உங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப்படி?
உங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப்படி? இன்றைய அவசர உலகில் வாட்ஸ்- அப் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செய்தியையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்து எல்லோரையும் அடைய வைப்பதில் வாட்ஸ்- அப்- பின் பங்கு அதிகம். எனவேதான் இந்த செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது என்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மொபைலில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இளைஞர்கள் இந்த செயலியை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் சற்று வயது முதிர்ந்தோருக்கு இந்த செயலியை பயன்படுத்துவதில் சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். எழுத்துக்களை டைப் செய்கையில், காப்பி பேஸ்ட் செய்கையில் சிறிய மொபைல் டச் ஸ்க்ரீனில் தடுமாற்றம் ஏற்படும். மேலும் பெரிய செய்திகளை மொபைலில் டைப் செய்ய நிறைய நேரம் பிடிக்கும். தமிழ் டைப்பிங் மொபைலில் சிலருக்கு இருக்காது. வீட்டில் ஓய்வாக இருக்கையில் வாட்ஸ்- அப் மொபைலில் கையில் வைத்துக் கொண்டு பயன்படுத்தும் போது நிறைய நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு படிக்கும் போது வலிகள் ஏற்படலாம்....