உங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப்படி?
உங்கள் கணிணியில்
இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப்படி?
இன்றைய அவசர உலகில் வாட்ஸ்- அப் பெரும் பங்கு வகிக்கிறது.
எந்த ஒரு செய்தியையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்து எல்லோரையும் அடைய
வைப்பதில் வாட்ஸ்- அப்- பின் பங்கு அதிகம். எனவேதான் இந்த செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம்
வாங்கியது என்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
மொபைலில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே
இல்லை எனலாம். இளைஞர்கள் இந்த செயலியை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கலாம்.
ஆனால் சற்று வயது முதிர்ந்தோருக்கு இந்த செயலியை பயன்படுத்துவதில் சில தடுமாற்றங்கள்
இருக்கத்தான் செய்யும்.
எழுத்துக்களை டைப் செய்கையில், காப்பி பேஸ்ட் செய்கையில்
சிறிய மொபைல் டச் ஸ்க்ரீனில் தடுமாற்றம் ஏற்படும். மேலும் பெரிய செய்திகளை மொபைலில்
டைப் செய்ய நிறைய நேரம் பிடிக்கும். தமிழ் டைப்பிங் மொபைலில் சிலருக்கு இருக்காது.
வீட்டில் ஓய்வாக இருக்கையில் வாட்ஸ்- அப் மொபைலில்
கையில் வைத்துக் கொண்டு பயன்படுத்தும் போது நிறைய நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு
படிக்கும் போது வலிகள் ஏற்படலாம். அப்போது ஓர் சலிப்பு தட்டத்தான் செய்யும்.
உங்கள் வீட்டில் கணிணியும் இணைய இணைப்பும் இருந்தால் வாட்ஸ் அப் பை கணிணியில்
பயன்படுத்த முடியும். அதில் வேகமாக டைப் செய்யவும் காப்பி பேஸ்ட் செய்யவும் பிறருக்கு
பார்வேர்ட் செய்யவும் முடியும்.
கணிணியில் வாட்ஸ்- அப் உபயோகிப்பது எப்படி?
1.
உங்கள்
கணிணியை ஆன் செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். பின்னர் அதில் வாட்ஸ்- அப் –வெப் என்ற
பக்கத்திற்கு செல்லவும்.
2.
உங்கள்
மொபைலில் இணைய இணைப்பை சொடுக்கி வாட்ஸ்- அப் பக்கத்தினை சொடுக்கவும். வாட்ஸ் அப் பேஜில்
நுழைந்தவுடன் அதன் வலது மூலையில் மூன்று புள்ளிகள் ஒன்றன் கீழ் ஒன்றாக காட்டும் அங்கே
சொடுக்கினால் ஒரு பக்கம் திறக்கும். அதில் வாட்ஸ் அப்- வெப் என்பதை சொடுக்கவும்.
3.
கணிணியின்
வாட்ஸ் அப் வெப் பக்கத்தில் இடது ஓரத்தில் ஓர் க்யு ஆர் கோட் ரீடர் காணப்படும். அதை
உங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்யவும்.
4.
ஓரிரு
நிமிடங்களில் ஸ்கேன் முடிந்து வாட்ஸ் அப் கணிணியில் தோன்றும். இப்போது அதில் நீங்கள்
பிறருக்கு மெசேஜ் அனுப்பவும் மெசேஜ் படிக்கவும் முடியும்.
இந்த
முறையில் ஓர் குறை இருக்கிறது. அது உங்கள் கணிணியிலும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
மொபைலிலும் இணைய இணைப்பு இருக்க வேண்டும். இரண்டில் எதில் தடை பட்டாலும் உபயோகப்படுத்த
முடியாது. இரண்டிலும் டேட்டா செலவாகும்.
ஆனால் உபயோகம் செய்ய வசதியாக இருக்கும். டேட்டா யூசேஜ் போனில் தவிர்க்க வேண்டும் என்றால்
உங்கள் போனில் வை.ஃபை கனெக்ஷனை ஆன் செய்து பயன்படுத்த வேண்டும். அப்போது டபுள் டேட்டா
செலவாவது குறையும்.
பல்வேறு போன்களில் வாட்ஸ் அப்- வெப் பேஜிற்கு செல்வது எப்படி என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
- On Android: in the Chats screen > Menu > WhatsApp
Web.
- On Nokia S60 and Windows
Phone: go to Menu > WhatsApp
Web.
- On iPhone: go to Settings > WhatsApp
Web.
- On BlackBerry: go to Chats > Menu > WhatsApp
Web.
- On BlackBerry 10: Swipe down from top
of the screen > WhatsApp Web.
- On Nokia S40: Swipe up from bottom of screen > WhatsApp Web.
நண்பர்களே! இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நான் கற்றுக்கொண்ட இன்னும் சில தகவல்களை தொழில்நுட்ப பதிவில் தொடர்ந்து தர அது உதவியாக இருக்கும் நன்றி!
எப்படியும் நவீன அலைபேசி வேண்டும்.... என்பதால் நான் பயன்படுத்த முடியாது! :)
ReplyDeleteசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதை தான்!
தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.
உபயோகமான தகவல்களுக்கு நன்றி. யார் சொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கும் இந்த மாதிரி விஷயங்கள் நிறைய. மீண்டும் நன்றி, சுரேஷ் சார். உற்சாகத்துடன் தெரிந்து கொள்கிறேன்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteபயனுள்ள பதிவு. உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்வேன். நன்றி.
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeletehttp://ypvn.myartsonline.com/
பயனுள்ள பதிவு தான்! ஆனாலும் எனக்கு அந்த அளவுக்கு வாட்ஸ் அப் மோகம் பிடித்துக் கொள்ளவில்லை. அவசர, அவசியத்துக்கு மட்டும்!
ReplyDeleteபயனுள்ள தகவல் சுரேஷ். இப்போதுதான் நாங்கள் இருவருமே ஸ்மார்ட்டாகியுள்ளோம். தடவிக் கொண்டிருப்பதால் அதிகம் உபயோகிப்பதில்லை. இருந்தாலும் கணினி என்றால் கொஞ்சம் எளிதுதான்.
ReplyDeleteகீதா: மகனும் சொல்லியிருக்கிறான் இதனை. நான் ஃபோனில் தட்டுவதற்கு மிகவும் கஷ்டப்படுவதால்...
அட!!!! நாங்களும் இப்போத்தான் ஒரு மாசமா ஸ்மார்ட்! :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபயனுள்ள தகவல் ... பயன்படுத்தி பயனடைந்துள்ளேன் ...நன்றி!
ReplyDelete