புகைப்பட ஹைக்கூ 77

 புகைப்பட ஹைக்கூ 77


 மலையை
 முழுங்கிக் கொண்டிருக்கிறது
 நதி!

 அரண் போட்டும்
 அசரவில்லை!
 நதி!

 ஒடினாலும்
 பிடித்துவிட்டார்கள் படம்!
 நதி!

 கரைகளை
 கரைத்துக் கொண்டிருந்தது
 நதி!

 பிறந்த உடனே
 புகுந்தவீட்டுக்கு ஓடுகின்றது!
 நதி!

 சலனமே இல்லாமல்
 கவனத்தில் ஈர்த்தது
 நதி!

 குளிக்காமலேயே
 குளிர்வித்தது!
 நதி!

 ஓட்டத்தை நிறுத்தியது
 ஓடிக்கொண்டிருக்கும்
 நதி!

 இயற்கையை
 ரசிக்க செயற்கையாய் முளைத்தன!
 நதிக்கரையோர வீடுகள்!

 மலை தொடா வானம்
 மடியில் விழுந்தது
 நதியில்!

 பள்ளத்தில் விழுந்தாலும்
 உள்ளத்தில் கபடில்லை!
 நதி!

 உயரே பிறந்தாலும்
 துயர் அறுக்க கீழே வந்தது!
 நதி!

 இயற்கை வழிவிட்டாலும்
 செயற்கையாய் தடுக்கிறார்கள்!
 நதி!

 நீலவானம்! நீண்டமலை!
 துணையோடு பயணிக்கிறது
 நதி!

 இளமை பூசி
 வளமையாயின!
 நதியோடிய பகுதிகள்!

 மண் தாகத்தில்
 மறைந்து கொண்டிருக்கிறது
 நதி!

 ஓடிக்கொண்டே இருந்தாலும்
 இறைப்பது இல்லை!
 நதி!

 நதியின் ஆழத்தில்
 புதைந்து கிடக்கின்றது
 துயரங்கள்!

 மலைமகளை விரும்பினாள்!
 அலைமகள்!
 கடல்சேரும் நதி!

 கவர்ந்து கொண்டு ஓடியது!
 கவனிப்பார் இல்லை!
 நதி!

டிஸ்கி} பதிவர் திரு வெங்கட நாகராஜ் தன் வலைப்பக்கத்தில் ஒரு புகைப்படமும் கவிதையும் வெளியிட்டு நீங்களும் கவிதை எழுதலாம் என்று சொல்லியிருந்தார். அங்கே பின்னூட்டத்தில் ஒரு ஹைக்கூ எழுதினேன். இந்த புகைப்படம் எனது புகைப்பட ஹைக்கூ பகுதிக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே என் ஹைக்கூக்கள் இங்கு பதிவேற்றம். நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. நதி சுதி கொண்டு ஓடுகிறதே...

  ReplyDelete
 2. நதியில் குளித்த குளுமை தந்தது ,உங்கள் கவிதை !

  ReplyDelete
 3. நதியாய்ப் புரண்டு ஓடும் கவிதை வரிகள்..

  ReplyDelete
 4. ஆழமான தொடர் சிந்தனையின் மூலம்
  விளைந்த கவிதை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மிக மிக அருமையாக உள்ளது எப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சிரியமே மேலோங்கிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
 6. பிறந்த உடனே
  புகுந்தவீட்டுக்கு ஓடுகின்றது!

  அருமையான கற்பனை.

  ReplyDelete
 7. இந்த கவிதை நதியில் நானும் காலை நனைத்துவிட்டேன்.
  அருமை.

  ReplyDelete
 8. // பிறந்த உடனே புகுந்தவீட்டுக்கு ஓடுகின்றது - நதி //

  ரசித்தேன்...

  ReplyDelete
 9. நதி என்று நதியெடுக்க வைத்து விட்டீர்கள்! அருமை!

  ReplyDelete
 10. நதிபாடும் இசைக்கு ஸ்ருதி சேர்த்தது உங்கள் கவிதை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2