நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 10
நொடிக்கதைகள் பகுதி
10
காற்றுப்போன பலூன்!
அப்பா! எனக்கும்
ஒரு பலூன் தர்றியா? கேட்ட மகனிடம் இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கலே போயிட்டு அப்புறம்
வா! என்றான் பலூன் வியாபாரி. காற்றுப் போன பலூனாக மாறியது மகனின் முகம்.
ஹாஸ்டல்!
நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சா மாதிரிதான் நீங்க இங்க
தங்க போறதும் வருத்தப் படாதீங்க! என்றான் முதியோர் இல்லத்தில் தந்தையை சேர்த்த அந்த
மகன்.
ஸ்கூல்!
இந்த மாதிரி பெரிய ஸ்கூல்ல எல்லாம் நுழைய முடியுமான்னு
நினைச்சேன்! எப்படியோ கடவுள் என் ஆசையை பூர்த்தி செய்துட்டான் என்று அந்த மெட்ரிகுலேஷன்
பள்ளியில் நுழைந்த விமலா ஸ்விப்பராய் தன் பணியைத்
தொடங்கினாள்.
வேர்!
மாமியாரோடு
ஒர் நாள் சீரியல் பார்த்த மருமகளிடம் வேர் பிடித்தது அந்த எண்ணம். “ இதை பார்த்துதான்
எல்லாரும் டார்ச்சர் பண்றாங்களா? அப்ப நாமும் ட்ரெயில் பார்த்துட வேண்டியதுதான்!
ஷேர்!
பேஸ் புக்கில் தனக்கு வந்த பல தகவல்களை நண்பர்கள்
பலருக்கும் ஷேர் செய்து கொண்டிருந்தார் தம்பிக்கு
சொத்தில் சல்லிக் காசு கூட தரமுடியாது என்று துரத்தி அடித்த துஷ்யந்தன்.
போராளிகள்!
“இன்னைக்கு சிக்கிருச்சு! இதை வைச்சே இன்னிக்கு
பொழுதை ஓட்டிரலாம்!
என்னதுடா?
மயக்க ஊசி போட்டு
பிடிச்ச யானை செத்து போச்சாம்! இதை பேஸ் புக்லேயும் டிவிட்டர்லயும் பதிவா போட்டு பொங்கி
எழுந்தோம்னா ஆயிரம் லைக்ஸ் வாங்கிரலாம்டா!
யானை செத்து போன வருத்தத்தை விட லைக்ஸ் வாங்கப்போகும் சந்தோஷத்தில் குதித்தனர்
அந்த பேஸ் புக் போராளிகள்!
வியாபாரம்!
என்னது
700 அடி தோண்டியும் தண்ணி வரலையா? “ஊகும்! ஒரு சொட்டுத் தண்ணிக் கூட வரலை!
ரொம்ப நல்லதா போச்சு! அந்த ஏரியாவுல நம்ம வியாபாரம்
நல்லா போவும் இன்னைக்கே ஆரம்பிச்சிர வேண்டியதுதான் என்றனர் அந்த தண்ணீர் வியாபாரிகள்.
மூளை!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை
தானம் செய்து விட்டு வந்த அவரை எல்லோரும் சூழ்ந்து கொண்டு உங்களுக்கு கொஞ்சமாவது மூளை
இருக்கா? என்ற போது அது இருந்திருந்தா அவன் கேட்ட ரேஸ் பைக் வாங்கி தந்திருக்க மாட்டேன்!
என்றார்.
சண்டே!
கல்யாணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப் பிரவேசம்
எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சண்டே வாக வைத்துக் கொண்ட பிரகாசம் ஒரு நாள் ஒர்க்கிங்
டேயில் திடீரென்று இறந்து போனார்.
ரூல்ஸ் ப்ரேக்!
நெரிசல் அற்ற சாலையில்
ஒளிர்ந்த சிவப்பு விளக்கை அலட்சியம் செய்து கடந்தேன். வண்டியின் பின்னே அமர்ந்திருந்த
மகன் கேட்டான். யாரும் பார்க்கலைன்னா ரூல்ஸை நாமே ப்ரேக் பண்ணிடலாம்னு ரூல்ஸ் இருக்காப்பா?
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமை நண்பரே
ReplyDeleteஅட்டகாசமான கதைகள் சகோ...வாழ்த்துகள், பாராட்டுகள்.
ReplyDeleteஅனைத்தும்அருமை. தண்ணீர் வியாபாரம் மிக அருமை.
ReplyDeleteநொடிக்கதைகள் என்பதற்கு பதிலாக "சிரிக்கலாம் சிந்திக்கலாம்" என்ற தலைப்பு கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்.
ReplyDeleteJayakumar
போராளிகள், ரூல்ஸ் ப்ரேக் இரண்டும் அருமை!
ReplyDeleteஅனைத்தும் கருத்துள்ளவையே நண்பரே
ReplyDeleteசின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து எழுதுவது ரசிக்க வைக்கிறது வாழ்த்துகள்
ReplyDeleteஅனைத்துக்கதைகளும் அருமையான சிந்தனைவடிவம்.
ReplyDeleteஅனைத்துமே அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅனைத்தும் அருமை சுரேஷ்.
ReplyDeleteகீதா: செம! ப்ரேக் (சாலை விதிகள்), வியாபாரம் (நான் தண்ணீர் என்று எழுதியிருந்தேன்), மூளை இந்த மூன்றும் கிட்டத்தட்ட இதே போன்று வைத்திருக்கின்றேன். ஏனோ ஒரு தயக்கம் பதிவிட.
நீங்கள் மிக மிக அழகாக எழுதுகின்றீர்கள் சுரேஷ் வாழ்த்துகள்! பாராட்டுகள்