மனு(ஷ) நீதி!

மனு(ஷ) நீதி!

‘நாளைக்கு நம்ம குறைகளை கேட்க அதிகாரிங்க வரப்போறாங்க! யார் யாருக்கு என்ன குறைன்னுஎழுதிக் கொடுக்கலாம் அவங்க குறைகள தீர்த்து வைப்பாங்க” என்று தலைவர் கூறை முடிக்க குழுமியிருந்த மக்கள் கூட்டம் முணுமுணுத்தது.
   “இது ஒன்னுதான் நம்ம ஊருக்கு கொறச்சல்”. மனு நீதி நாளாம்!. மனுவை வாங்கி குப்பை தொட்டியில போட்டுட்டு போயிடுவானுங்க இத மாதிரி எத்தனையோ நாள பாத்தாச்சி
பெரிசா என்னத்த வெட்டி முறிச்சிட போறானுவ என்று சலசலத்தபடி கலைந்தது கூட்டம்.
    “ஏல முனியம்மா! மேய்ச்சலுக்குப் போன கடாக்குட்டி வந்துடிச்சாடி?”
‘கொட்டகையில கட்டி போட்டுருக்கேன் மச்சான் எதுக்கு கேக்குறீங்க?’
“நாளைக்கு நம்ம ஊருக்கு அதிகாரிங்க வரப்போறாங்களாம் அவங்களுக்கு கறிச்சோறுக்கு நம்ம ‘கடா’ தான்.
 கொட்டகையிலிருந்த தாய் ஆடு பதறியது. ‘இதற்காகவா நம்மை மனுஷர்கள் வளர்க்கிறார்கள்?’. இந்த குட்டிகளை கஷ்டப்பட்டு ஈன்றது நாம். பாலூட்டி வளர்த்த நான் அதை பறி கொடுத்து நிற்கவா ஈன்றேன்.
          ஊரில் திருவிழா என்றாலும் விசேஷம் என்றாலும்தான் பலியிடுவார்கள். ஆனால் நாளைக்கு எதற்கு? ஆட்டின் கேள்விக்கு முனியன் பதில் கூறிக்கொண்டிருந்தான்.
“அதென்னமோ மனுநீதி நாளாம்!,அதிகாரிங்க நம்ம சனங்க கிட்ட குறைகேட்டு வராங்களாம்! அவங்க சாப்பாட்டுக்குத்தான் நம்ம ஆட்ட பிரசிடெண்ட் கேட்டாரு அதிகாரிங்க கட்டாயம் கறிச்சோறு வேணுமின்னு சொல்லிட்டாங்களாம். 
  ' ஏய் மச்சான் உனக்கு அறிவிருக்கா? பாவம் இன்னும் பால்குடி மாறாத குட்டிங்க! இதை போய் வெட்டக் கொடுக்கிறதா சொல்லிட்டு வந்திருக்கே?
        “இள ஆடுதான் வேணும்னு தலைவர் வந்து கேக்கும்போது மறுக்க முடியுமா? நாளைக்கு நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர்கிட்டதானே போய் நிக்கணும் சுளையா ஆயிரம் ரூபா நோட்டு வேற தர்றேன்னு சொல்லியிருக்காரு!”
            “அதுவும் சரிதான்! ஆனா பாவம் தாய்க்குட்டிதான் தவிச்சு போவும்!”
     “அதை பார்த்தா எதுவும் நடக்காது! நாளைக்கு விடியலிலே குட்டிகளை ஒட்டிப் போய் தலைவர்கிட்ட கொடுத்துர வேண்டியதுதான்!”

“அடப் பாவிங்களா! மனு என்னும் மன்னன் தன் மகனென்றும் பாராமல் மகன் அறியாமல் செய்த தவறுக்கு தேரில் ஏற்றி கொன்றான். ஆனால் இவர்களோ? நீதி கிடைக்க செய்கிறேன் என்று எங்களை கொன்று உண்கிறார்களே? இறைவனின் படைப்புக்களான எங்களை அழிக்க இறைவனுக்கே உரிமை!. இவர்களுக்கு ஏது உரிமை? அத்து மீறி எங்களை அழிக்கும் இவர்களைப் பற்றி எங்கு சென்று முறையிடுவது? யாரிடம் நீதி கேட்பது? மனு நீதி என்று மக்களை ஏமாற்றும் இவர்களிடமா?” ஆடு கண்ணிர் வடித்தது.
        மறுநாள் மனுநீதி கேட்ட மனுஷர்கள் மகா சந்தோஷமாய் கறிச்சோறு உண்டு கொடிருந்த போது ஆடு பாவம் தன் குட்டியை இழந்த சோகத்தில் தழை கூட உண்ணாமல் தளர்ந்து கிடந்தது.
  அது நினைத்தது இது மனு நீதி அல்ல மனுஷநீதி. இதை மனிதர்கள் அவர்களுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள் என்று.

தங்கள் வருகைக்கு நன்றி! கதை பற்றிய கருத்துக்களை பதியலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

(மீள்பதிவு)

Comments

 1. அருமையாக இன்றைய மனிதர்களின் நீதியை பிரதிபலித்து காட்டினீர்கள் நண்பரே..

  ReplyDelete
 2. மனிதன் தன்னை 'ஆறறிவு 'என்று பெருமை பேசிக் கொல்கிறானே:)

  ReplyDelete
 3. சிந்திக்கச் செய்யும் கதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சிறப்பான கதை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மனம் வேதனை அடைந்துவிட்டது சுரேஷ்! இதைப் படித்து. கடா என்று கோயில்களில் பலியிடுவது உட்பட....இன்னும் சொல்ல முடியும்..

  கீதா

  ReplyDelete
 6. நல்ல எண்ண ஓட்டம். நானும் நாயின் பார்வையில் 'இந்த மனுஷங்க சுத்த மோசம் ' என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். எனவே ரசிக்க முடிந்தது.

  ReplyDelete
 7. நல்ல எண்ண ஓட்டம். ஒரு ஆட்டின் பார்வையில் பார்த்திருப்பது நன்றாக இருந்தது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!