Youtube வீடியோக்களை நமது தளத்தில் பதிவேற்றம் செய்வது எப்படி?
Youtube வீடியோக்களை நமது தளத்தில் பதிவேற்றம் செய்வது
எப்படி?
அன்பார்ந்த வாசகர்களே!
நான் இதுவரை எந்த தொழில்நுட்ப பதிவும் எழுதியது இல்லை. நண்பர்கள் உதவியோடு சில தொழில்நுட்பங்கள்
அறிந்து அதை என் தளத்தில் பயன்படுத்தி வருகின்றேன். வலைப்பூவில் சில பதிவர்கள் வீடியோக்களை
பதிவு செய்கின்றார்கள். பெரும்பாலும் youtube தளத்தில் இருந்துதான் வீடியோக்களை பகிர்கின்றார்கள்.
இதே போல எல்லோருக்கும் பகிர ஆசை இருக்கும். ஆனால் முடிவது இல்லை.
இன்னும் சிலருக்கு you tube தளத்து வீடியோக்களை தனது கணிணியில் சேமித்து
வைத்துக் கொள்ள ஆசை இருக்கும்.ஆனால் எப்படி சேமித்து வைப்பது என்று தெரியாமல் விழித்து
கொண்டிருப்பார்கள். இப்படி நமது ஆசைகளை நிறைவேற்றவே ஒரு மென்பொருள் இணையத்தில் உள்ளது.
அதுதான் youtube downloader HD என்னும் மென்பொருள்.
Youtube downloader HD யை தரவிறக்கம் செய்ய இங்கு
செல்ல வேண்டும். youtube Downloader
அங்கு சென்றவுடன் இந்த மாதிரி தளம் ஓப்பன் ஆகும்
தளத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் இடத்தில் சுட்டியை அழுத்தினால் தரவிறக்க தளம் ஓப்பன் ஆகும். அங்கு
சென்று சுட்டியை அழுத்தினால் தரவிறக்கம் ஆகும்.
தறவிறக்கம் செய்தவுடன் வீடியோ மாதிரியான சுட்டி
ஒன்று உங்களது டவுன்லோடர் போல்டரில் இருக்கும் அதை டபுள் கிளிக் செய்தால் இப்படி கேட்கும்.
அதில் ரன் என்னும் இடத்தில் கிளிக் செய்து அது காட்டும் வழிகாட்டுதல் படி செய்து வர கணிணியில் இன்ஸ்டால் ஆகும்.
கணிணியில் இப்போது யு டியுப் டவுண்லோடர் நிறுவி
ஆகிவிட்டது. டெஸ்க் டாபில் அதன் ஐகான் இருக்கும்.
இப்போது நாம் யு டியுப் தளம் சென்று நமக்கு தேவையான வீடியோவை செலக்ட் செய்து
ஓட விட வேண்டும்.
பின்னர் யு டியுப் டவுண்லோடரை கிளிக் செய்தால் இப்படி
ஓப்பன் ஆகும்.
Video url என்று கேட்டுள்ள இடத்தில் நாம் பார்க்கும் வீடியோவின்
முகவரியை அட்ரஸ் பாரில் செலக்ட் செய்து காப்பி- பேஸ்ட் செய்ய வேண்டும்
பின்னர் download
என்பதை கிளிக் செய்தால் வீடியோ டவுண்லோட் ஆகத்தொடங்கும். டவுண்லோட் ஆன வீடியோ நமது
கணினியில் டவுண்லோட் போல்டரில் இருக்கும்.
இனி வலைப்பூவில்
அதை எப்படி பதிவேற்றம் செய்வது.
உங்கள் வலைப்பூவை
திறந்து creat a new post என்பதை க்ளிக் செய்தவுடன்
பேஜ் ஓபன் ஆகும் இன்செர்ட் போட்டோ விற்கு அருகில்
இருக்கும் இன்செர்ட் வீடியோவை கிளிக்கினால் add video என்று ஓர் போல்டர் ஓப்பன் ஆகும்
அதில் choose a video to up load என்பதை கிளிக்கி டவுன் லோட் போல்டருக்கு சென்று அதில் நீங்கள் சேவ்
செய்துள்ள வீடியோவை டபுள் கிளிக் செய்தால் வீடியோ அப் லோட் ஆகிவிடும்.
பின்னர் நீங்கள் பதிவில் சேர்க்க வேண்டியதை சேர்த்து
பிரிவியு பார்த்து வழக்கம் போல வெளியிட வேண்டியதுதான்.
பிரைவேட் வீடியோக்களை இந்த டவுண் லோடரில் டவுண்லோட்
செய்ய முடியாது. மற்ற வீடியோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
முதல் முறையாக ஒரு தொழில் நுட்ப பதிவை முயற்சி செய்து பார்த்துள்ளேன். ஸ்கீரின் ஷாட் எடுப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். முதல் முயற்சி இது. ஓரளவு கணிணி பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். முயற்சியோடு பயிற்சியும் இருப்பின் எளிதில் எதிலும் வெற்றி காணலாம். முயற்சித்து பாருங்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
பயனுள்ள பதிவு நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
இந்த தொழில் நுட்பம் அறியாதவர்களுக்கு எளிமையான பயனுள்ள பதிவு. தொடர்ந்து உங்கள் தொழில்நுட்ப அனுபவங்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்று தான் பெற்ற பயனை பிறருக்கு சொல்வது சிறப்பு.வாழ்த்துகள்
ReplyDeletecontinue your good job
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே நன்றி
ReplyDeleteஇம்முறையினை விரைவில் முயற்சி செய்து பார்ப்பேன். நன்றி.
ReplyDeleteநானும் YTD வைத்திருக்கிறேன். ஆனால் வீடியோ இப்போதெல்லாம் நிறைய சேமித்துக் கொள்வதில்லை. இடத்துக்குப் பிடித்த கேடு! ப்ளாக்கில் வீடியோ சேர்க்க யூ டியூப் தளத்தில் உள்ள வீடியோவின் கீழே share என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால் embed என்று இருக்கும் அதையும் க்ளிக் செய்தால் அது நீல நிறத்தில் காட்டும் லின்க்கை காபி செய்து நம் தளத்தில் ஒட்டினால் போதும். இதுதான் நான் செய்வது!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதரவிறக்கம் செய்து கொள்ளாமலேயே ஸ்ரீராம் சொல்வது போலவும் செய்து கொள்ளலாம். பலரும் பயன்படுத்துவது இம்முறை தான்.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு. பாராட்டுகள்.
நல்ல பயனுள்ள பதிவு சார்.
ReplyDeleteயூ-டியூபிலேயே share என்ற ஆப்ஷன் உள்ளது, அதை சொடுக்கினால் ஒரு லிங்க் தருவான் அதை எடுத்து நமது தளத்தில் பேஸ்டு செய்தால் வீடியோ share ஆகிவிடும். ஒரே ஒரு குறை, அந்த வீடியோவை அப்லோடு செய்தவர் நீக்கி விட்டால் நமது தளத்தில் உள்ள லிங்க் வேலை செய்யாது!!
ReplyDelete