கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 67

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 67


1.   நம்ம தலைவர் மீண்டும் சினிமாவுலே நடிக்க போறாராம்!
அப்ப இனிமே அடி உதை எல்லாம் வில்லனுக்கு மட்டும் தான்னு சொல்லு!

2.   தலைவர் எப்பவும் பேண்ட் சட்டையோடவோ இருக்காரே ஏன்?
கட்சியிலே நிறைய கோஷ்டிகள் இருக்குதே..! அவருடைய வேஷ்டியை உருவிடப்போறாங்கன்னு பயம்தான்!


3.   உன் பையன் செண்டம் எடுக்கலைன்னு ஏன் இப்படி கரிச்சுக் கொட்டுறே அதான் பாஸ் பண்ணிட்டான்லே..!
  புது ஸ்கூல்ல இவனை சேர்க்க நான் நிறைய தண்டம் அழனுமே அதுக்குத்தான்!

4.   ஆபீஸ் போற அவசரத்துல  நேத்து குழம்புக்கு தாளிக்க மறந்து போயிட்டேன்!
அப்புறம்?
வீட்டுக்கு போனதும் என் பொண்டாட்டி என்னை தாளிச்சு எடுத்திட்டா!

5.   புதுசா கல்யாணம் பண்ணிக்கினவங்க கொடைக்கானல் போறதுல ஒரு சிம்பல் இருக்கு…
  என்ன சொல்றே?
அங்கதானே சூசைட் பாயிண்ட் இருக்கு!

6.   உன் பையனை எதுக்கு திட்டிக்கிட்டு இருக்கே!
இவ்வளவு கம்மியா மார்க் எடுத்திருக்கியே மத்தவங்க எல்லாம் நிறைய எடுத்திருக்காங்களேன்னு கேட்டாக்க என் மார்க்கையெல்லாம் அவங்க திருடிகிட்டாங்கன்னு சொல்றான்!


7.   கமலாவுக்கு பையன் பொறந்தும் ஏன் இப்படி கண்கலங்கிட்டு நிக்கறா?
இவனுக்கு பொண்ணை தேடி முடிக்கணுமே பொண்ணா பொறந்திருந்தா ஜாலியா இருந்திருக்கலாம்னு யோசிக்கிறா!

8.   தலைவர் சூப்பர் சிங்கர் ரசிகரா இருப்பாருன்னு எப்படி சொல்றே?
தோல்வியை ஏத்துக்கிறேன்! ஆனா வைல்ட் கார்ட் ரவுண்ட் எதுவும் தர மாட்டாங்களான்னு கேக்கறாரே!

9.   தளபதியாரே போரில் நம் மன்னரின் கை ஓங்கி இருக்கிறதா?
  எங்கே மந்திரியாரே! நம் மன்னரின் கை வீங்கிதான் இருக்கிறது!

10.  இளவரசர் உங்கள் மகன் என்று நிரூபித்துவிட்டார் மன்னா!
    எப்படி?!
கோலி ஆட்டத்தில் தோற்றுவிட்டு முட்டி தேய்த்து விட்டு வந்திருக்கிறாரே!


11.  பொண்ணு ஐ.டி கம்பெனியிலே ஒர்க் பண்ணுது…!
  அப்ப ரேசனை விட பேசனுக்குதான் நிறைய செலவாகும்னு சொல்லு!

12.  தலைவர் பொய் கணக்கு எழுதி மாட்டிக்கிட்டாராமே அப்படி என்ன எழுதினார்?
  சரிஞ்சி கிடந்த செல்வாக்கை நிமிர்த்தி கட்ட சிமெண்ட் – கம்பி வாங்கியதுன்னு எழுதினாராம்.

13. உங்க மாப்பிள்ளைக்கிட்டே நிறைய பேர் தலையைக் கொடுத்து மாட்டிகிப்பாங்கன்னு சொல்றீங்களே அப்படி என்ன பண்றார்?
  பார்பர் ஷாப் வைச்சுக்கிட்டு இருக்கார்!

14.  பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எதுக்கு கையிலே க்ளவுஸ் போட்டுகிட்டு வந்து இருக்காங்க?
பொண்ணு பிடிச்சாத்தான் கை நனைக்கணுங்கிறதுலே அவங்க ரொம்ப ஸ்டிரிக்டா இருக்காங்களாம்!

15. நம்ம தலைவர் ஒரு ஐ.பி.எல் ரசிகர்…!
  அதனாலே கட்சியை வருஷத்துக்கு ஒரு தரம் ஏலம் விடறதெல்லாம் ரொம்ப ஓவர்.

16. அவர் ஆட்டோ டிரைவர்னு எப்படி சொல்றே?
  துணிக்கடையிலே மூணு மீட்டர் துணி வாங்கிட்டு மீட்டருக்கு மேல போட்டுக் கொடுங்கன்னு அடம்பிடிக்கிறாரே!


17.  மந்திரியாரே! எதிரியிடம் இருந்து என்ன சேதி வந்திருக்கிறது..?
அதைச்சொன்னால் உங்களுக்கு ‘பேதி” ஆகிவிடுமே மன்னா!

18.  இராம. நாராயணன் இப்ப குரங்கை வச்சி படம் எடுத்தா என்ன பேர் வைப்பாரு?
   இது நம்ம வாலு!

19. தலைவர் ஓட்டு வாங்கப் போன இடத்திலே…
  போன இடத்திலே…
ஓட்டோ ஒட்டுன்னு ஒட்டிட்டாங்களாம்!

20. நம் மன்னர் பெரிய குஜால் பேர்வழியாமே…
  பின்னே  அந்தப்புரம் போதாது என்று இந்தப்புரமும் இரண்டு வைத்திருக்காரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை  பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஹாஹாஹா ஒவ்வொன்றும் ஒவ்வொரு நடிகரையும், தலைவரையும் சூசுகமாக சொல்கின்றது நண்பரே அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete


  2. கொஞ்சம் சிரித்துவிட்டு போங்கள் என்று சொல்லி வர வழைத்து நிறைய சிரிக்க வைத்துவீட்டீர்களே

    ReplyDelete
  3. தாராளமாகவே சிரித்தேன்.

    ReplyDelete
  4. ஹஹஹஹ்ஹ்ஹ செம ரொமப்வே சிரித்துவிட்டோம் சுரேஷ்...செம தாக்கல்ஸ் நையாண்டி

    ReplyDelete
  5. நல்லா ரசித்து...சிரிப்பை மட்டும் நிப்பாட்டமுடியலை....யே...சூப்பர்

    ReplyDelete
  6. நகைச்சுவையில் நனைந்தேதன், நன்றி

    ReplyDelete
  7. அந்தப்புரம் இந்தப்புரம் ..இருப்பது எந்தப்புரமோ ?ரசித்தேன் :)

    ReplyDelete
  8. நகைச்சுவை அனைத்தும் அருமை சார்.

    ReplyDelete
  9. நல்ல நகைச்சுவை மழை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2