தளிர் சென்ரியு கவிதைகள் 10
தளிர் சென்ரியு கவிதைகள் 10
1. தள்ளாட விட்டு தலைநிமிர்கிறது
தமிழகப்
பொருளாதாரம்!
டாஸ்மாக்!
2. எங்கெங்கும் பறக்குது கொசு!
எளிதாக
பரவி வருகுது
டெங்கு!
3. தள்ளி வைக்கப்பட்ட
கள்ளிச்
செடிகள்!
பிச்சைக்காரர்கள்!
4. அள்ளிக் குவித்தவர்கள்
துள்ளி
குதிக்கிறார்கள்!
கிரானைட்
முதலைகள்!
5. கலர் கலராய் கடைகளில் தண்ணீர்!
உலர்ந்து
போனது உடலுக்கு நல்ல
இளநீர்!
6. தூங்காத வாகனங்கள்
துயில்
எழுப்புகின்றன!
நகரவாசிகள்!
7. தூசும் புகையும் மாசு!
துரும்பாய்
நினைத்தால்
அள்ளலாம்
காசு!
8. பஞ்சனை கிடைத்தும்
படுத்து
இளைப்பாறவில்லை!
பன்னீர்
செல்வம்!
9. உதிரும் பூக்கள்!
கோர்ப்பார்
இல்லை!
காங்கிரஸ்!
10. ஊசலாடும் உயிர்கள்!
ஊமையான
கட்சிகள்!
உறக்கத்தில் இந்தியா!
11. பிரபலங்கள்
பெருக்கினார்கள்!
சேர்ந்தது குப்பை!
தூய்மை இந்தியா!
12. தேய்த்து குளித்தாலும்
விடவில்லை
அழுக்கு!
கோத்ரா சம்பவம்!
13. குப்பையான கோயில்கள்!
தெருவுக்கு
வந்த கடவுள்!
வீதி உலா!
14. உதைத்து ஆடினாலும்
ரசித்து
பார்த்தார்கள்!
கால்பந்து!
15. சுத்தம் செய்கையில்
அழுக்கானது
துடைப்பம்!
ஆம்
ஆத்மி!
16. பெருகிய வாகனங்கள்!
அருகிப்போனது!
நடை!
17. படிப்படியாக பால் ஊற்றினார்கள்!
துடித்துக்
கொண்டு இருந்தது
பால்வற்றிய
தாயுள்ளம்!
18. வேண்டி வருவனிடம்
வேண்டிக்
கொண்டிருந்தார் கடவுள்!
உண்டியல்!
19. நெல்லாய் விளைந்த மண்ணில்
கல்லாய்
முளைத்தது கட்டிடங்கள்!
வீட்டுமனைகள்!
20. கிழிந்து கிடந்தாலும்
நிறைந்து
கிடக்கிறது பை!
பிச்சைக்காரன்!
டிஸ்கி}
கவிதையை எழுதி மேலும் செம்மைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கிறார் ஐயா
முத்துநிலவன். ஆனால் நான் பெரும்பாலும் அப்போதே சுடச்சுட என்ன தோன்றுகிறதோ அதை
எழுதி அப்படியே பதிவிட்டு விடுகிறேன்! என்னுடைய பெரும்பாலான பதிவுகள்
அப்படித்தான்! அதே போலத்தான் இந்த பதிவும். இன்று சென்ரியு எழுதலாம் என்று வந்து
6-15 மணிக்கு அமர்ந்தேன்! நாற்பத்தைந்து நிமிடங்களில் விளைந்த சென்ரியுக்கள் இவை!
உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை பின்னூட்டத்தில் தெரிவித்தால் இன்னும்
சிறப்பாக எழுத முயல்வேன்! நன்றி!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
எல்லாமே சமுக சிந்தனையுடன் இருக்கின்றன .....நன்று
ReplyDeleteஇதிலேயே அரசியலுமா? அட!
ReplyDeleteஎல்லாமே அருமை.
வணக்கம்
ReplyDeleteசொல்லிய கருத்துகள் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்தும் முத்துக்கள் நண்பரே...
ReplyDeleteஎமது மதுரை பதிவர் விழா பதிவு.
சிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்
சிறப்பான கவிதைகள் ஐயா...
ReplyDeleteநானும் அப்படித்தான் எழுதி அப்போதே பதிவிட்டுவிடுவேன்...
தொடர்கதை கூட அப்போ அப்போத்தான் எழுதுறது வழக்கம்...
அருமையான கவிதைகள்.
ReplyDelete"//பஞ்சனை கிடைத்தும்
படுத்து இளைப்பாறவில்லை!
பன்னீர் செல்வம்!//"
பாவம் பன்னீர் செல்வம் - தங்களிடமிருந்து நடப்புச் செய்தியும் தப்பவில்லை.
செம்மைப்படுத்தாமலே நீங்கள் எழுதுவது அருமை என்றால் செம்மைபடுத்தினால் எங்கோ சென்றுவிடுவீர்கள் பாராட்டுக்கள்
ReplyDelete///நான் பெரும்பாலும் அப்போதே சுடச்சுட என்ன தோன்றுகிறதோ அதை எழுதி அப்படியே பதிவிட்டு விடுகிறேன்! என்னுடைய பெரும்பாலான பதிவுகள் அப்படித்தான்! ///
ReplyDeleteநானும் அப்படியே
சுடச்சுட எழுதினாலும் கவிதைகள் சுவையாகத் தான் இருக்கின்றன அய்யா!
ReplyDeleteநன்றி
கருத்தளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
ReplyDeleteசுடச் சுடக் கவிதைகள் அருமையாக சூடாகவும் உள்ளன நண்பரே! கலக்குங்கள்!
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDelete