கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 71

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  பகுதி 71


1.   கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லேன்னு தலைவர் சொல்லிட்டாராமே!
கொடுத்தாலும் வாங்கிறதுக்கு அங்கே தொண்டர்கள் யாரும் இல்லையே!

2.   அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு போறாங்க?
சூரணம் விக்கிறதா சொல்லி பல பேரோட சொத்துக்களை ஜீரணம் பண்ணிட்டாராம்!

3.   பேஸ்புக்குல நம்ம படத்தோட டீசருக்கு நிறைய வரவேற்பாமே!
ஆமா! சின்ன குழந்தை கூட டீஸ் பண்ணி  கமெண்ட் பண்ணிகிட்டு இருக்கு!


4.   தன்னோட வழக்கை சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க தலைவர் விரும்பலையாமே?
கோடி கோடியா சொத்து இருக்கிறப்ப சைபர் போலீஸ் விசாரிக்கிறது இழுக்குன்னு நினைக்கிறாராம்!

5.    ஆனாலும் அந்த சர்வருக்கு நக்கல் அதிகம்?
  எப்படி சொல்றே?
சோலாப் பூரி உப்பலா இருக்க வேணாமான்னு கேட்டா நீங்க ஏற்கனவே உப்பி இருக்கீங்க! இன்னமும் உப்பணுமான்னு கேக்கறான்!

6.   எதிரி எல்லை தாண்டி விட்டான் மன்னா!
  நம் கொல்லைக் கதவை திறந்தே வைத்துவிடுங்கள் அமைச்சரே!

7.   அந்த வக்கீல் டேபிள் மேல ஏன் ஸ்பேனர் செட் வைச்சிருக்காரு?
அவர் கேஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேய்ஞ்சிடுவாராம்!


8.   ”கேஸ் ட்ரபுள்”னு டாக்டர் கிட்ட போனியே என்ன ஆச்சு?
அடைச்சி  வெச்சி பீஸை பிடுங்கிட்டுதான் விட்டாரு!

9.   சீரியல் நடிகையை பொண்ணு பார்க்க போனது தப்பா போச்சு!
  ஏன்?
காலையில வரச்சொல்லிட்டு நைட்டு தான் பொண்ணையே காமிச்சாங்க!

10. ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடுவேன்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே எதுக்கு?
ஆத்துமணல் வியாபாரம் பண்றதைதான் அப்படி சிம்பாலிக்கா சொல்றாரு!

11.  பிறந்த நாளும் அதுவுமா உன் பொண்டாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டான்னு சொல்லிட்டிருந்தேயே என்ன ஆச்சு!
புதுசா ஒரு பட்டுப்புடவை வாங்கி கட்டிக்கிட்டான்னு சொன்னேன்!

12. புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?
  மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!

13.  தலைவருக்கு நடிக்க தெரியாது….!
ஓ அதனாலே தான் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தாரா?!

14.  எங்க அம்மா கூட சண்டை போடலைன்னா என் மனைவிக்கு தூக்கமே வராது…!
அதுக்காக ஊருக்கு போயிருக்கிற உங்க அம்மா கூட வாட்ஸப் சாட்டீங் ல சண்டை போடறதெல்லாம் ரொம்ப ஓவர்!

15. புதுசா கிரகப்பிரவேசம் ஆன வீட்டுல சிலைகளை பதுக்கி வச்சி இருந்தாங்களாமே?
அப்ப அது விக்கிரக பிரவேசம் ஆன வீடுன்னு சொல்லு!

16.  அந்த சாமியார் போலின்னு எப்படி சொல்றே?
முக்தி அடைய வழி காட்டுங்கன்னு சொன்னா கூகூளில் போய் தேடுன்னு சொல்றாரே!

17.  உங்க கணவருக்கு வந்திருக்கிறது சிவியர் அட்டாக்! எந்த அதிர்ச்சியான தகவலையும் சொல்லக் கூடாது…!
   நீங்கதான் அவருக்கு வைத்தியம் பாக்கறீங்கன்னு கூட சொல்லக் கூடாதா டாக்டர்!

18.  நம் மன்னர் எதிரியை கிட்டே நெருங்கவே விடமாட்டார்!
  துரத்தி அடித்து விடுவாரா?
 இவர் தூரமாய் ஓடிவந்துவிடுவார்!

19. தலைவர் கட்சியை தன் கைக்குள்ள வைச்சிருந்தார்!
  இப்ப?
எல்லோரும் கையை கழுவிட்டு போயிட்டாங்க!


20.  வீடு கட்ட லோன் வேணும்!
   எப்படி கட்டுவீங்க!
செங்கல்லும் சிமெண்ட்டும் வச்சுத்தான்!

21.  அந்த டாக்டரை பேஷண்ட் எல்லோரும் தெய்வமா மதிக்கிறாங்க!
எங்க டாக்டர் பேஷண்ட் எல்லோரையும் தெய்வமா மாத்திருவாரு!

22.  எடை கொறைச்சலா இருக்குதுன்னு இன்குபேட்டரில வச்சிருக்கிற குழந்தை யாருது?
       ரேசன் கடைக் காரரோடுதாம்!

23. மன்னர் இப்போதெல்லாம் காஷாயம் உடுத்திக் கொண்டு வருகிறாரே ஏன்?
    தவ வாழ்க்கை வாழ்வதாக சிம்பாலிக்கா சொல்கிறாராம்!

24.  போர் என்று வந்ததும் மன்னர் “வீறு” கொண்டு எழுந்துவிட்டார்!
       அப்புறம்!
  வேறு வழியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கிவிட்டார்!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!Comments

 1. அனைத்தும் வெடிச் சிரிப்புகள்..ரசித்தோம் சுரேஷ்...கலக்குறீங்க போங்க

  ReplyDelete

 2. அருமையான நகைச்சுவைத் தொகுப்பு
  தொடருங்கள் தொடருகிறேன்

  ReplyDelete
 3. ரசித்தேன்
  சிரித்தேன்நண்பரே
  நன்றி

  ReplyDelete
 4. அனைத்தும் ரசித்தேன். குறிப்பாக 11

  ReplyDelete
 5. திமிறிக் கொண்டு வழியும் ஜோக்ஸ் கூட. அதற்கான படங்கள் அற்புதம். 22, 17, எல்லாம் பிரமாத ரகம்.

  மன்னர்-- தளபதி, டாக்டர்--பேஷ்ண்ட், தலைபர்--தொண்டர், சாமியார்-- ஜகத்ஜாலம் ------ இந்த ஏரியாவெல்லாம் ஜோக்ஸ் சுரங்கம் போலிருக்கு!

  ReplyDelete
 6. சரவெட்கள் அனைத்தும் நன்று

  ReplyDelete
 7. அனைத்தும் அருமை . விக்கிரக பிரவேஷம் அருமை.

  ReplyDelete
 8. கொஞ்சம் என்ன, நிறையவே சிரிச்சுட்டேன்!

  ReplyDelete
 9. அனைத்துமே அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

  ReplyDelete
 10. என் மன இறுக்கத்தைத் தளர்த்தியது! எல்லாமே அருமை!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2