கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24

 கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24


  1. தலைவர் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னாராமே எந்த ஊரிலே கூட்டம்?
அட நீ வேற! கூட்டம் எந்த ஊரிலே இருந்தாலும் கூடற கூட்டத்தைத்தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்காரு!

  1. நம்ம கட்சியோட ஒவ்வொரு தொண்டனும் விலைமதிப்பு இல்லாதவர்கள்னு தலைவர் சொன்னது தப்பா போச்சு!
விலை மதிப்பில்லாம இங்க ஏன் இருக்கணும்னு எதிர்கட்சியிலே ஒவ்வொருத்தரா போய் சேர்ந்துட்டாங்க!

  1. இந்த படத்துல பாக்யராஜ், பாரதிராஜா, பாலசந்தர், பார்த்திபன்,னு எல்லா பெரிய டைரக்டர்களோட பாதிப்பும் இருக்கும்!
அப்ப இவங்க எல்லோரட படத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் சீன் சுட்டு படம் எடுத்திட்டீங்கன்னு சொல்லுங்க!

  1. முத்த போராட்டத்துக்கு ஆதரவளிச்சதால மேனேஜரோட கன்னம் வீங்கிருச்சா ஏன்?
போராட்டத்துக்கு ஆதரவளிச்சு வேலைக்காரிக்கு முத்தம் கொடுத்தது வீட்டுக்காரிக்கு தெரிஞ்சு போச்சாம்!

  1. அவரு பல பேரை உயரத்திலே ஏற்றி வச்சிருக்காரு!
     ஆசிரியரா?
   இல்லே லிப்ட் ஆபரேட்டர்!

  1. நம்ம தலைவர் ஒரு பழைய பஞ்சாங்கம்னு எப்படி சொல்றே?
அவனவன் டூ ஜி, த்ரி, ஜின்னு ஊழல் பண்ணா இவர் இன்னும் அரிசியிலும் முட்டையிலுமே ஊழல் பண்ணிக்கிட்டு இருக்காரே!

  1. மன்னா! எதிரி நம் ராணியாரை கவர்ந்து போய்க் கொண்டிருக்கிறான்!
விதி யாரை விட்டது! இனி அவனை யாராலும் காப்பாற்ற முடியாது!

  1. எதிரி நம் எல்லையோரம் கூடாரம் அடித்து இருப்பது மன்னருக்கு மூக்கில் வியர்த்துவிட்டது!
அப்புறம்?
      இரவோடு இரவாக அவனது கூடாரம் சென்று சமைத்துவைத்த உணவுகளை தின்று தீர்த்து விட்டார்!

  1. அந்த டாக்டருக்கு ரொம்பவும் இளகின மனசு!
     எப்படிச் சொல்றே?
பேஷண்ட் பிழைக்கலன்னா ஈமக்கிரியை செலவை இலவசமா செஞ்சு கொடுக்கிறாராமே!

  1. அவர் வக்கீலுக்கு படிச்சுட்டு டாக்டர் தொழிலுக்கு வந்தவர்னு எப்படி சொல்றே?
ஆபரேஷன் தேதியை ஜட்ஜ்மெண்ட் டே,ன்னு சொல்றாரே!

  1. அவரு செய்யற தொழில்ல ரொம்ப பக்திஉடையவர்னு சொல்றியே என்ன தொழில் செய்யறாரு!
     சிலை திருட்டுத்தான்!

  1. இந்த ஏரியாவுலே திருட்டு பயம் அதிகம்னு எப்படிச் சொல்றே?
பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கே!

  1. என் மனைவி மத்தவங்க முன்னாடி என்னை விட்டுக் கொடுத்து பேசமாட்டா!
பேஷ்! பேஷ்! அப்படித்தான் இருக்கணும்!
நீ வேற நான் செய்யற சமையல் முன்ன பின்ன இருந்தாலும் மத்தவங்க முன்னாடி திட்ட மாட்டான்னு சொல்ல வந்தேன்!

  1. எங்க ஆபிஸ்ல மானேஜரோட சீட்டை கிழிச்சிட்டாங்க!
    ஐயையோ! அப்புறம்?
   அப்புறம் என்ன புது சீட் ஒண்ணு வாங்கி தரவேண்டியதா போச்சு!

  1. அந்த ‘மால்’ல எல்லா பொருளும் மோசம் விலையும் அதிகம்!
அப்ப அது சரியான “கோல்மால்”னு சொல்லு!

  1. அக்பருடைய வரலாற்றை படிக்க அதிகம் செலவாகுமா சார்?
    ஏன் அப்படி கேக்கறே?
  நீங்கதானே அக்பருடைய வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டதுன்னு சொன்னீங்க!

  1. வாஸ்துப்படி நடந்ததுக்கு வீட்டில பெரிய கலாட்டா ஆயிருச்சா ஏன்?
இப்ப இருக்கிற வீடு சரியில்லை! சின்னவீடு பாருங்கன்னு சொன்னார்! சின்ன வீடு செட்டப் பண்ணதும் பெரிய பிரச்சன்னை ஆயிருச்சு!

  1. எங்க வீட்டுல நானே எல்லா துணியையும் துவைச்சு காயப்போடுனும்!
     இல்லாவிட்டால்!
   என் மனைவி என் வயித்தை காயப்போட்டுறுவா!

  1. நம் மன்னர் போர்க்களம் பல கண்டவர்னு சொல்றீங்க! ஆனா உடலில் ஒரு தழும்பு கூட இல்லையே!
    போர்க்களத்தை கண்டவர்னு சொன்னேன்! போரிட்டவர்னு சொல்லலையே!

 20 அவரு எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும் ஊதி தள்ளிட்டே இருப்பாரு!
    பெரிய சைக்ரியாட்டிஸ்டா?
    இல்லே பலூன் வியாபாரி!

 21. கட்சியின் உண்மையான தொண்டர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்னு எந்த தைரியத்தில் சொல்றார்!
    கட்சியிலே இருக்கிறதே ஒண்ணு ரெண்டு பேருதாங்கிற தைரியத்துலதான்!

 22. ஏம்ப்பா! ஒரு வாரமா ராப்பிச்சை எடுக்க வரலையே ஏன்?
இந்த ஏரியாவிலேயே பிச்சை எடுத்து பிச்சை எடுத்து போர் அடிச்சு போயிருச்சு! ஒரு மாறுதலுக்கு மூணாறுக்கு டூர் போய் பிச்சை எடுத்து வந்தேன்!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. எல்லாமே ஸூப்பர் சுரேஷ் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சுடச்சுட முதல் கமெண்ட் போட்டதற்கு நன்றி! ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் வந்து பார்க்கிறேன்! பணி அழைக்கிறது!

      Delete
  2. சுரேஷ் எல்லா நகைச்சுவைகளுமே நன்றாக இருந்தது.

    ReplyDelete
  3. எல்லாமே சூப்பர் பாஸ். அதிலும் - 6 ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  4. அனைத்துமே அருமை. ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  5. படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
  6. அனைத்தும் ரசித்தோம்....ஹ்ஹஹஹ் சூப்பர்..

    ReplyDelete
  7. லிப்ட் ஜோக் செம்ம!!!

    ReplyDelete
  8. நல்லா சிரிச்சேன் ..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2