தளிர் ஹைக்கூ கவிதைகள்!

    தளிர் ஹைக்கூ கவிதைகள்!


    குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது
    குளத்தில் இறங்கிய
    நிலா!

    மேகம் மூடிய வானம்!
    சோபை இழந்தது
    பூமி!

   அழுக்கினை விரட்ட
   உயிரை விட்டது
   சோப்பு!

   பூத்துக் கொட்டியது
   பறிக்க ஆளில்லை!
   நட்சத்திரங்கள்!

  வெட்டுபட்டாலும்
  கட்டு போட்டதும்
  வரவேற்றது வாழை!

 வெளிச்சத்தை நாடியதும்
 மிச்சத்தை இழந்தன
 பூச்சிகள்!

 நாசியைத் துளைத்தது
 மண்வாசம்.
 தூறல் மழை!


மறையும் ஒளி!
மயக்கத்தில் ஆழ்ந்தது
பூமி!

செம்பழத்தை சிறிதுசிறிதாய்
விழுங்கியது மலை
மாலைச்சூரியன்!

கடத்தி வருகின்றான்
பிடித்தால் விட மறுக்கின்றான்!
மின்சாரம்!

மூட்டை சுமக்கும் தாத்தா
முகத்தில் பரவுகிறது மகிழ்ச்சி!
உப்பு மூட்டை!

 வருத்தவில்லை சுமை
 உருத்தவில்லை பாரம்
 உப்புமூட்டை!


உடைகின்ற பேச்சினால்
சேர்த்துவைக்கிறது உறவை
குழந்தைகள்!

புதைந்து கிடக்கும்
கற்பனை சுரங்கங்கள்!
குழந்தைகள்!

இருள் கவ்வுகையில்
ஓலம் எழுப்பியது பூமி!
சில்வண்டுகள்!

மூச்சிறைக்காமல் ஓடியும்
மூன்றடி கூட நகரவில்லை!
மின்விசிறி!


வீழ்ந்தாலும்
வாழ வைத்தது
அருவி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அனைத்துமே அருமை.... பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்தேன் மூன்றாவது சோப்பு அருமை வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  3. அனைத்துமே அருமை சுரேஷ் பாராட்டுகள்

    ReplyDelete
  4. எதை முதலில் சொல்ல... எல்லாம் பிரமாதம்.

    ReplyDelete
  5. சுரேஷ்,

    ஒவ்வொன்றும் சிறப்பு.

    குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது
    குளத்தில் இறங்கிய
    நிலா! அடடா..... கற்பனை அபாரம்.

    குளிர் நிலா குள(த்து) போர்வை போர்த்திக்கொண்டதாகவும் சொல்லலாமோ?

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  6. அருமை
    அருமை
    அனைத்தும் அருமை

    ReplyDelete
  7. அருமையான கற்பனை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2