல மெகா மூட்டம். இந்த நேரத்தில் சுட சுட செய்த பருப்பு வடைய இங்கே வந்து வைசிடிங்களே.. எனக்கு இல்லை.. எனக்கு இல்லை.
    நீங்கள் பொதுவாக பின்னூட்டத்தில் வரும் கருத்துக்களுக்கு பதில் தருவது இல்லை. ஆதலால் நீங்கள் பின்னூட்டம் படிக்க மாட்டீர்கள் என்று நினைத்து நண்பர்கள் " தொடர்ந்து எழுதுங்கள்" என்று சொல்ல தவறி இருப்பார்கள்.

    அருமையான பதிவு. சுத்தமான இந்தியா..ஒரு கேலி கூத்தாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் ரெண்டுநாளா மழை! பின்னூட்ட கருத்துக்களுக்கு முதலில் பதில் த்ந்து கொண்டிருந்தேன்! இடையில் கொன்றைவானத் தம்பிரான் புண்ணியத்தில் அதை நிறுத்திவிட்டேன்! இப்போது மீண்டும் தொடர்கிறேன்! நன்றி!

      Delete
  4. அன்பு நன்பா,

    நாங்கள் உன்னிடம் எதிற்பார்பது இந்து மதத்தில் இருக்கும் வன்முரைகளை கண்டிக்கும் பதிவுக்லே! அப்ப அப்ப மோடியையும் நிரைய தாக்குங்கல். யாரும் எதுவும் கேட்கமாட்டார்கல் ......நிரைய திட்டி எலுதுங்கல். கடவுள் நம்பிக்கை எத்தனை மூட வலக்கங்களை கொண்டு வருகிர்து அதையும் கட்டுடையுங்கல். கடவுலை கர்பித்தவன் யார்.

    நான் சினிமா கம்பெனியில் தயாரிப்பு பிரிவில் சிரிய வேலையில் இருக்கிரேன் என் கையில் லெப்டாப் கிடைப்பது அறிது அப்ப்டி கிடைத்தாளும் அதில் தமிழ் இறுக்காது.

    பலைய பதிவில் மொபைலில் படிக்கிரேனா என்ரு கிண்டள் செய்திருந்தீர்கல். அந்த அலவுக்கு வசதி கிடையாது சார் வால்.

    பரமு சிவசாமி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரமு சிவசாமி அவர்களே! நீண்டநாளுக்குப்பின் வருகைக்கு நன்றி! எல்லா மதத்திலும் வன்முறைகளும் இருக்கிறது. நன்மைகளும் இருக்கிறது! சில போலியான ஆன்மிகவாதிகளால் சீர்குலைந்து போயுள்ளது இந்துமதம். அதில் மாற்றுக் கருத்து இல்லை! உங்கள் பணி குறித்து அறிந்தேன்! விரைவில் அதில் முன்னேற்றம் காண வாழ்த்துக்கள்! மொபைலில் படிக்கிறீர்களா என்று கேட்கத்தான் செய்தேனே தவிர கிண்டல் ஏதும் செய்யவில்லை! பிழைகள் மொபைலில் டைப் செய்யும் போது அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு அதனால் கேட்டேன்! மற்றபடி என்னுடைய வாசகர் எவரையும் நான் கிண்டல் செய்ய விரும்புவது இல்லை! செய்யவும் மாட்டேன்! உங்களுடைய கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இருப்பின் திருத்திக்கொள்ளவும் செய்வேன்! பின்னூட்டங்களுக்கு பதில் வருவதில் இருந்தே இதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்! நன்றி!

      Delete
  5. ”கடவுளை” என்ரு இருக்க வேண்டும் சாரி தவராக கடவுலை என்ரு எலுதிவிட்டேன்.

    பதிவர் வால் பைய்னின் பதிவுகலை மாரியே உங்கலது பதிவும் இருக்கிரது. அவரும் மத நம்பிக்கைகழை நள்ளா சாடுவார்

    ReplyDelete
  6. கதம்பச் சோறு பகுதி 50க்கு வாழ்த்துக்கள் ஜி...
    கதம்பமாய் எத்தனை செய்திகள்... அத்தனையும் அருமை....
    யாரும் கேக்காட்டி என்ன உங்கள் எழுத்து அருமை தொடருங்கள்...

    ReplyDelete
  7. கதம்ப சோறு ரொம்ப சூப்பர்.
    நகைச்சுவை நானூறு, படித்ததில் பிடித்தது எல்லாமே அருமை.
    முக்கனி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது தான் முப்பருப்பு வடையை கேள்விப்படுகிறேன்,

    ReplyDelete
    Replies
    1. முப்பருப்பு வடை விருந்து விஷேசங்களில் தட்டப்படுவது உண்டு! ஆமைவடை என்றும் சொல்வார்கள்! வருகைக்கு நன்றி!

      Delete
  8. Information packed!! super, thanks for home remedies tips. Continue writting like this.

    ReplyDelete
  9. நண்பரே! எல்லாமே மிகவும் அருமையாக இருக்கின்றன! தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். கீதா வெளியூர் பயணம்...ஆதலாஅல் பதிவேற்றம் செய்ய முடியாமல் போனது.

    படித்ததில் பிடித்தது அருமை! மிகவும் ரசித்தோம்...

    வடை செய்திருக்கின்றோம்....ஆனால் தேங்காய் சேர்த்து இல்லை செய்தால் போச்சு....பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2