தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர்
ஹைக்கூ கவிதைகள்!
இருண்டதும்
அழகாகின்றன!
நகரங்கள்!
தழுவிவிட்டு
நழுவிக்கொண்டே
இருக்கின்றது
காற்று!
கேள்விகள்
விளைகையில்
வளர்கிறது
குழந்தை!
மையிட்டு
பொட்டுவைத்துக்கொண்டது
வானம்!
நிலா!
ஒளிரும்
சாலைகள்
ஊர்ந்தன
புழுக்கள்!
இரவில்
வாகனங்கள்!
கடத்தல்காரனை
காதலிக்கின்றது
உலகம்!
காற்று!
கடல்
குளியலில்
சூரியன்!
குளிர்ந்தது
பூமி!
கூசவில்லை!
மின்மினி!
விளக்கேந்தி
விடியலைத்
தேடுகின்றன
மின்மினிகள்!
ஆயிரம்
அர்த்தங்கள்
புதைந்துகிடக்கின்றது
குழந்தையின்
மொழி!
பொம்மைக்கு
அடிபட்டதும்
வலிக்கிறது
குழந்தை
மனசு!
சலனப்பட்டு
வாழ்க்கை
இழக்கின்றது
நீர்!
மூடிக்கொண்டன
இதழ்கள்!
மவுனம்!
மூழ்காமலே
முத்தெடுத்தது!
தாமரை
இலை!
ஒற்றைக்காலில்
தவம்!
கிடைக்கவில்லை
வரம்!
அல்லிமலர்கள்!
அழுக்காகத் தெரிவது
அழகாகிறது!
குழந்தையின்சட்டையில் மண்!
விரட்டினாலும் ஒட்டிக்கொள்ளவே
விரும்புகிறது
குழந்தையிடம் மண்!
விரும்புகிறது
குழந்தையிடம் மண்!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி
மின்மினிகளும், மையிட்ட வானமும் அழகோ அழகு அண்ணே
ReplyDeleteரசனைக்கு நன்றி அரசன்!
Deleteவரிகள் அனைத்தும் அருமை.
ReplyDelete"//மையிட்டு
பொட்டுவைத்துக்கொண்டது வானம்!
நிலா!//"
அப்புறம் குழந்தை சம்பந்தமான வரிகள் - எப்படி இப்படி சிந்திக்கிறீர்கள்.
அருமை. அருமை.
மிக்க நன்றி நண்பரே! சிந்தனைதான் என்பலம்!
Deleteகுழந்தையின் மொழி ..அழகு
ReplyDeleteஒற்றைக்கால் தவம்..அடடா...என்னமாய் இருக்கிறது
அருமை அருமை..ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது சகோ.
அல்லிப்பூ படம் சூப்பர்
ஒவ்வொரு வரிகளையும் ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி!
Deleteகுழந்தைகள் பற்றிய அனைத்துக் கவிதைகளும் அருமை
ReplyDeleteகுழந்தைகள் நமது கற்பனை களஞ்சியங்கள்! எவ்வளவோ எழுதலாம்! ஏதோ என்னால் முடிந்ததை எழுதினேன்! நன்றி மாது!
Deleteஅனைத்துமே மிக அருமை.
ReplyDeleteரசிப்புக்கு நன்றி!
Deleteஅனைத்தும் அருமை சுரேஷ்.
ReplyDeleteஅதிலும்..... மையிட்ட வானம்....
மூழ்காமல் முத்தெடுத்த இலை...... சூப்பரோ சூப்பர்.
ரசித்து பாராட்டியமைக்கு நன்றி சகோதரி!
Deleteஅனைத்துமே அருமை சுரேஷ்! ரசித்தோம்....மையிட்ட வானம், தாமரை இலை, குழந்தையின் மொழி....ஆஹா அட!
ReplyDeleteஉற்சாகமூட்டும் உங்களின் பின்னூட்டங்கள் எனக்கொரு உற்சாக டானிக்! தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தி இயங்க வைப்பதற்கு நன்றி!
Deleteஅனைத்துமே அருமை நண்பரே,,
ReplyDeleteபொம்மைக்கு அடிபட்டதும்
வலிக்கிறது
குழந்தை மனசு!
மிகவும் அருமை,
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி!
Deleteஅய்யா தங்களின் குறும்பா (ஐக்கூ) கவிதைகளில் மயங்கினேன். அதிலும் குறிப்பாக -
ReplyDelete“மையிட்டு
பொட்டுவைத்துக்கொண்டது வானம்!
நிலா!“ - என்றதும்,
மூழ்காமலே
முத்தெடுத்தது!
தாமரை இலை! - என்றதும் அருமையோ அருமை!
முடிந்தவரை குறும்பாக்களைத் தனித்தனியாக இடது, வலது என வடிவம்மாற்றி, பொருத்தமான படம் கிடைத்தால் சேர்த்துப் போடுவது கூடுதல் ஈர்ப்பைத் தரும் என்று நினைக்கிறேன். தொடருங்கள். நன்றி.
ரசித்து பாராட்டியதுடன் நல்ல ஆலோசனைகளை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறேன்! நன்றி!
Deleteஒற்றைக்காலில் தவம்!
ReplyDeleteகிடைக்கவில்லை வரம்!
அல்லிமலர்கள்!
அழுக்காகத் தெரிவது
அழகாகிறது!
குழந்தையின்சட்டையில் மண்!
விரட்டினாலும் ஒட்டிக்கொள்ளவே
விரும்புகிறது
குழந்தையிடம் மண்! - இவற்றை இன்னும் செதுக்கினால் இன்னும் ஒளிரக்கூடும் என்றும் நினைக்கிறேன். தவறாக எண்ணற்க.
உண்மைதான் ஐயா! இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்! திங்களன்றே எழுதி வெளியிட நினைத்தேன்! அன்று எழுதிக் கொண்டிருக்கையில் மின்சாரம் தடைபட்டு விட்டது. செவ்வாயன்று வெளியிடும் முன் ஒருமுறை சரிபார்த்து இருக்கலாம்! அப்படி செய்யாமல் விட்டுவிட்டேன்!
Deleteஒற்றைக்காலில் தவம்!
நிலாமலர மலர்ந்தது முகம்!
அல்லி மலர்கள்!
அழுக்கையும் அழகாக்கிறது
குழந்தைகள்!
சட்டையில் சேறு!
பிடித்துக்கொண்டபின்
ஒட்டிக்கொள்ளவே விரும்புகிறது
குழந்தையிடம் மண்!
இப்படி செதுக்கியிருக்கிறேன் இரண்டாம் முறை! உங்கள் ஆலோசனைகளை தாருங்கள்! தவறாக எண்ண மாட்டேன்! உங்களோடு ஒப்பிடுகையில் நான் சிறுவன்! ஐயா என்ற விளிமொழி தேவையில்லை! பெயரிட்டே அழையுங்கள் ஐயா!
அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅனைத்தும் அருமை. தொடரட்டும் ஹைக்கூ கவிதைகள்.
ReplyDeleteநன்றி நண்பரே! உங்களது படத்துக்கு சென்ற வாரம் ஹைக்கூக்கள் எழுதினேன்! நேரம் இருப்பின் படித்து கருத்துக்கள் பகிரவும். புகைப்பட ஹைக்கூ 77
Deleteமௌனம் உட்பட அனைத்தும் அருமை...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஒவ்வொரு ஹைக்கூவும் மனதை அள்ளிக்கொண்டு போகிறது!! அழகு:)
ReplyDeleteநன்றி சகோ! திருத்தங்கள் இருப்பினும் கூறவும்!
Delete//பொம்மைக்கு அடிபட்டதும்
ReplyDeleteவலிக்கிறது
குழந்தை மனசு!//
அழகான வரிகள்.
நன்றி சகோ!
Deleteசூப்பர்..பொட்டு வைத்த வானம்
ReplyDeleteநன்றி சகோ!
Delete