தளிர் சென்ரியூ கவிதைகள்!

தளிர் சென்ரியூ கவிதைகள்!

படிக்காத மந்திரி
முதல்வரிசையில் அமர்ந்தார்
சட்டசபையில்!

சுற்றி வளைத்துப் பேசினார்கள்
விற்றுப்போனது
விளைநிலம்!

பாரத்தை குறைத்து  அனுப்புகிறார்
காலடியில் கொட்டுகிறது தலைக்கனம்!
முடிதிருத்துநர்.

பருவம் தப்பிய மழை!
படையெடுத்து வந்தன
நோய்கள்!

கடவுளை சுட்டது கற்பூரம்
கிடைக்கவில்லை வரம்
பள்ளிக்கு பிடித்தது சாபம்!

கடைகளை மூடினார்கள்
அதிகரித்தது அடுத்த கடையின் இலக்கு!
டாஸ்மாக்!

குறுகிப் போன சாலைகளில்
பெருகி வருகின்றது
வியாபாரம்!

உயர்ந்த பாலங்களின் கீழே
ஒடுங்கிக் கிடக்கின்றது
சாமானியன் வாழ்க்கை!

  தக்க இடம் கிடைக்கவில்லை!
  மக்கள் பிரச்சனைகள் மறந்தன
  எதிர்கட்சிகள்!

  வீழ்ச்சி அடைந்தது விளைச்சல்
  உச்சத்தைத் தொட்டது விலை!
  தக்காளி!

  அடைபட்டு கிடந்த மக்கள்
  ஆசுவாசப்படுத்தியது கடல்காற்று!
   மெரினா!

   நெகிழியில் அடைபட்ட பொருட்கள்
   நெஞ்சுவலியில் சிக்கியது
   பூமி!

   இயந்திரங்கள் புகுந்ததும்
   வெளியேறின மனித ஆற்றல்!
   விவசாயம்!

   எவ்வளவு வெடித்தும்
  எழுந்திருக்க மறுத்தது
  எழவு வீட்டில் பிணம்!

  துட்டு போட்டதும்
  எட்டு போட்டதாக கொடுத்தார்கள்
  ஓட்டுநர் உரிமம்!

  உறிஞ்சி உறிஞ்சியே
  உயிர் இழக்கின்றன
  டீக்கடையில் செய்தித் தாள்கள்!

   பட்டிக்காடான கிராமத்தில்
   பகட்டாய் உருவானது நகர்
   ரியல் எஸ்டேட்!

   உதைத்து உதைத்து
   அள்ளுகின்றார்கள் கோடி!
   கால்பந்து!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
  

  

Comments

  1. சிலவற்றில் நறுக்
    பவற்றிலது மிஸ்ஸிங்..
    சென்ரியூ!

    ReplyDelete
  2. அருமை ...http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  3. துட்டு போட்டதும்
    எட்டு போட்டதாக கொடுத்தார்கள்
    ஓட்டுநர் உரிமம்!

    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  4. அனைத்தையும் ரசித்தேன். கொட்டும் தலைக்கனத்தை சற்றே அதிகமாக.

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை சார்.

    ReplyDelete
  6. தக்காளி இப்போது விலை இறங்கி விட்டதே. இன்று ஒரு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கி வந்தார். பொதுவாக எண்ணெய் விலைகள் எல்லாமே குறைவாகத் தான் இருக்கின்றன. வெங்காயம் பெரியது 25 ரூபாய்க்கு நல்ல தரமானதும், 20 ரூபாய்க்கூ சுமாரானதும் கிடைக்கிறது. சின்ன வெங்காயம் தான் 45 ரூ, 50 ரூ விற்கிறது, இதுவே பண்ணைப் பசுமைக்கடை எனில் 5 ரூயிலிருந்து 10 ரூ குறைவாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  7. அனைத்துமே அருமை.....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  8. அருமை சுரேஷ் அனைத்தும் பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2