கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 21

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 21


  1. ஆடிக்காத்துலே அம்மியே நகரும்ன்ற பழமொழியை இன்னிக்கு உண்மையானதை பார்த்தேன்!
    எப்படி?
  ஆடித்தள்ளுபடியிலே கிடைக்குதுன்னு பழைய மிக்சியை மாத்தி புது மிக்சி வாங்கி வந்திருக்காளே என் மனைவி!

  1. தலைவர் ஏன் திடீர்னு புதுக்கட்சி துவக்கணும்னு ஆசைப்படறார்?
கோஷ்டிகானம் ரசிக்கலையாம்! தனி ஆவர்த்தனம் பண்ணிப்பார்க்கலாம்னு யோசிக்கிறார்!


  1. உங்க பெரிய பையனை உதவாக்கறை உதவாக்கறைன்னு திட்டிக்கிட்டு இருப்பியே இப்ப என்ன செய்யறான்?
டாய்லெட் கிளினர் வித்துக்கிட்டு இருக்கான்!

  1. அந்த பேச்சாளரை ஏன் கைது செய்து அழைச்சிக்கிட்டு போறாங்க?
அவர் பெரிய பிரச்சார பீரங்கியாச்சே! பீரங்கி ஊழல்ல கைது பண்ணியிருக்காங்க!


  1. தலைவர் பழசை இன்னும் மறக்கலைன்னு எப்படிச்சொல்றே?
கட்சி ஆபிஸோட பூட்டை ஹேர்பின் கொண்டு திறக்கறதை வச்சுத்தான்!

  1. பையனுக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லேன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் கல்யாணத்தை நிறுத்திட்டீங்க!
தினமும் நைட்ல ஒரு லிட்டர் பால் குடிச்சுத்தான் தூங்குவாராமே!

  1. அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
வயிறெல்லாம் புண்ணா இருக்கு டாக்டர்னு சொன்னா ஒரு களிம்பைக் கொடுத்து இத தடவுங்க சரியாயிரும்னு சொல்றாரே!

  1. அந்த ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆனா ஒரு வாரத்துல கிட்னி கல்லை கரைச்சிருவாங்கன்னு சொன்னாங்க…
    கரைச்சிட்டாங்களா?
  கரைச்சிட்டாங்க என்னோட பேங்க் பேலன்ஸையும்!



  1. இளவரசி காதல் வலையில் சிக்கிவிட்டாள் மன்னா!

அப்படியானால் விலையில்லாமல் ஒரு கல்யாணம் நடத்திவிடலாம் என்று சொல்லுங்கள்!

  1. மன்னர் போர்க்களத்தில் நிற்காமல் சுழன்று சுழன்று சூறாவளியாக பாய்ந்தாராமே!
பின்னே எதிரியின் வாள்வீச்சில் தப்பிக்கவேண்டுமானால்
சும்மாவா?

  1. வீட்ல இருக்கிற எல்லா பொருளையும் பத்திரப்படுத்தி வைச்சிருக்கிறதா சொல்றாரே உங்க வீட்டுக்காரர் எங்க வைச்சிருக்கார்?
    அடகுக் கடையிலதான்!


  1. உன்னைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி வாழ்க்கையிலே நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன்…
    இப்போ…
 மொத்த கஷ்டத்தையும் உன்கிட்டேயே அனுபவிக்கிறேன்!

  1. வாழ்க்கையிலே இன்பமும் துன்பமும் மாறிமாறி  வரும்னு சொல்றது உண்மைதான்!
     எப்படிச்சொல்றே?
   நாளையில் இருந்து நீ என் கூட வண்டியிலே வரேன்னு சொல்றியே!

  1. எல்.ஐ.சி ஏஜெண்ட்டுக்கு பொண்ணைக் கொடுத்தது தப்பா போச்சா? ஏன்?
    மாசாமாசம் பிரிமீயம் கேட்டு வீட்டுக்கு வந்துடறாரு!

  1. எப்பவும் பக்கத்துப் பையனை பார்த்து காப்பி அடிப்பானே ரமேஷ் இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
    சினிமா டைரக்டரா இருக்கான்!

  1. அந்த ஆபிஸ்ல லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாமே!
ஆமாம்! லஞ்சம் வாங்குறவங்க எல்லாருமே லூஸ் ஹேர்ல தான் இருப்பாங்க!


  1. ராணியார் ஏன் கோபமாக இருக்கிறார்?
மன்னர் பேஸ்புக்கில் பேக் ஐடியில் பெண்களோடு கடலை போடுவது அவருக்குத் தெரிந்துவிட்டது!

  1. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்னு ஏன் டாக்டர் புலம்பறார்?
இவர் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடியே பேஷண்ட் செத்துப் போயிட்டாராம்!

  1. அன்பே! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இந்த கடற்கரையும் சுண்டலுமாகவே கழிப்பது?
வேண்டுமானால் நாளையில் இருந்து வேறபீச்சுக்கு கூட்டிச்சென்று வேற சுண்டல் வாங்கித் தரேன்!

  1. வேலைக்காரிக்கிட்ட பாசமா இருக்கிறார்னு வீட்டுக்காரரை ஏன் கோபிச்சுக்கிறே?
அப்புறம் வேலைக்காரி மாசமாயிட்டா என்ன பண்றது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Comments

  1. ரசித்தேன் சிரித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. எல்லாம் அருமை. குறிப்பாக ஐந்து சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதியை கலாய்ச்சா எல்லோருக்குமே பிடிக்குது! நன்றி சார்!

      Delete
  3. இருபது சிரிப்பு மணிகள்!

    ReplyDelete
  4. கொஞ்சமென்ன நிறையவே சிரித்தோம்
    அருமையான நகைச்சுவை துணுக்குகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அதிகமாகவே ரசித்தேன். சிரித்தேன். நன்றி.

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை குறிப்பாக 5 ஸூப்பர் நண்பரே..
    எமது மதுரை விழா காண வருக...

    ReplyDelete
  7. \\வயிறெல்லாம் புண்ணா இருக்கு டாக்டர்னு சொன்னா ஒரு களிம்பைக் கொடுத்து இத தடவுங்க சரியாயிரும்னு சொல்றாரே!\\ வயிற்றுக்குள்ளே புண் என்றால் களிம்பை விழுங்கினா சரியாயிடும், அது கூடத் தெரியல. இவர் போலிதான்.

    ReplyDelete
  8. சிரித்து மகிழ்ந்தேன் நன்றி

    ReplyDelete
  9. சிரிப்பு வெடிகள்...

    ReplyDelete
  10. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  11. சிரித்து மகிழ்ந்தேன் சுரேஷ்.

    ReplyDelete
  12. ரசித்து சிரித்தேன்

    ReplyDelete
  13. ஹஹஹஹஹ்ஹ்ஹ் ரொம்பவே ரசித்தோம்! 5, 15, குறிப்பாக!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2