இண்ட முள்ளு!
இண்ட முள்ளு!
இண்ட முள்ளுவின் ஆசிரியர் அரசனின் கவிதைகள் என்னை
மிகவும் கவர்ந்தவை. தமிழ்த்தோட்டம் என்னும் வலையில் நானும் எழுதியபோது பழக்கம். பின்னர்
அவரது வலைப்பூவில் அவரது மண்வாசனை கமழும் படைப்புக்களை படித்து ரசித்து வியந்திருக்கிறேன்.
மண்மணம் கமழும் அவரது படைப்புக்கள் அவரின் திறமையை பறைசாற்றும். அவரது முதல் நூல் இது.
நூலின் தலைப்பே
வித்தியாசமாக அமைந்திருப்பதை நம்மை கவர்கிறது. இண்ட முள் என்பதன் விளக்கத்தை அட்டையிலேயே
தந்திருக்கிறார் எழுத்தாளர் அரசன். தான் படர்ந்திருக்கும் பரப்பினை கடக்கும் எவரையும்
கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது இண்ட முள். அதே போல இண்ட முள்ளு கதையை
வாசிக்கின்ற மனிதனின் மனதை கொத்தாய் பிடித்திழுக்கும் இயல்பில் படர்ந்துள்ளது என்று
நம்பிக்கையோடு கூறும் அரசனின் வார்த்தைகள் பொய்க்கவில்லை
.
ஒன்பது அழுத்தமான சிறுகதைகளை தொகுப்பாக்கி நமது
மனசில் அந்த கதை மாந்தர்களை சுமக்க வைத்து அழுத்தமாக பதிய வைத்துள்ளார் அரசன். ஒவ்வொரு
கதையும் அவர் பிறந்து வளர்ந்த உகந்த நாயகன் குடிக்காடு கிராமத்தையும் அதன் மண்ணின்
மைந்தர்களையும் கண் முன்னே நிறுத்துகிறது.
இயல்பான மனிதர்கள், அவர்களின் இயல்பான பேச்சுவழக்கு,
பாரம்பரியங்கள், உழவு முறை, கிராமத்தில் இன்னும் மறையாமல் இருக்கும் பாரம்பரியமான நடைமுறைகள்
ஆகியவை நகரத்து மனிதர்களுக்கு வியப்பு தந்தாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போது
பிழைப்புக்காக நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்து வாசியையும் மண்வாசனையை உணர்ந்து ரசிப்பார்கள்.
வெள்ளாமை என்ற கதையில் கிராமங்களில் எப்படி
உழவு செய்யப்படுகின்றது என்பதை கண்முன்னே நிறுத்துகின்றார். இன்று விவசாயத்திலும் நவீனகருவிகள்
வந்துவிட்ட போதும் உழவு செய்வது பயிர் அறுவடை மெனை பிரித்து தாள் அறுப்பது, தூற்றுவது
போன்றவற்றை அவர் விவரிக்கும் பாங்கு அற்புதம்.
முதல் கதையான பெருஞ்சொம
படித்து முடித்தவர்கள் மனதிலும் பெரும்சொம தாங்கி நிற்கும். சில கிராமங்களில் ஏதோவொரு
பெண் யார் பேச்சுக்கும் அடங்காமல் திமிர்க்காரியாக சித்தரிக்கப் படுவாள். அப்படி நடந்தும்
கொள்வாள். ஆனால் அவள் மனது யாருக்கு புரியும்? சாந்தி கதை அதை சிறப்பாக சொல்கிறது.
கெடாவெட்டி, காயடிப்பு, போன்ற கதைகளின் கதை மாந்தர்கள்
நம் கண் முன்னே வந்து போவார்கள். தெற்கத்திய கிராமங்களில் இன்னும் இது போன்ற மாந்தர்கள்
வசித்து வருவதை கண்கூடாக காணலாம். தாய் மடி, தாய்ப்பாசத்தின் அருமையை உணர்த்த நலுவன்
பண்ணையாருக்கு அடிமைப்பட்ட ஒருவன் வீறுகொண்டு எழுவதை அருமையாக சொல்கிறது. எதிர்காத்து
குறும்பட போட்டியில் பரிசுபெற்ற சிறப்பானதொரு கதை.
நவரத்தினங்களாய் ஜொலிக்கும் ஒன்பது கதைகள்! அரசன்
தம்முடைய ஊர் பாஷையில் அருமையாக சித்தரித்துள்ளார். தம் தாயின் பெயரில் பதிப்பகம் தொடங்கி இந்த புத்தகத்தை
பதிப்பித்து பெருமை படுத்தியுள்ள அவரின் தாய்ப்பாசம் போற்றத் தக்கது.
புத்தகத்தின் அட்டையும் வடிவமைப்பும் அழகுற அமைந்துள்ளது.
160 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ 100.
வெளியீடு: வளர்மதி
பதிப்பகம், 3/214 உகந்தநாயகன் குடிக்காடு, செந்துறை தாலுக்கா, அரியலூர் மாவட்டம்.
புத்தகம் கிடைக்கும்
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே.கே நகர் மேற்கு. சென்னை 78
விளக்கமான பகிர்வு. நல்லதொரு அலசல்.
ReplyDeleteநல்லதோர் நூல் விமர்சனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் அரசன் அவர்களுக்கு வாழ்த்துகள் அழகிய விமர்சனம் நன்று நண்பரே
ReplyDeleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி நண்பரே
உங்கள் நூல் வாசிக்கும் ஆர்வத்திற்கும் அதைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான நூல் மதிப்புரைக்கு நன்றி.
ReplyDeleteநல்லதொரு நூல் விமர்சனம்
ReplyDeleteவணக்கம் அண்ணா ...
ReplyDeleteஒவ்வொரு கதையினையும் பொறுமையாக வாசித்து எழுதிய உங்களுக்கு அன்பும் நன்றிகளும் அண்ணா ... இதுபோன்ற ஊக்கங்கள் தான் இன்னும் இன்னும் முயல உந்திக்கொண்டிருக்கும் பிடிமானங்கள் ... நெஞ்சம் நிறை நன்றிகள் ....
நால்லதொரு நூல் விமர்சனம்.
ReplyDeleteபுத்தகத்தின் அட்டையும் வடிவமைப்பும் அழகுற அமைந்துள்ளது /// உற்சாகம் தந்த வார்த்தைகளுக்கு ஸ்பெஷல் நன்றி சுரேஷ்.
ReplyDeleteஉங்கள் மூலமே இவரைத் தெரிந்து கொண்டேன். விமரிசனத்திற்கு நன்றி.
ReplyDelete