தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
கொதிக்கும் வெயில்
குளித்துக் கொண்டிருந்தது
மரம்!
ஏரி நீரில் நிழல்!
ஒளிந்த பசுமை
மீட்டுக் கொடுத்தது
மழை!
யாருமில்லா அறை
படபடத்துக் கொண்டிருந்தது!
காற்றில் புத்தகம்!
சுற்றி சுற்றி
வந்தது
வெளியேற வழி இல்லை!
கடிகார முள்!
தாகம் தீர்ந்ததும்
வேகமாய் முடிந்தது
வாழ்க்கை!
விளக்குத்திரி!
பழையன கலைந்ததும்
பசுமையானது மரம்!
உதிரும் சருகுகள்!
இளைத்துக் கொண்டே
போகிறது
இளைப்பாறவில்லை!
நாட்காட்டி!
இடம் கொடுத்ததும்
மடத்தை பிடுங்கியது
மரத்தில் கொடி!
ஓர் புன்னகை காண
கோடி பேர் தவம்
மூன்றாம் பிறை!
நெருப்பு அணைந்ததும்
கரியானது பூமி!
இருள்!!
கன்று போட்டது
மாடு!
பசியாறியது
பால்காரன் குடும்பம்!
சாய்ந்த பொழுது
நிமிர்ந்து நின்றன
குவளை மலர்கள்!
தெளிந்த நீர்!
கலக்கி பசியாறியது
வாத்துக்கள்!
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுகின்றன
எறும்புகள்!
திண்பண்டம்!
பத்திரப்படுத்தினாலும்
தொலைத்துவிடுகின்றன குழந்தைகள்!
கோபம்!
பருக்கைச் சோறு ஊட்டுகையில்
நிறைந்து போகிறது தாயின் வயிறு!
குழந்தை!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅனைத்தும் அருமை ... http://ethilumpudhumai.blogspot.in
ReplyDeleteபருக்கைச் சோறு ஊட்டுகையில்
ReplyDeleteநிறைந்து போகிறது தாயின் வயிறு!
குழந்தை!
அருமை அருமை
கவிதைகளை ரசித்தேன். நன்றி.
ReplyDeleteஅருமை சகோ
ReplyDeleteமிகவும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைத்தும் அருமை. குறிப்பாக இருள், மூன்றாம் பிறை.
ReplyDeleteஇத்தனை போட்டால் எதைத் தான் பாராட்டுவது என்று தெரியவில்லை. அத்தனையும் அருமை.
ReplyDeleteகுறிப்பாக ஒன்றும், நான்கும். ஏரியில் நிழலும், வெளியேற வழியில்லாத கடிகார முள்ளும் ஓகோ ரகம். கடிகார முள் கடிகாரத்திற்கென்றே படைக்கப்பட்ட ஒன்று. இரண்டும் ஒன்றைச் சார்ந்து ஒன்று இருப்பவை. அதாவது இவற்றில் எது ஒன்று இல்லாவிட்டாலும் இரண்டும் இல்லை என்று ஆகிப் போகும்.
எல்லாம் மிக அருமை.. எப்படிதான் இப்படி எல்லாம் உங்களால் அழகாக சிந்திக்க முடிகிறதோ......பொறாமைதான் வருகிறது
ReplyDeleteமூன்றாம் பிறையும், பருக்கைச் சோறும் உண்மையிலேயே அற்புதமான கவிதை! யதார்த்தமும் கூட! ஏரியில் நிழலும் அப்படித் தான்!
ReplyDeleteஅருமை அருமை! சுரேஷ். பாராட்டுகள்
ReplyDeleteசிறப்பு...
ReplyDelete