நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 8

நொடிக்கதைகள்! பகுதி 8

டீ.வி!
  ஒழுங்கா ஹோம் ஒர்க்கை முடி! எப்ப பாரு போகோவும் டோரேமானும் பார்த்துக்கிட்டு காலையிலே எழுந்துக்க மாட்டேங்கிறே என்று ஹாலில் இருந்த டீவியின் சுவிட்சை அணைத்து மகளை எழுப்பியவள் பெட்ரூமினில் நுழைந்து டீவி ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பித்தாள்.

பூனை!
   மிருக காட்சி சாலையில் புலியை பார்க்க கூட்டம் அதிகம். புலியார் போட்டதை தின்று உறங்கி கிடந்தார். கூட்டத்தின் சலசலப்பு அவர் லட்சியம் செய்யவில்லை.  அப்பாவின் முதுகில் நின்று எட்டிப் பார்த்த குழந்தை கைதட்டி சிரித்து சொன்னது  “ ஹை! பூனை! ஹை பூனை!”

மாசக்கடைசி!
     மாசக்கடைசி! கையில் சில்லறை புரளவில்லை! எந்த வாகனாமவது சிக்காதா? என்று டிராபிக்கை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் , வசமா சிக்கிட்டான்யா! என்று ஹெல்மெட் போடாத ஒருவனை மடக்கினார். “ ஹெல்மெட் போடலை! லைசென்ஸ் வச்சிருக்கியா? ஆர்சி புக் இருக்கா? என்ன நம்பர் ப்ளேட் காணோம்? ரேட் கூடிக்கிட்டே போவுது! சரி சரி! எவ்ளோ வச்சிருக்கே என்று கேட்க  அவன் சட்டை பையை துழாவியபடி! “ சார் மாசக் கடைசி! பாக்கெட்ல பத்து ரூபா கூட இல்லை!” என்றான்.

லைக்ஸ்!

    அந்த பிரபலம் மறைந்தார் என்று பேஸ்புக்கில் போடப்பட்ட ஸ்டேட்டஸ் வாங்கியது லட்சக் கணக்கில் “ லைக்ஸ்”

ஜங்க்!
   ” உங்க போன்ல நிறைய ஜங்க்ஸ் இருக்கு! அதான் போன் ஸ்லோவா ஆயிருச்சு!
    “அப்படின்னா!”
நிறைய தேவையில்லாத பைல்ஸ் குப்பைகளா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கு! க்ளீன் பண்ணா சரியாயிரும் என்றான்
அவன் மேஜையை நோக்கினேன். நிறைய  போன் எச்சங்கள் குப்பைகளாய் இரைந்து கிடந்தன.

நேரம்!

     பஜாரில் எதேச்சையாய் சந்தித்துக் கொண்டார்கள் சதாசிவமும் வேதாசலமும். என்னப்பா வீட்டு பக்கம் வர மாட்டேங்கிறே! “ எங்க சதாசிவம்! ரிடையர் ஆயிட்டேன்னுதான் பேரு! வேலை குறையலை! கடை கண்ணிக்கு போறது பிள்ளைகளை மடக்கிறது கரண்ட் பில் கட்டறதுன்னு ஏகப்பட்ட வேலை நேரமே கிடைக்க மாட்டேங்குது நீ கூடத்தான் இப்ப நம்ம வீட்டு பக்கம் வரவே மாட்டேங்கிற? நீ சொல்ற வேலையைத்தான் நானும் செய்துகிட்டு இருக்கேன் எங்க கிடைக்குது நேரம்? உக்கார நேரம் இல்லை! என்றவர்கள் வீடு திரும்பி  பேஸ்புக்கில்  மூழ்க ஆரம்பித்தனர்.

விடுமுறை!
   கோடை விடுமுறை முடிந்து விட்டது. நிரம்பி வழிந்த நீச்சல் கேம்ப், செஸ் கோச்சிங், கிரிக்கெட் கோச்சிங், கம்ப்யூட்டர் கோச்சிங் செண்ட்ர்கள் ஈ ஒட்டின. விடுமுறை என்றால் என்னவென்றே தெரியாமல் மீண்டும் பள்ளிகளுக்கு படை எடுத்தன குழந்தைகள்.

ஈரம்:
   மழையே இல்லை! பயிரெல்லாம் காஞ்சி கிடைக்குது! கரண்டும் வரலை! என்ன விவசாயம் பண்றது? பூமியிலே ஈரமே காஞ்சி போயிருச்சு! அலுத்துக் கொண்டான் விவசாயி! அறுவடை நேரம் மழை பொத்துக்கொண்டு கொட்டியது! பயிரெல்லாம் சாய்ஞ்சு முளைச்சு போயிருமே! ஈரம் பட்ட நெல்லு விலை போவாதே! ஈரம் காய மாட்டேங்குதே! இப்போதும் அலுத்துக்கொண்டான் அதே விவசாயி!

கவசம்!
     அம்மா! பயமா இருக்குதுன்னு சொன்னியே! சஷ்டிக் கவசம் வாங்கிவந்து இருக்கேன்! இதை படி! பயமெல்லாம் போயிரும்! என்று புத்தகத்தை நீட்டிய மகனிடம் ஹெல்மெட்டை நீட்டி, எனக்கு உன்னை பத்திதான் பயம்! இதை போட்டுக்கிட்டோ போ! நீ இந்த கவசம் போட்டுகிட்டா எனக்கு எந்த பயமும் வராது!  என்றாள் அம்மா.

பாவம்!
      தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த பூனைக்குட்டிகளை பிடித்து வந்த வினோத்திடம், “ தாய்கிட்டே இருந்து குட்டிகளை பிரிக்கிறது பாவம்பா! கொண்டு போய் விட்டுடு!” என்று சொன்ன தாத்தா,  அவ வேணா டைவர்ஸ் வாங்கிட்டு போவட்டும்! பேரன் நம்ம கிட்ட தான் இருப்பான்! கூட அனுப்ப முடியாதுன்னு சொல்லிடு! மகனிடம் கறாராக கூறிக்கொண்டிருந்தார்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. 'விடுமுறை' மனதில் பதிந்தது.

    ReplyDelete
  2. தொடக்க கதை டி.வி அட்டகாசம் நடைமுறை உண்மை அனைத்தையும் ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  3. பாவமும், விடுமுறையும் அட்டகாசம்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    கதையின் தொடக்கமும் முடிவும் சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஈரம் ..மழை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2